Category: நியூயார்க்கர்
-
நியூயார்க்கர் கார்ட்டுன் வாசகம் #885
ஒவ்வொரு வாரமும் நியூயார்க்கர் பத்திரிக்கை ஒரு கார்ட்டுனுக்கு வாசகர்களின் வாசகங்களை ஏற்றுக்கொள்கின்றது. நியூயார்க்கரின் கார்ட்டூன்களுக்கு ஒரு நூறு வருட பாரம்பரியம் இருக்கிறது. அதற்கேற்றார் போல் இந்த மாதிரி கார்ட்டுன் வாசகம் எழுதுவதற்க்கும் ஒரு எழுதப்படாத இலக்கண விதி இருக்கிறது. கடந்த சில வருடங்களாக வாரா வாரம் நானும் வாசகம் எழுதிக் கொண்டிருக்கிறேன், கொஞ்சம் பிடிபட்ட மாதிரி தோன்றுகிறது. நியூயார்க்கரில் தான் எழுதுவதை பிரசுரிக்க மாட்டேன் என்கிறார்கள், நானும் விக்கிரமாதித்தனாய் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இங்கேயாவது அதை போட்டு வைக்கலாம்…
-
இவ்வாண்டின் தலைப்புச் செய்தி
இந்த வருடத்தில் நடக்கப்போகும் ஒரே ஒரு முக்கிய செய்தியை இவ்வருடத்தின் தலைப்புச் செய்தி என்றால் அது என்னவாக இருக்கலாம் என்று யோசித்துப் பார்க்கத் தேவையேயில்லை. அது போன வருடத்தின் தலைப்புச் செய்தியாகத் தான் இருக்கப் போகிறது. போன வருடத்தின் தலைப்புச் செய்தி தான் என்ன? 2023ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மனித வரலாற்றில் மிகவும் உஷ்ணமான ஆண்டு. (படிக்க) “The extraordinary global November temperatures, including two days warmer than 2ºC above preindustrial,…