Category: பயாஸ்கோப்
-
பச்சைத் தமிழனின் கலைந்த தலை
எப்போதும் பச்சைத்தமிழன், அடிக்கடி முடி கலைவதும் ஸ்டைல் என சிவாஜி படப்பாடலில் சூப்பர் ஸ்டார் துதி ஓலிப்பதாக ஒரு அன்பர் ஈமெயில் அனுப்பியிருந்தார். பாடலை கேட்பதற்கும் ஓரிரு லிங்குகளை அனுப்பி, கேட்டால் தான் ஜென்ம சாபல்யம் என்பது போல ஒரு மெலிதான மிரட்டல் வேறு. வெளியானவை மூன்று பாடல்கள். அத்தனையும் இணையத்தில். சிவாஜி பட பாடல்களே இன்னும் வெளியாக நிலையில், இணையத்தில் வெளிவந்ததனால், கடுப்பாகி இருப்பது ஷங்கர், ரஹ்மான் தரப்பு தவிர ரஹ்மான் ரசிகர்களும் தான். இதற்கு…
-
பார்வை 360 – சுஜாதா
குமுதத்தில் இந்த வாரம் முதல் சுஜாதா எழுதும் ஒரு 360 டிகிரி தொடர். ஆரம்பதிலேயே தனது புத்தகங்களிலிருந்து தமிழ் சினிமாவாக மாறியவற்றை கலாய்கிறார். 1965 என்று ஞாபகம். ‘சசி காத்திருக்கிறாள்’ என்ற கதை வெளிவந்தபோது, வாசகர்களிடமிருந்து அதைப் பாராட்டி நிறையக் கடிதங்கள் வந்தன. ஆசிரியர் எஸ்.ஏ.பி. அதற்கான செக் அனுப்பும் அச்சிட்ட படிவத்தின் ஓரத்தில் ‘அடிக்கடி எழுதுங்கள்’ என்று பொடிப்பொடியாக ஒரு குறிப்பு அனுப்பியிருந்தார். அந்தச் சிறு குறிப்பே எனக்கு உற்சாகமளிக்கப் போதுமானதாக இருந்தது. விளைவு சுஜாதா.…
-
மருதநாயகம், சத்தமில்லாமல்
எடுத்த முப்பது நிமிடத்தில், மூன்று அற்புத நிமிடங்கள். சத்தமில்லாத இந்த டிரய்லருக்கு யாரவது வேட்டையாடு விளையாடு டைட்டில் பாடலை டப் செய்தால் சரியாக இருக்கும். என்ன தான் ராஜ் கமல் என்றெல்லாம் பெயர் போட்டாலும், உண்மையான டிரைலராக தெரியவில்லை. அல்லது தெரிகிறது. முதல் முப்பது செகண்டில் உள்ளது சண்டியர் காட்சிகளானாலும், சில பகிரங்க மருதநாயக காட்சிகளும் தெரிகிறது. படம் வந்தால் சின்னப் பசங்களெல்லாம் பார்க்க முடியும் என்று தோன்றவில்லை. முதலில், நமக்கே பார்க்க கிடைக்குமா என்பது ஒரு…
-
கொஞ்சம் கொஞ்சமாய் ரெண்டு
கொஞ்சம் Kill Bill கதை. கொஞ்சமாய் ஹிந்தி சாயல் பாடல்கள், குறிப்பாய் சுஷ்மிதா சென் நடிக்கும் Main Hoon Naa பாடல். கொஞ்சம் Terminator ஸ்டைல் கிளைமாக்ஸ் காட்சி. கொஞ்சம் Titanic முடிவு. இவைகளுக்கு நடுவில் ரெண்டு மாதவன்களையும் சில கவர்ச்சி பெண்களையும் நடிக்க விட்டு, ஒரு சுந்தர்.சி ஸ்டைல் கல்யாண கலாட்டா நடத்தினால் என்னாகும். கொஞ்சம் கொஞ்சமாய் அமிர்தான்சன் காலியாகும். படம் பெயர் ரெண்டு. மாதவனுக்கு போதாத காலம் போலிருக்கிறது. மனிதர் நடிக்கிறேன் பேர்வழி என்று…