kirukkal.com

  • about
  • archive
  • all that is
  • photoblog
  • January 8, 2007

    ஓட வைக்கும் பாடல்

    செங்காந்தள் இதழ் என்பதில் நான் கண்டேன் இனிய தமிழ்
    மின்காந்தப் பேச்சில் மொத்தமாய் நான் கேட்டேன் இசைத்தமிழ்
    நீ கொஞ்சம் நாடக தமிழ்
    நீ கொஞ்சம் மன்மத தமிழ்
    உன் தமிழ் என் தமிழ்
    T-A-M-I-L
    தமிழ்

    நாலு நாளாய் டிரட்மில்லில் ஓட வைக்கும் இந்த ‘தமிழ்’ வரிகள், மணிசர்மாவின் இசையில், ரஞ்சித்தும் ஸ்வேதாவும் பாடிய ‘நீ முத்தம் ஒன்று கொடுத்தால்’ என்ற பாடல். இடம்பெற்ற திரைப்படம் போக்கிரி. ஹியர் போனில் இருந்து சத்தம் வழிந்து, ஒன்ஸ்மோருடன் நான்கு முறை ரசித்துக் கேட்டவர்கள் மற்ற ஜிம் அன்னியர்கள்.

  • January 6, 2007

    எனக்குள் நான் – பாலகுமாரன்

    balakumaran.jpg

    “I am a good writer சார். வேற யாரும் certify பண்ண வேண்டிய அவசியமில்லை. எனக்கு தெரியும். நான் நிற்பேன், காலம் கடந்து நிற்பேன். என்னை படிக்காம போக முடியாது சார். படிச்சுத்தான் ஆகணும். படித்தால், உங்களை நான் பிடித்துக் கொள்வேன். தொடர்ந்து, தொடர்ந்து, தொடர்ந்து பாலகுமாரனோடு இருப்பீர்கள். நீங்களும் மலர்வீர்கள். நான் எழுதுவதே உங்களை மலர்விப்பதற்காக. வெறுமே மகிழ்விப்பதற்காக அல்ல. அப்படியே பூ மாதிரி மலரணும். மனசு மலரணும். அது நடக்கும், படிச்சு பாருங்க”.

    உங்களுக்கு பாலகுமாரனை பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் தவற விடக்கூடாத ஒரு monologue பேட்டி இது.

    இந்த முப்பது நிமிடத்தில் ஆன்மீகம், இறைவன், குருநாதர், குடும்பம், வாழ்க்கை பற்றியெல்லாம் நிறைய பேசினாலும், தான் படைப்பாளியான கதையை சொல்லும் அந்த ஐந்து நிமிடம் மிக சுவாரசியம். மேலிருக்கும் வார்த்தைகளை அவர் egoவோடு சொல்லவில்லை என்பது பார்த்தால் புரியும். ஆறு பாகம் உடையார் எழுதி முடித்ததை பற்றி சந்தோஷப்படுகிறார். 237 நாவல்களும் மணிமணியான நாவல் என்கிறார்.

    இன்றுவரை குமுதம் வெப் டீவி, ஆனந்த விகடனை தாண்டி செல்ல வேண்டும் என்ற குமுதத்தின் ஒரு மார்கெட்டிங் முயற்சி என்றே எண்ணிக்கொண்டிருந்தேன். இன்று நிதானமாக பல வெப் டீவி நிகழ்ச்சிகளை பார்த்ததால் தான் அதில் உள்ள ஆர்வம் தெரிகிறது. ரவி பெர்னாடின் பேட்டிகளில் கொஞ்சம், மற்றவரை பேச அனுமதிப்பாராயின் நலம். இன்று பார்த்த கவிஞர் வாலியின் பேட்டியிலும், அன்று பார்த்த பா ராகவனின் பேட்டியிலும் அவர் நடுநடுவே பேசியதால் சில சுவாரசியங்கள் மிஸ்ஸிங். மற்றபடி, வெப் டீவியிலும் மெகா சீரியல்கள் வந்துவிடாமலிருந்தால் சரி.

  • January 6, 2007

    தமிழ் – மணிரத்னம் – குரு

    இந்தியிலிருந்து தமிழில் டப் செய்யப்படும் மணிரத்னத்தின் குரு டிரைலர், இந்தியா க்ளிட்ஸிளிருந்து.

  • January 6, 2007

    செவியீர்ப்பிசை


    [#]

  • January 4, 2007

    கிறுக்கல் – பெயர்க்காரணம்

    “சார், பார்த்திபனை பார்த்து தானே காப்பி அடிச்சீங்க”, என்று ஒருவருக்கு மேற்பட்டு கேட்டதனால், கொஞ்சம் பெயர்க்காரணம்.

    பார்த்திபன் தான் காரணம். ஆனால் நேரடியாக அல்ல. சில வருடங்களுக்கு முன்பு, பார்த்திபனின் ‘கிறுக்கல்கள்’ நூல் வெளியிட்டு விழாவிற்கு சென்று வந்த சுஜாதா, அதை பற்றி சிலாகித்து எழுதினார். அந்த கட்டுரையில் இந்த தகவலும் இருந்தது –

    கிறுக்கல் என்ற வார்த்தைக்கு எழுத்து என்று தான் அர்த்தம். அதற்கு ‘பிங்கள நிகண்டு’ என்னும் பழந்தமிழ் நூலில் குறிப்புள்ளது. எவ்வாறு scribe என்பது scribble ஆகியதோ, அதே போல் கிறுக்கல் என்பது பின்னர் தாறுமாறான எழுத்துக்கு குறிக்கப்பட்டது.

    இங்கு எழுதுவது என்னவோ தாறுமாறான கிறுக்கல் தான், ஆனால் கிறுக்கல் என்பது எழுத்தாகும். நன்றி – பார்த்திபன், சுஜாதா மற்றும் பிங்கள நிகண்டு.

←Previous Page
1 … 86 87 88 89 90 … 316
Next Page→
  • about
  • archive
  • all that is
  • photoblog
  • Subscribe Subscribed
    • kirukkal.com
    • Join 26 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • kirukkal.com
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar