Category: பதிவுகள்
-
கிறுக்கல் 3.0
ஒரு வழியாக சுப்புடு.காமிலிருந்து பழைய டெம்ப்ளேட் உள்பட எல்லாவற்றையும் காலி செய்து கொண்டு மீண்டும் பழைய வீட்டிற்கு ஜாகை மாறியாகி விட்டது. சமூகசேவையாக லேசிகீக்.நெட்டில் எழுதிய குப்பைகள் அத்தனையும் பத்திரமாக இங்கேயே நகர்த்தியாகிவிட்டது. ஆக, மீண்டும் எழுதத் தொடங்க வேண்டியது தான் பாக்கி. பழைய பதிவு – கிறுக்கல் 2.0
-
கிறுக்கல் 2.0
ஆக ஒரு வழியாக மூவபிள் டைப்பிலிருந்து(MT) வேர்ட்ப்ரஸ்ஸுக்கு(WP) கிறுக்கலையும், அந்தப் பக்கத்தையும் ஜாகை மாற்றியாகிவிட்டது. கிறுக்கலுக்கு இது முதல் மாற்றம். அந்தப் பக்கத்திற்கு இது மூன்றாவது. நான்கு வருடங்களாக பயன்படுத்திய மென்பொருளை அப்படியே தூக்கிப் போட முடியவில்லை. அதாவது, மூவபிள் டைப்பில் நான் நாளொரு மேனியாக கட்டிய டெம்பிளேடுகைள விட்டுவிட முடியாமல், அதற்காக மெனக்கெட்டு(மெனகட்டு ?) அதே look and feelலோடு வேர்ட்பிரஸ்ஸிலும் கட்ட கொஞ்ச நாளாகிவிட்டது. மூவபிள் டைப்பில் வலைப்பதிவு செய்வது நன்றாகவே இருந்த போதிலும்,…