Category: பதிவுகள்
-
வோர்ட்பரஸ்ஸுடன் ஒரு வாரம்
பழைய ப்ளாக்கையும் புதியதையும் இணைக்கப் போய் ஒரே களேபாரம். ஆங்கில வலைப்பதிவின் பாதி பதிவுகளை காணவில்லை. இருக்கும் பதிவுகளில் இருக்கும் படங்களை காணவில்லை. நாலு நாட்களாக பழைய பேக்-அப்களை தேடி அலுத்துப் போய் தற்பொழுது தேறிய வோர்ட்ப்ரஸ்ஸை பழுது பார்த்துக் கொண்டிருக்கிறேன். ப்ரேக் கே பாத்…
-
நிறையா? குறையா?
மற்றெதுவும் பேசுவதற்கு முன் இவ்விரண்டு பத்திகளை படிக்கவும். புத்தகக் காட்சி என்பது தமிழ் அறிவுலகத்தின் அடையாளம் போல் ஆகியுள்ளது. ஆண்டுதோறும் புத்தகக் காட்சியை ஒட்டி புது நூல்கள் வெளியிடப்படுகின்றன. நான் கடந்த 15 ஆண்டுகளாகத் தவறாமல் எனது புதிய நூல்களைச் சென்னை புத்தகக் காட்சியை முன்னிட்டு வெளியிட்டு வருகிறேன். நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. தமிழ்ப் புத்தகங்களுக்கான வாசகர்களின் எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டுகளில் மிக அதிகமாகியிருக்கிறது. இளைஞர்கள் படிப்பதில்லை என்பது பொய். விருப்பமான புத்தகங்களை மட்டுமே தேடிப்…
-
நூலக ஞாபகம்
அஷ்வினுடன் பேசிக்கொண்டிருக்கும் போது சிறுவயதில் தனியாக வீட்டில் நூலகம் நடத்தியது ஞாபகம் வந்தது. ஐந்தாவதோ ஆறாவதோ படித்துக் கொண்டிருந்தேன். அந்த கோடை விடுமுறையில் திடீரென்று கையில் இருந்த புத்தகங்களை எல்லாம் போட்டு ஒரு நூலகம் வைத்து சம்பாதிக்கலாம் என்று ஏனோ தோன்றியது. காரணம் சரியாக ஞாபகம் இல்லை. எங்கேயாவது படித்ததாலோ அல்லது “அவனப் பாரு, எப்படி சூட்டிகையா இருக்கான்” என்று யாரையோ காட்டி விட்டுப் பெரியவர்களில் யாரோ சொன்னதாலோ இருக்கலாம். நாங்கள் இருந்த அந்த புரசைவாக்க வெள்ளாளத்…