Category: புத்தகம்
-
மற்றவை சில
சியாட்டலில் குளிர் ஆரம்பித்தாகிவிட்டது. பஸ்களில் எந்நேரமும் ஹீட்டர் போடுகிறார்கள். லைட் போடுகிறார்கள். ஆறேகாலுக்கு மேல் பசுமாடு தெரிவதில்லை. வீட்டில் தேங்காய் எண்ணெய் கட்டித்தட்டுகிறது.கார்பெட்டில் கால் பதிக்க முடிவதில்லை. ரோட்டில் எல்லோரும் குளுர் ஜாக்கெட் போட்டிருக்கிறார்கள். இதெல்லாம் ஒவ்வொரு வருடமும் அமெரிக்கா குளிர்காலத்திற்கு தயாராக செய்யும் பிரயத்தனங்கள். இன்னமும் கொஞ்ச நாளில் எல்லோரும் கழுத்தில் ஸ்கார்ப் போடுவார்கள். இரண்டடி எடுத்தால், ஐஸ் மூன்றடி வழுக்கும். நாலு மணிகெல்லாம் இருட்டிக் கொள்வதால், வேலை செய்ய போர் அடிக்கும். நம்மூரைப் போல…
-
சிறிசு = பெரிசு
சமிபத்தில் ப்ளைட்டில் ஒரு படமும் பார்க்க பிடிக்காமல் படித்த புத்தகம், சேத் காடின் எழுதிய Small Is The New Big. பார்த்த Namesakeஇன் தொல்லை தாங்கவில்லை. சேத்தின் வலைப்பதிவை படித்துக் கொண்டு வருபவர்களுக்கு இந்த் புத்தகம் புதிதல்ல. அவரின் வலைப்பதிவில் இருந்தும், அவரின் சில பல பேச்சுக்களிலிருந்தும் எடுத்து தொடுக்கப்பட்ட விஷயங்கள் தான் இந்த புத்தகம். எட்டு வருடங்களாக குருவி சேர்த்த எழுத்துகளாததால், ஹாரி பாட்டர் போல ஒரேடியாக உட்கார்ந்து படித்தால், மவனே சத்தியமாக தலை…
-
இப்பொழுதே படி !!
கடைசி புத்தகம் வந்தாகிவிட்டது. இத்துடன் ஹாரி பாட்டர் ரசிகர்கள், என்னைப் போல் ஹாரி பாட்டர் படிக்காதவர்களை muggles, என்றழைக்க முடியாது. நாமும் குரு சிஷ்யன் ரஜினி/ பிரபு போல, “இப்போ என்ன செய்வீங்க” என்று அவர்களை இடுக்கலாம். நேற்றிரவு பார்னஸ் அண்டு நோபிளில், ஹாரி பாட்டர் பார்ட்டியை வேடிக்கை பார்க்க போயிருந்தேன்[படங்கள்]. ஜே கே ரவுளிங், தமிழ் நாட்டில் பிறந்திருக்கலாம் என்று எண்ணும்படி, காட்டுக் கூட்டம். யூடியூப்பில் இருக்கிறது, ஜே கேவின் பயோகிராபி. புத்தகம் படிக்காவிட்டாலும், கட்டாயம்…
-
ட்ருமேன் கப்போட்டி
1959ல் கான்ஸாஸ் நகரின் ஒரு ஓதுக்குப்புர வீட்டில், நள்ளிரவில், நான்கு பேர் கொல்லப்படுகிறார்கள். கொன்ற இருவரையும் போலீஸ் பிடித்து ஜெயிலில் அடைக்கிறது. அடுத்த நாள், நியுயார்க் டைம்ஸில் இந்த செய்தியை படித்த ட்ருமேன் கப்போட்டி என்ற பிரபல எழுத்தாளர், இதை பற்றி எழுத கான்ஸாஸ் செல்கிறார். இரண்டு குற்றவாளிகளில் ஒருவனிடம் நட்பாகி, அவன் மனதை புரிந்து கொண்டு எழுத நினைக்கிறார், தன் வாழ்க்கை முற்றிலுமாய் மாறப்போவதை அறியாமல். இது கதையல்ல நிஜம். 50களில் வாழ்ந்த, Breakfast at…
-
முன் கதை சுருக்கம்
“ஏய்…எழுந்திரு” யாரோ நெற்றியயை பின்னுக்குத் தள்ளி எழுப்பினார்கள். ஸ்டேஷனில் இப்போது கும்பல் அதிகமாக இருந்தது. “இனிமே பீச்சுப்பக்கம் வர மாட்டேன்னு எழுதிக் கொடுத்திட்டுப் போ.” “யார்ப்பா அது ?” “என்னமோ தியானம் பண்ண பீச்சுக்கு வந்தானாம். இட்டந்துட்டாங்க. தடி மாடு மாதிரி இருக்கே. என்னத்துக்கு இது உனக்கு… அதெல்லாம் கிழவனுங்க வேலை…ம்… எழுது இதுல.” “இங்கிலீஷிலயா, தமிழிலியா…” லொட்டென்று தலையில் தட்டினார்கள். “பெரிய மயிறு இவரு. தமிழ்ல எழுதுறா” திராவிட முன்னேற்றக் கழகம் நகரசபை பிடித்துக் கொண்ட…