பதினாறு ஆண்டுகள்

சுஜாதா ரங்கராஜன்

நித்யஸ்ரீ மூன்றே முக்கால் மணி நேரம் பாடி பைரவியும், ஹம்சாநந்தியும், தேஷும் கொண்டு உள்ளத்தை நிரப்பினார். பாம்பே ஜெயஸ்ரீயின் ராகம் தானம் பல்லவி ஒருபுறம் பார்த்தால் மோகனம், மறுபுறம் பார்த்தால் கல்யாணி என்று விளையாட்டுக் காட்டியது. பிரசன்னாவின் பதற்றமும் திறமையும் அவர் கிதார் வாசிப்பில் வெளிப்பட்டது. சஞ்சய் பற்றிச் சொல்லவே வேண்டாம். ‘சீதம்மா மாயம்மா’வை பல்லவி பாட எடுத்துக்கொண்டு, சபையின் முழுக் கவனத்தையும் நாதப் பின்னல்களால் கட்டிப் போட்டு ஆக்கிரமிக்கும் குரல் வளம்… சங்கீத ஞானம். ‘ஊரிலேன் காணியில்லை’, ‘கருப்பூரம் நாறுமோ’ போன்ற பாசுரங்களைப் பாடி, எனக்குப் புத்தாண்டுப் பரிசு தந்தார். (பை தி வே… பைபிளின் சாலமன் கானத்தில் ஆண்டாளுக்கு ஒப்பான கருத்து உள்ளதாமே!). உன்னிகிருஷ்ணன் தோடியில் மோகனமும் ஹிந்தோளமும் சுருதிபேதம் செய்து கோடி காட்டி, பகுதாரியில் ராகம் தானம் பல்லவி பாடினார். கர்னாடக சங்கீதத்தை ரசிக்கத் தெரியாதவர்கள், வாழ்வில் ஒரு முக்கியமான சந்தோஷத்தைக் கைவிடுகிறார்கள்.

— சுஜாதா, கற்றதும் பெற்றதும்.

இன்று எழுத்தாளர் சுஜாதாவின் 16வது நினைவு தினம்.

Leave a comment

Create a website or blog at WordPress.com