Category: மற்றவை
-
நியூயார்க்கர் கார்ட்டுன் வாசகம் #429
ஒவ்வொரு வாரமும் நியூயார்க்கர் பத்திரிக்கை ஒரு கார்ட்டுனுக்கு வாசகர்களின் வாசகங்களை ஏற்றுக்கொள்கின்றது. நியூயார்க்கரின் கார்ட்டூன்களுக்கு ஒரு நூறு வருட பாரம்பரியம் இருக்கிறது. அதற்கேற்றார் போல் இந்த மாதிரி கார்ட்டுன் வாசகம் எழுதுவதற்க்கும் ஒரு எழுதப்படாத இலக்கண விதி இருக்கிறது. கடந்த ஒரு வருடமாக வாரா வாரம் நானும் வாசகம் எழுதிக் கொண்டிருக்கிறேன், கொஞ்சம் பிடிபட்ட மாதிரி தோன்றுகிறது. நியூயார்க்கரில் தான் எழுதுவதை பிரசுரிக்க மாட்டேன் என்கிறார்கள், நானும் விக்கிரமாதித்தனாய் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இங்கேயாவது அதை போட்டு வைக்கலாம்…
-
கிறுக்கல் 3.0
ஒரு வழியாக சுப்புடு.காமிலிருந்து பழைய டெம்ப்ளேட் உள்பட எல்லாவற்றையும் காலி செய்து கொண்டு மீண்டும் பழைய வீட்டிற்கு ஜாகை மாறியாகி விட்டது. சமூகசேவையாக லேசிகீக்.நெட்டில் எழுதிய குப்பைகள் அத்தனையும் பத்திரமாக இங்கேயே நகர்த்தியாகிவிட்டது. ஆக, மீண்டும் எழுதத் தொடங்க வேண்டியது தான் பாக்கி. பழைய பதிவு – கிறுக்கல் 2.0