Month: February 2023
-
பதினைந்து ஆண்டுகள்…
எழுத்தாளர் சுஜாதா மறைந்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னும் இம்மாதிரி வசனமெழுத ஆளில்லாதது ஆச்சரியமளிப்பதாய் இல்லை. சிங்கமய்யங்கார் பேரன் நாடகத்திலிருந்து ஒரு காட்சி நரசிம்மாச்சாரி: நான் அப்படிச் சொல்லலை. ஒரே கம்யுனிட்டி. அதான் முக்கியம். ராகவன்: வேற கம்யுனிட்டியில பண்றதில என்னப்பா தப்பு? நரசிம்மாச்சாரி: சொல்றேன். நீ காத்தால எழுந்திருந்தா. காப்பி கேப்பே. அவ டீ போட்டுக் கொடுப்பா. நீ மோர்க் குழம்பு கேப்பே, அவ மீன் குழம்பு குடுப்பா. நீ விகடன் படிக்கணும்பே, அவ ஜிலேபி ஜிலேபியா…
subbudu
-
வெளிர் நீலப் புள்ளி
செப்டம்பர் 1977ல் அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடா மாகாணத்திலிருந்து வாயேஜர் என்ற விண்கலத்தை வானில் ஏவினார்கள் நாசா விஞ்ஞானிகள். வாயேஜரின் ஒரே குறிக்கோள் சூரியக் குடும்பத்தையும் அதைச் சுற்றியிருக்கும் விண்வெளியைப் பற்றியும் புரிந்து கொள்வது தான். 90களில் வாயேஜர் பூமியிலிருந்து கிட்டத்தட்ட 600 கோடி கிலோமீட்டர்கள் தள்ளிப்போய்விட, அது சூரியக்குடும்பத்தை தாண்டிப் போவதற்கு முன், திரும்பி நின்று ஒரு குடும்பப் படமெடுத்து அனுப்பிவிட்டு போகுமாறு கேட்டுக் கொண்டார் கார்ல் ஸாகன் என்ற விஞ்ஞானி. அப்படி எடுக்கப்பட்ட போது தெரிந்த…
subbudu