Month: October 2007
-
டெலிவிஷன் பெட்டி
இந்த வருடம் தாங்ஸ்கிவ்விங்கிற்கு ஒரு LCD டெலிவிஷன் வாங்குவதாய் எண்ணம். வீட்டில் இருக்கும் பழைய Cathode Ray Tube பெட்டியில், CNN சானலில், C மட்டுமே தெரிகிறது. மற்ற இரண்டு Nகளும் இழுத்துக் கொண்டு போய் விட்டன. அப்படி ஒன்றும் பெரியதாய் இழந்துவிடவில்லை என்றாலும், அமெரிக்க மார்க்கெட்டிங் விடமாட்டேன் என்கிறது. முதலில் பெரிய திரை என்றார்கள். பிறகு வைட் ஸ்கிரீன், ப்ளாஸ்மா, ரியர் புரஜக்-ஷன் என்று இப்போது எல்சிடி வரை வந்திருக்கிறது. பிறகு எல்சிடியில் pixel எனப்படுகிற…
-
Gee Ohh Dee !!
Happened between two of my friends, over the weekend. I was a silent spectator and hence no comments. Dude 1: (sipping his negramodelo beer) Machan, I know it isn’t simple as it sounds but I don’t think there is god. Dude 2: Really…screw yourself. There is. Dude 1: There what, God ? Dude 2: Yes.…
-
தமிழில் எழுத !!
சில மாதங்களுக்கு முன்னர், ஹிந்திக்கு transliteration அறிமுகப்படுத்திய கூகிள் சில வாரங்களுக்கு முன்னர் தமிழில் எழுதும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் தமிழில் டைப் செய்ய ஒரு கம்ப்யூட்டரும் இணைய இணைப்பு தவிர font, client application என்று ஒரு புண்ணாக்கும் தேவையில்லை. மேலே உள்ள ‘சுத்த டமில்’ பாடலை எழுதியதும், Google Transliteration – தமிழில் தான். என்ஜாய்.
-
மவுண்ட் ரோடில் ரோபாட்டுகள்
இந்த சம்மர் ரிலீஸிலேயே Transformers தான் ரொம்ப சத்தமான படம், ரொம்பவும் இழுவை, அதீதமான க்ராபிக்ஸ், வயிற்றை குமட்டுகிறது என்றெல்லாம் சொன்னார்கள். இதனால் எதிர்பார்ப்பில்லாமல் பெரிய ஸ்கிரீனில் பார்த்ததால், ரொம்பவும் பிடித்திருக்கிறது. பிரமாதமான படம். டைரக்டர் மைக்கேல் பே(Michael Bay) ஒரு டைம்பாஸ் பரமாத்மா. பியர்ல் ஹார்பர், ஆர்மகெடான் என்று பாப்புலர் சினிமா எடுப்பவர். நல்ல சினிமா எடுப்பவர்கள், இவரின் டைம்பாஸ் படங்கள் ஹிட்டாவதை பார்த்து, Killing Michael Bay என்றெல்லாம் குறும்படம் எடுத்து விட்டார்கள். அந்த…
-
முப்பது மெட்ராஸ் நாட்கள்
இரண்டு வருடங்களுக்குப் பின் கடும் அக்னி நட்சத்திரத்தின் நடுவே, இந்த வருடம் சென்னை சென்றிருந்த போது கண்ட விஷயங்கள் இவ்விவை. மீனம்பாக்கத்தில் வளைத்து வளைத்து பாலம் கட்டுகிறார்கள். ஆங்காங்கே தகரம் பெயர்ந்து ரோட்டில் நீட்டிக் கொண்டிருக்கின்றது. விமான நிலையத்தில் ஆட்டோ-ப்ரேக்குகலோடு ட்ராலி அழகாக அடுக்கி இருக்கின்றன. எக்கச்சக்கமாக பார்கிங் சார்ஜ் போடுகிறார்கள். சென்னையில் ட்ராபிக் அதிகமாகிவிட்டது. எல்லோரும் வண்டியை ‘வள்ச்சி ஓட்டிகினே’ போய்கொண்டிருக்கிறார்கள். இரண்டு வருடத்தில் பல ஆயிரம் கார்கள் வானத்தில் இருந்து கொட்டிய மாதிரி இருக்கிறது.…