Category: மீடியா
-
எனக்குள் நான் – பாலகுமாரன்
“I am a good writer சார். வேற யாரும் certify பண்ண வேண்டிய அவசியமில்லை. எனக்கு தெரியும். நான் நிற்பேன், காலம் கடந்து நிற்பேன். என்னை படிக்காம போக முடியாது சார். படிச்சுத்தான் ஆகணும். படித்தால், உங்களை நான் பிடித்துக் கொள்வேன். தொடர்ந்து, தொடர்ந்து, தொடர்ந்து பாலகுமாரனோடு இருப்பீர்கள். நீங்களும் மலர்வீர்கள். நான் எழுதுவதே உங்களை மலர்விப்பதற்காக. வெறுமே மகிழ்விப்பதற்காக அல்ல. அப்படியே பூ மாதிரி மலரணும். மனசு மலரணும். அது நடக்கும், படிச்சு பாருங்க”.…
-
பீப்பிங் டாம்
மயிலாப்பூர் முண்டகன்னி அம்மன் கோயில் தெருவில் இன்னும் அப்பார்ட்மெண்டாக மாற்றாமல் உள்ள ஓரிரு புராதன வீடுகளில் நண்பன் ஸ்ரீதரின் வீடும் ஓன்று. போன வாரம் போன் செய்த போது, ஸ்ரீதரின் பாட்டி எடுத்தார். அங்கு இரைச்சலாக இருந்ததால் கொஞ்சம் சத்தமாக பேசினேன். “பாட்டி, சவுக்கியமா. ஸ்ரீதர் இருக்கானா ?”. “ம்…….ஸ்ரீதர் கொத்தவரங்கா வாங்க டாங்க் வரைக்கும் போயிருக்கான். தோ வந்துருவான்”. “ஓ..ஒகே. நோ ப்ராப்ளம். நீங்க எப்…” விசாரிக்க போன என்னை குறுக்கிட்டு “சத்த நாழி கழிச்சு…
-
புத்தகமும் தமிழும்
குமுதம் டாட்காமில் ரவி பெர்னாட்டின் பேட்டிகளில், கிழக்கு பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் பா ராகவனுடனான பேட்டி ஐந்து பாகங்களாக காணக்கிடைத்தது. தமிழ் புத்தகங்கள் மற்றும் தமிழ் பதிப்புத் தொழிலின் தற்போதைய போக்கு பற்றி சற்றே அலசினார்கள். ரவி பெர்னாட் கொஞ்சம் குறுக்கிட்டு் அடுத்த கேள்விக்கு தாவாதிருந்தால் இன்னும் பல சுவாரசிய விஷயங்கள் கிடைத்திருக்கும். பா ராகவன் எப்போதும் ஒரு convictionனுடன் பேசுகிறார். தமிழ் புத்தகங்கள் இன்னும் நிறைய விற்கபோகிறது, தமிழ் புத்தக நேர்த்தி அதிகமாகியுள்ளது, அ-புனைவுகளை[non-fiction] மக்கள் விரும்புகிறார்கள்…
-
கட்டிப்புடி வைத்தியம்
# வசூல்ராஜாவில் கமலின் அம்மாவாக நடித்த ரோஹினி ஹத்தங்காடி, கமலுக்கு சொல்லிக் கொடுக்கும் கட்டிப்புடி வைத்தியம், உலக பிரபலமாகியிருக்கிறது. இரு வருடங்களாக சிட்னி் கடைத்தெருவில், யுவான் மான்[Juan Mann] என்னும் இளைஞர், வாரம் ஒரு நாள் முழுவதும், free hugs என்றெழுதிய ஒரு போர்டை பிடித்துக் கொண்டு, போகிற வருகிறவர்களுக்கெல்லாம் கட்டிப்புடி வைத்தியம் செய்கிறார். கட்டிப்புடி வைத்தியம் கட்டாயம் கிடையாது. ஒரே ஒரு சின்ன ஹக் தான். இந்த free hugs campaignனுக்கு யுவானின் காரணம்- என்ன…