Category: உலகம்
-
இன்ன பிற – சர்வம் ஏ.ஐ மயம்
2021 ஆகஸ்ட் மாதம் ஒரு நாள் ஓப்பன் ஏ.ஐ. என்ற வலைதளத்தில் GPT 3.0 என்று ஒன்றைப் பற்றி படித்தபோது, கொஞ்சம் புரிந்த மாதிரி இருந்தது; இது தான் வருங்காலம். அப்போதைக்கு அந்த வலைதளத்தில், குட்டியாக ஒரு டப்பாவில் “ஐநூறு வார்த்தைகளுக்கு மிகாமல் சென்னை வெப்பத்தைப் பற்றி எழுதவும்” என்றால், மடமடவென்று எதையோ கிறுக்கித் தள்ளிவிடும் அளவுக்குத்தான் இருந்தது ஜெனரேடிவ் ஏ.ஐ. அப்போதே அதைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பிறகு நவம்பர் 2022ல்…
-
இவ்வாண்டின் தலைப்புச் செய்தி
இந்த வருடத்தில் நடக்கப்போகும் ஒரே ஒரு முக்கிய செய்தியை இவ்வருடத்தின் தலைப்புச் செய்தி என்றால் அது என்னவாக இருக்கலாம் என்று யோசித்துப் பார்க்கத் தேவையேயில்லை. அது போன வருடத்தின் தலைப்புச் செய்தியாகத் தான் இருக்கப் போகிறது. போன வருடத்தின் தலைப்புச் செய்தி தான் என்ன? 2023ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மனித வரலாற்றில் மிகவும் உஷ்ணமான ஆண்டு. (படிக்க) “The extraordinary global November temperatures, including two days warmer than 2ºC above preindustrial,…
-
இயந்திரா 5 – அங்கிங்கெனாதபடி
இது செயற்கை நுண்ணறிவு (அதாவது சுருக்கமாக AI) மென்பொருள்களின் காலமிது என்பதை உங்கள் வீட்டுச் செல்ல பூனைக்குட்டி கூடச் சொல்லும். அந்த அளவுக்கு ChatGPT போன்ற மென்பொருள்கள் பெருகி அடுத்த கமல் படத்தை அவருக்குத் தெரியாமலே எடுத்து விடக்கூடிய அபாயம் வரை வந்துவிட்டது. இருக்கிற பிக்பாஸ் மும்முரத்தில் அவரும் அதை வரவேற்கலாம். இந்த வளர்ச்சி கணினி யுகத்தில் ஒரு அடுத்தகட்ட பாய்ச்சல். கடந்த எண்பதாண்டுகளில் நடந்த பல்வேறு கணினியுக பாய்ச்சல்கள் இவ்விவை – தற்போது நாம் பிரவேசித்துக்…
-
நடுநிசி நகக்கடி
ஆஸ்திரேலியா ஓப்பனை சனிக்கிழமை கண்விழித்துப் பார்த்தது வீணாகவில்லை. ராஃபா நடாலும் மேட்வடெவ்வும் ஆடிய ஆண்கள் இறுதிப் போட்டி, ஏறக்குறைய ஆறு மணி நேரத்திற்குப் பிறகு நகக்கடியாக முடிந்தது. தன்னை விளையாட விடாததினால் ஜோகோவிச் கோவிச்சுக் கொண்டாலும் இப்பொழுது நிலவும் தொற்று சூழ்நிலைக்குச் சரியே என்று தோன்றியது. ஜோகோ இருந்திருந்தால் இந்தப் போட்டி வேறு மாதிரி இருந்திருக்கும். ராஃபாவிற்கு ஆஸ்.ஓப்பன் கைக்கு எட்டாமலேயே இருந்தது. இதை வென்றால் 21வது கிராண்ட் ஸ்லாம் என்ற உலக சாதனை, எதிரில் மேட்வடெவ்…