Category: பயாஸ்கோப்
-
ஹாலிவுட் நகரங்கள்
நியூயார்க் ஒரு self-indulgent நகரம். சென்டர் ஆப் தி யூனிவர்ஸ். நம்மூர் பம்பாயைப் போல. அதாவது, பம்பாயே ஒரு உலகம் போல, அதனைப் பற்றி பேசுவதற்காகவே ஆழேழு சானல்கள், அரை டஜன் செய்திப்பத்திரிக்கைகள், தினமும் பலப்பல குற்றங்கள், குவியும் மக்கள் கூட்டம் என்று தன்னைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும் நகராதி நகரம். தப்பல்ல. இந்த நகரங்களுக்குள் அடங்கி இருக்கும் self-sustaining ecological system போன்றோரு அமைப்புத் தான் இந்த ‘தன்னைச் சுற்றித் தான் உலகம்’ என்ற மாயைக்கு…
-
மவுண்ட் ரோடில் ரோபாட்டுகள்
இந்த சம்மர் ரிலீஸிலேயே Transformers தான் ரொம்ப சத்தமான படம், ரொம்பவும் இழுவை, அதீதமான க்ராபிக்ஸ், வயிற்றை குமட்டுகிறது என்றெல்லாம் சொன்னார்கள். இதனால் எதிர்பார்ப்பில்லாமல் பெரிய ஸ்கிரீனில் பார்த்ததால், ரொம்பவும் பிடித்திருக்கிறது. பிரமாதமான படம். டைரக்டர் மைக்கேல் பே(Michael Bay) ஒரு டைம்பாஸ் பரமாத்மா. பியர்ல் ஹார்பர், ஆர்மகெடான் என்று பாப்புலர் சினிமா எடுப்பவர். நல்ல சினிமா எடுப்பவர்கள், இவரின் டைம்பாஸ் படங்கள் ஹிட்டாவதை பார்த்து, Killing Michael Bay என்றெல்லாம் குறும்படம் எடுத்து விட்டார்கள். அந்த…
-
இரண்டு படங்கள்
சமீபத்தில் பார்த்த சக் தே இந்தியா!! பிடித்திருந்தது. இந்த மாதிரி நோ-நான்சென்ஸ் படங்கள் எடுத்து, ஹீரோ ஹீரோயினை இருபது பெண்களுடன் சுவிஸ் அனுப்பாமல், இடுப்பு காட்டாமல் இருந்தால் இன்னும் பிடித்திருக்கிறது. ஆனாலும் கோலி/பாலிவுட்கள் மாறுவதாய் காணோம். உயிர் கொடுத்தாடும் ஒரு ஹாக்கி வீரனின் மேல் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, பிறிதொரு நாளில் அவன் கோச்சாக திரும்பி வந்து, பெண்கள் ஹாக்கி டீமை கட்டி மேய்த்து கப் வாங்கி கொடுக்கும், The Incredibles போன்றோரு கதை தான். ஹாலிவுட்டில்…
-
தளபதி
நானும் மணிகண்டனும், BSA SLRல் டபுல்ஸ் அடித்துக் கொண்டு போய், எக்மோர் அல்ஸா மாலில் உள்ள ஹாட் பிரட்ஸில், டிக்கெட் வாங்கினோம். கிட்டத்தட்ட பதினாறு வருடங்களுக்கு முன்பு, தீபாவளிக்கு ஒரு வாரமே இருக்கும் ஒரு திருநாளில். தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் ரஜினி படத்திற்கான ப்ரீமியர் ஷோ டிக்கெட். அப்போதிருந்த விலையில், அந்த இரு பத்தாங்க்ளாஸ் மாணவர்களுக்கு, அந்த ஐம்பது ருபாய் டிக்கெட் ரொம்பவும் காஸ்ட்லி. மணிரத்னத்துடன் படம் பார்க்க கொடுத்த விலை. இயக்குனர் மணி ரத்னம். இசை…
-
காணவில்லை
இளைஞர்களின் கோலிவுட்டை, இந்த படத்திற்கு பின்னர் காணவில்லை. தேடிப்பார்கிறேன் காற்றோடு. அப்பாஸ் ட்ரம்ஸ் அடிக்கிற மாதிரி நினைத்துக் கொண்டு சைகை செய்து நடந்து போவார், போன வாரம் கூட பீச்சில் ஒரு யுவா, அதே போல ஒரு பெண்ணின் பின்னால். Strikingly similar. ஒரே ஞாபகம்ஸ்.