Category: அமெரிக்கா
-
இந்திய தொழில்நுட்ப வளர்ச்சி
எழுதியது ஆனந்த் கிரிதர்தாஸ் என்ற இந்தியனாதலால் ஒரு மெலிதான biasயுடன் எழுதப்பட்டதோ என்று தோன்றினாலும், எழுதியிருப்பதில் பாதி உண்மை இருந்தால் கூட இது வளர்ச்சி தான். நியுயார்க் டைம்ஸில் வந்த இந்தியாவின் அவுட்சோர்சிங் வளர்ச்சி பற்றிய கட்டுரை, விரியும் தொழில்நுட்ப எல்லைகளை பற்றிய ஒரு அபார ரிப்போர்ட். படித்தால் மகிழ்வீர்கள்.
-
இயந்திர பித்து
2005 தாங்ஸ்கிவ்விங்[thanksgiving] அன்று, காம்ப் யு.எஸ்.ஏ சென்று நடுநிசியில் நின்றது போன்ற அனுபவம் சென்னையிலும் கிடைக்காது. போனது எதுவும் வாங்குவதற்கல்ல. அந்த ஷாப்பிங் அனுபவத்திற்காக. கண்டிப்பாய் கிடைப்பதரிது. வருங்காலத்தில் யாராவது கேட்டால், “டேய் நான் கூட பனியில வெடவெடன்னு வாய் டைப்படிக்க, அந்த பெரிய லைன்ல நின்னுகிறேன்” என்று மார் தட்டலாம். எந்த கடைக்குப் போனாலும், தாங்ஸ்’கிவ்விங்’ என்று கையில் உள்ள காசத்தனையும் பிடுங்கிக் கொண்டு தான் விடுகிறார்கள். அந்த வகையில் அது ஒரு பந்தா அனுபவம்.…
-
இணையமும் தேர்தலும்
1870களிலேயே விக்டோரியா வுட்ஹல் என்ற பெண்மணி முதல் முறையாக அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டாலும் இந்த முறை ஹில்லாரி கிளிண்டன் வெற்றி பெற வாய்ப்புக்கள் அதிகம் என்று கணக்கிடுகிறார்கள். ஆனால் அவர் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்விக்கே இன்னும் விடை தெரியாத இத்தருணத்தில் இவையனைத்தும் கணிப்புகளே. ஹில்லாரி கிளிண்டனின் டெமாக்ரடிக் கட்சியில் மற்றொரு போட்டியாளராக பாரக் ஓபாமா. இவர் ஒரு ஆப்பிரிக்க-அமெரிக்கர். அவரை ஒரு ராக் ஸ்டார் போல் பார்க்கிறார்கள். சியாட்டலில் தன்னை பற்றிய ஒரு…