Category: மற்றவை
-
விகடனில் கிறுக்கல்.com
இந்த வார ஆனந்த விகடனின், விகடன் வரவேற்பறை பகுதியில், இந்த கிறுக்கல்.காம் தளத்தை பற்றி ஒரு பத்தி எழுதியிருக்கிறார்கள். இதை வெங்கடரமணன் சொல்லப்போய் தான் நானறிந்தேன். படித்துப் பார்த்த போது, எல்லாவற்றையும் விட பிடித்திருந்தது, இந்த வரி. சுஜாதாவின் ‘கணையாழி கடைசி பக்கங்’களை ஞாபகப்படுத்தும் சரள-மான மொழி நடை. என்னாது சுஜாதாவா ?. இதை விட பெரிய பாராட்டு சுஜாதாவே,”நல்லா ஜல்லியடிக்கறீங்க சுப்புடு”ன்னு சொல்வதாகத்தான் இருக்க முடியும். போன வியாழக்கிழமையிலிருந்து, கன்னா பின்னாவென்று தளத்தின் traffic கூடிப்போய்…
-
ஹே !!
காதில் பாட்டோடு டிரட்மில்லில் ஓடிக் கொண்டிருந்தேன். ஏற்கனவே என்னுடைய ஒரு நாளைய ஓடும் கோட்டா முடிந்திருந்தது. கலைத்துப் போய் நிற்கலாம் என்று மூச்சு வாங்க யோசித்துக் கொண்டிருக்கும் வேலையில் அந்த பாட்டு ஆரம்பித்தது. இந்த பாட்டைக் கேட்டு்ப்/பாடிக்கொண்டே கொஞ்சம் எக்ஸ்ட்ரா காலரிகளை காலி செய்யலாம் என்று நினைத்து, மீண்டும் முழு மூச்செடுத்து ஓட ஆரம்பித்தேன். பாட்டு ஓட, நான் ஓட, கிட்டத்தட்ட நான்கு நிமிடங்கள் ஓடின. வியர்வை வழிய வழிய மே.ல் மூ..ச்..சு வா….ங்….க, இனிமேல் சத்தியமாய்…
-
ஹும் ஹும்..உள்ளேன் !!
ஒண்ணு எழுது இல்லாகட்டி இழுத்து மூடு என்றெல்லாம் அன்பர்கள் மெயில் அனுப்பியதால் கொஞ்சம் பயந்து போய் இந்த ‘உள்ளேன் அய்யா!!’ பத்தி. இத்தனை நாளாய் எழுத கூடாது என்று எண்ணமில்லை. எழுத விஷயமிருந்தும், நேரமில்லாமையும், நேரமில்லாமையும் மற்றும் நேரமில்லாமையும் தான் காரணங்கள். நேரமில்லை ஒரு நொண்டிச் சாக்கு என்று சிலர் சொன்னாலும், அது தான் காரணமாயிருக்கும் போது என்ன சொல்வது என்று தான் தெரியவில்லை. படித்துக் கொண்டிருக்கும் புத்தகம், Fight Club எழுதிய சக் பலெனிக்கின்[Chuck Palahniuk]…
-
இயந்திர பித்து – நிக்கானியன்
ஒரு பத்து வருடங்களுக்கு முன் நானும் எனது நண்பன் செந்திலும், வுட்லேண்ட்ஸ் டிரைவ் இன்னில் பேசிக் கொண்டிருந்த போது, “மச்சான் !! நான் படமெடுத்தன்னா நீ தாண்டா காமிராமேன்” என்றான். அதற்கு முன்னால் அவ்வப்போது மற்றொரு நண்பனின் போட்டோ ஸ்டூடியோவில், உட்கார்ந்து கதை பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில், டார்க் ரூம், 400 கவுண்ட், ப்ளாஷ் ஸின்க் என்று காதில் விழுந்துக் கொண்டிருந்தது. அங்கிருந்த ஒரு அண்ணா என்னை வைத்து ஒரு க்ளோஸ்-அப் எடுத்தார். அது கொஞ்சம் நன்றாக…
-
சமையல் குறிப்பு !!
“தினமும் பீட்ஸா பாஸ்தான்னு சாப்டாம ஒழுங்கா பாக்கெட் சாப்பாடு சாப்டுங்க”, என்று மோவாக்கட்டையை அழுத்திப் பிடித்து சொல்லிவிட்டு சென்னைக்கு ப்ளைட் ஏறினாள் மனைவி. பாக்கெட் சாப்பாடா ? என்று கேட்பவர்களுக்கு ஒரு மங்கையர் மலர் குறிப்பெழுதலாம். ஊருக்கு கிளம்ப இரண்டு நாட்களுக்கு முன், அண்டாகள் நிறைய சாம்பாரும் ரசமும் அவியலும் மற்ற சில சுவை உணவுகளுமாய் தாயராகிக் கொண்டிருக்க, யாரோ கெஸ்ட் வருகிறார்கள் என்று நானும் நினைத்தேன். “தோ பாருங்க…இங்க இதை பிடிங்க” என்று கூப்பிட்ட போது…