Category: எழுத்தாளர்கள்
-
ஹாப்பி பர்த்டே வாத்யாரே!!
சிறுகதை எங்கும் இருக்கிறது. சில சமயங்களில் நான் ஆபீஸுக்கு நடந்தே செல்வேன். ஒரு நாள் அவ்வாறு செல்லும்போது ஒரு கூலிக்காரப் பெண் விரசலாக நடந்து என்னுடன் வருகிறாள். பேசிக் கொண்டே வருகிறாள். கையிலே குழந்தை. அந்தக் குழந்தையை முன்னிலையில் வைத்து தன் கணவனைத் திட்டிக்கொண்டு வருகிறாள். எனக்கு அவள் பேச்சை மூன்று அல்லது நான்கு நிமிடங்கள்தான் கேட்க முடிந்தது. அவளுடைய கணவன் அவளை எந்த அளவுக்குக் கொடுமைப்படுத்துகிறான். திட்டுகிறான், அடிக்கிறான் என்பதையெல்லாம் பற்றிப் புலம்புகிறாள். யாரிடம்? ஒன்றரை…
-
மதியம். மழைத்தூறல். பிரயாணம்.
மீண்டும் முனகல் ஒலி கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். எதோ புதுப் பட பாடலில் வரும் கீச் கீச் சத்தமாகத்தான் இருக்க வேண்டும். காரின் பின்பக்க ஸ்பீக்கரிலிருந்து வந்ததால் கொஞ்சம் தடுமாறித்தான் போனேன். மழைத் தூறலாயிருந்தது. ஏற்கனவே ஹைவே இல்லாத வழியாக ஜீபிஎஸ்ஸில் தேர்ந்தெடுத்திருந்ததால், வீட்டிலிருந்து ட்யூவால் சென்று, நாவல்டி வழியாக கார்னேஷனை கடந்து ஸ்னோக்குவாமி நோக்கி பிரயாணம். கிட்டத்தட்ட சென்னையிலிருந்து திருப்பதி செல்ல கும்மிடிப்பூண்டி கடந்து, காலஹஸ்தி போய் திருப்பிக்கொண்டு திருப்பதி வருவது போலத்தான். வழியெல்லாம் பாசி…
subbudu
-
பதினாறு ஆண்டுகள்
நித்யஸ்ரீ மூன்றே முக்கால் மணி நேரம் பாடி பைரவியும், ஹம்சாநந்தியும், தேஷும் கொண்டு உள்ளத்தை நிரப்பினார். பாம்பே ஜெயஸ்ரீயின் ராகம் தானம் பல்லவி ஒருபுறம் பார்த்தால் மோகனம், மறுபுறம் பார்த்தால் கல்யாணி என்று விளையாட்டுக் காட்டியது. பிரசன்னாவின் பதற்றமும் திறமையும் அவர் கிதார் வாசிப்பில் வெளிப்பட்டது. சஞ்சய் பற்றிச் சொல்லவே வேண்டாம். ‘சீதம்மா மாயம்மா’வை பல்லவி பாட எடுத்துக்கொண்டு, சபையின் முழுக் கவனத்தையும் நாதப் பின்னல்களால் கட்டிப் போட்டு ஆக்கிரமிக்கும் குரல் வளம்… சங்கீத ஞானம். ‘ஊரிலேன்…
-
காலச்சுவடிலிருந்து புத்தகங்கள்
ஆறுமாதங்களுக்கு முன் ஆன்லைனில் காலச்சுவடு புத்தகங்கள் சிலவற்றை வாங்கியிருந்தேன். சிறப்பாக அட்டை பேப்பர் கட்டி சென்னைக்கு அனுப்பியிருந்தார்கள். அம்மா அவற்றை மர பீரோவில் பூட்டி வைத்திருந்தாள். சென்னைக்கு வந்த மறுநாள் காலையில் காபி குடித்தபடி தினத்தந்தியில் போதைப்பவுடர் பறிமுதல், குஷ்புவின் ஆஸ்பத்திரி அனுமதி, பெங்களூரு ரேஸ் டிப்ஸ், போலி நோட்டுகள் பரபரப்பு என்ற பல முக்கிய செய்திகளை தொடர்ந்து, கன்னித்தீவு 22431ம் (60 ஆண்டுகளாக) பகுதியை படித்தவுடன் வரி விளம்பரங்களை துழாவினால் சில முத்துக்கள் அகப்பட்டன –…
subbudu