குறுங்கதை

மல்லி

“மல்லி, ஹவ் ஆர் யூ?”

“ குட் சார், நீங்க”

“ஆல் குட். பட் வொய் நாட் க்ரேட்”

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. அக்ட்சுவலி ஐஎம் டூயிங் க்ரேட்”

“உங்க க்ரேட்டை இன்னமும் க்ரேட் ஆக்க போறோம். யூ ஆர் ப்ரோமோடட் அஸ் தி வொய்ஸ் ப்ரசிடன்ட் ஆப் மெஷின்லேர்னிங் ஆர்க். இந்த ஏரியால நம்ம கம்பெனிக்கு பெரிய ஹோப்ஸ் இருக்கு. மொத்தம் ஆறாயிரம் அனலிஸ்டுகள், பெரிய டீம். நீங்க தான் அதுக்கு தகுதியானவங்க. மத்தது பத்தி எல்லாம் அப்புறம் பேசிக்கலாம், இப்ப போய் வீட்டோட செலப்ரேட் பண்ணுங்க” என்றார் நாராயணன், அவள் நிறுவனத்தின் பிரசிடென்ட்.

“ரொம்ப…. தாங்ஸ் அ லாட் சார். என்மேல வைச்ச உங்க நம்பிக்கைக்கு”

சிரித்துக் கொண்டே தலைக்கு மேல் கையை உயர்த்தி சத்தமில்லாமல் கைத்தட்டும் பாவனை செய்தார்.

அந்த வீடியோ கால் துண்டிக்கப்பட்டவுடன் கணினியை மூடி விளக்கை அணைத்து விட்டு, லிப்டில் கீழிறங்கும் போது மாலை ஆறேமுக்கால் எனக் காட்டியது அவளது கைப்பேசி. கட்டிடத்தின் லாபியில் அங்குமிங்குமாக மென்பொருளாளர்கள் நின்று கொண்டு பேசிக்கொண்டு இருந்தார்கள்.

கார் கேரேஜுக்குப் போய் காரில் ஏறி உட்கார்ந்தவுடன், உற்சாகத்துடன் ஷேகருக்கு குறுஞ்செய்தி அனுப்ப போனவளுக்கு, இன்ஸ்டாகிராமிலிருந்து வந்த notification கண்ணில் பட்டது. அவள் சினேகிதி இந்திரா சிங்கப்பூருக்கு போயிருக்கிறாள். அவள் போட்டிருந்த இன்ஸ்டா ஸ்டோரி அது. ’யாரப் பார்த்து மொற்சிகின’ என்ற பாட்டுக்கு இந்திராவும் அவளுடைய மூன்று வயது பெண்ணும் காற்றில் பானை பிடிக்கிற மாதிரி கைகளை ஆட்டி ஆட்டி நடித்துக் கொண்டிருந்தார்கள்.

க்யூட் குட்டி!!! என்று கமெண்ட் போட்டுவிடும் போது தான் பார்த்தாள். அவளுக்கு முந்தைய கமெண்ட் போட்டிருந்தவரின் பெயர் ஆனந்த் ஸ்ரீதர். அந்த S. ஆனந்தாக இருக்குமோ என்று தோன்றியது. முதுகுத்தண்டின் அடியில் சில்லென்று ஆகியது. சட்டெனத் தனது கமெண்டுக்கு பக்கத்திலிருந்த மூன்று புள்ளிகளை அழுத்தி, அந்த கமெண்டை அழித்தாள். ஆனந்தின் பெயரை அழுத்தி அவனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்தாள். அதே ஆனந்த் தான், கொஞ்சம் ஒள்ளியாய், மீசை வளர்த்து, கையில் ஒரு குழந்தையை கட்டி அணைத்துக் கொண்டபடி. அவன் தோள்பட்டையில் முகம் வைத்தவாறு சேலை கட்டிய பெண். மனைவியாய் இருக்கலாம், அழகாய்த் தான் இருக்கிறாள் என்று தோன்றியது.

ஆனந்த் ஆறாம் க்ளாஸில் St.John’s இருந்து ட்ரான்ஸ்ஃபர் வாங்கி வந்து இவளுடைய வகுப்பில் சேர்ந்தவன். பணக்கார பையன் ஆதலால் வந்த இரண்டாம் வாரத்திலிருந்து வகுப்பில் ஏகப்பட்ட நண்பர்களைச் சேர்த்துக் கொண்டான். ஒரு நாள், இவளைப் பார்த்தவுடன் ஏனோ எகத்தாளமாய், “சித்திர குள்ளி மல்லி” என்றான். மல்லி தனது ஒத்த வயது பெண்களை விட உயரம் குள்ளமாய் தான் இருப்பாள். ஆனால் அன்று தான் அது அவளுக்கு உரைத்தது. அன்றைக்குப் பிறகு யாரைப் பார்த்தாலும் தன்னை விட குள்ளமா உயரமா என்று ஒரு முறை மனதால் அளக்க ஆரம்பித்தாள். ஆசிரியர் இல்லாத நேரத்தில், “சித்திர குள்ளி யாரு… நம்ம மல்லி” என்று சத்தமாய் வகுப்புக்கே கேட்கிற மாதிரி ஆனந்த் கத்துவான். ஒரு மாதத்தில் அது பக்கத்து வகுப்புகளுக்கு, ஸ்கூல் பஸ் எனப் பரவி வீட்டின் அருகில் இருக்கும் பையன்கள் வரை பரவிவிட்டது. கூடலூரு குண்டு மல்லி பாடலை கூடலூரு குள்ள மல்லி என்று மாற்றிப் பாடினார்கள். ட்யூஷன் சென்டரில் யாரோ அவளை அப்படிக் கூப்பிட்டார்கள். பங்குனி உத்திரத்தின் போது கோவிலில் அவள் பெயரைக் கத்தினார்கள். நூலகத்தில், பூங்காக்களில், பீச்சில், சினிமாக்களின் இடைவேளையில் என்று கல்லூரி வரை அந்தப் பெயர் நிலைத்துப் போனது.

சட்டென்று நினைவுக்கு வந்தவளாய், இன்ஸ்டாகிராமை விட்டு வெளியே வந்தாள். ”சித்திர குள்ளி மல்லி” என்று இன்ஸ்டாகிராமிலிருந்து ஆனந்தின் குரல் கேட்டது. நிற்காமல் அழுகை வந்தது.

இசை · எழுத்தாளர்கள் · பதிவுகள்

நமக்கு ஏன் இசை பிடிக்கிறது?

ஆர்தர் சி. கிளார்க்கின் Childhood’s end என்ற நாவலில், ஆறிவுஜீவிகளான வேற்றுகிரகவாசிகள் சிலர் ஒரு கச்சேரியில் கலந்துகொள்ள பூமிக்கு வருகிறார்கள். கச்சேரியின் இறுதியில், இசையமைப்பாளரை வாழ்த்துகிறார்கள் ஆனால் இன்னும் அவர்களுக்கு ஒன்று புரியவில்லை. மனிதர்கள் இசையை உருவாக்கும்போது அல்லது கேட்கும்போது என்ன நடக்கிறது என்று அவர்களால் சிந்திக்க முடியவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு அதே இசையைக் கேட்கும் பொழுது அவர்கள் மனதில் எதுவுமே நடப்பதில்லை. அவர்களுக்குள் இசை என்றே ஒன்று இல்லை. அவர்கள் தங்கள் உலகத்திற்கு தங்கள் விண்கலங்களில் திரும்பிச் செல்வதை நாம் கொஞ்சம் கற்பனை செய்து பார்க்கலாம்.

” இவனுங்க இசைன்னு சொல்ற இந்த விஷயம் எதோ ஒருவிதத்தில இந்த மனுஷங்களுக்கு பயன்படுற மாதிரி தோணுது, சில சமயம் இவிங்க வாழ்க்கையில ரொம்ப முக்கியமா கூட இருக்குது. இருந்தும் அதற்கு எந்த விதமான ஒரு வடிவமும் இல்லை. ”

“ கரெக்ட், இத்தனை பில்லியன் பேர் இசைக்காக இத்தனை நேரம் செலவழிச்சு, அர்த்தமே இல்லாத ஏதோ சத்தங்களோட விளையாடுறானுங்க, கேட்கறானுங்க பாஸ்”

இப்படி இந்த அறிவுஜீவி வே.கி.வாசிகள் தலையைச் சொறிந்து கொள்வது தெரிகிறது. நமக்கும் கூட இசையென்பது என்ன என்பது பற்றி கேள்விகள் உண்டு. இசை என்ற இந்த சத்தங்கள் ஒரு நாள் நம்வாழ்விலிருந்து மறைந்து போனால் நம் வாழ்க்கை குறைபட்டதாக ஆகிவிடுமா? இசையில்லாத வாழ்வை யோசித்துப் பார்ப்பதற்குப் பயமாக இருந்தாலும் விஞ்ஞானம் சொல்வது என்ன என்பது தான் ஆலிவர் ஸாக்ஸின்(Oliver Sacks) புத்தகமான – மியூ­ஸி­கோ­பீ­லியா.

ஆலிவர் ஸாக்ஸ் ஒரு நரம்பியல் நிபுணர். அவர் எழுதிய அவரின் நினைவுக்குறிப்புகள் – On the move நிறையப் பிடித்திருந்ததினால் இதைப் படித்துப் பார்த்தேன்.

ஸாக்ஸ் சொல்ல வருவது இதைத்தான் – நம் மூளையினுள் இசைச் சதுக்கம் (music center) என்று ஒன்று இல்லை. ஆனாலும் இசை என்பது எங்கோ ஆயிரமாயிரம் ந்யூரான்களில் ஒளிந்துள்ளது. இந்தப் புத்தகத்தில் இசைக்கும் மூளைக்கும் இருக்கிற உறவையும், அவர் பார்த்த இசை சம்பந்தமான நரம்பியல் நோயாளிகளின் கதையையும் சுவையாகச் சொல்கிறார்.

இதில் ஒரு கதை என்னை வசிகரித்தது. அந்தக் கதையின் கருவும் இளையராஜா ஒரு முறை சொன்ன பதிலும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.

இளையராஜாவிற்கு ஒரு கேள்வி

(தொடரும்…)

பதிவுகள் · மற்றவை

பெளதிக ஜல்லி

ஸ்டெபி கிராப்
ஸ்டெபி கிராப்

டென்னிஸ் ஆட்டக்காரர்கள் ஒரு சர்வ் செய்யும் முன் பந்தை ஏன் அத்தனை முறை கீழே அடிக்கிறார்கள் என்று யோசித்ததுண்டா? சுலபமான கேள்விகளுக்கு என்றுமே கடினமான பதில்கள் தான். இதற்குப் பல விதமான காரணங்கள் இருந்தாலும் கொஞ்சம் பெளதிகம் பக்கம் போய் ஜல்லியடிக்கலாம். முதலில், மற்ற காரணங்கள் –

  1. ரொம்பவும் சிம்பிளாக பல ஆட்டக்காரகளுக்கு அது ஒரு சடங்கு. டென்னிஸ் ஆட ஆரம்பிக்கும் போது கற்றுக்கொள்ளும் பால பாடம், பந்தை சரியாக பவுன்ஸ் செய்து மட்டையில் பட வைத்தல். ஸ்ரீகாந்த் மூக்கு உறிவது, சூரியனைப் பார்ப்பது போல், சச்சின் இடது தோள் பட்டையைச் சுழற்றுவது போல். நோவாக் ஜோகோவிச் ஒவ்வொரு முறையும் கிட்டத்தட்ட 12-15 முறை பந்தை பவுன்ஸ் செய்யப் போய், “ஸ்டாப் இட்” என்றெல்லாம் ரசிகர்கள் கத்தியிருக்கிறார்கள்.
  2. சரியான ஒரு நிலைக்குத் தன்னை கொண்டு வரலாம் – பந்தை பவுன்ஸ் செய்யும் நொடிகளில் சரியான கவனக்குவிப்பு நடைபெறலாம், உடம்பை சரியான ஒரு நிலையில் கொண்டு வர முடியும்.
  3. மாட்ச் தனக்கு எதிராகப் போய்க் கொண்டிருந்தால், கொஞ்சம் நிதானம் வரவழைத்துக் கொள்ளலாம்.
  4. போன சர்வில் இருந்து மீண்டு மூச்சை சீராக ஆக்கிக் கொள்ளலாம்.
  5. அடுத்த சர்வில் என்ன செய்யப் போகிறோம் என்ற யோசனை, ஒரு வகையான காட்சிப்படுத்துதல்(visualization) செய்து கொள்ளலாம்.

இவற்றைத் தவிர இயற்பியல் காரணமும் இருக்கிறது. பொதுவாக ஒரு டென்னிஸ் பந்தினுள் நைட்ரொஜன் வாயு அல்லது காற்றுடன்(இதுவும் வாயு தான்) நிரப்பப்படுகின்றன. எல்லா வாயுக்களைப் போலவே, டென்னிஸ் பந்தின் உள்ளே இருக்கும் காற்றும் அது ஆக்கிரமித்துள்ள இடத்தை நிரப்ப எளிதாகச் சுற்றி நகர்கிறது. தளர்வாக ஒழுங்கமைக்கப்படுவதால் (loosely organized), வாயுவின் மூலக்கூறுகள்(ஆங்கிலத்தில் மாலிக்யூல்கள்) ஒன்றுடன் ஒன்று இடித்துக்கொள்கிற மாதிரியோ அல்லது பிரிகிற மாதிரியோ நகரலாம் (இது பௌதிக விதி), இதனால் வாயு மிக எளிதாக விரிவடைகிறது அல்லது சுருங்குகிறது.

ஒரு டென்னிஸ் பந்து தரையில் படும்போது, தரை பந்தின் மீது ஒரு விசையைச்(force) செலுத்தி, மேல்நோக்கி அழுத்தி, பந்தின் அடிப்பகுதியை உள்நோக்கித் தள்ளுகிறது. இந்த விசை பந்தின் உள்ளே இருக்கும் வாயுவை அழுத்துகிறது. உடனடியாக, வாயு மீண்டும் விரிவடையத் தொடங்குகிறது, பந்தை அதன் இயல்பான வடிவத்திற்குத் திருப்புகிறது. இந்த ஸ்பிரிங் போன்ற செயலினால் பந்தை மீண்டும் காற்றில் குதிக்க வைக்கிறது. ஆக ஒரு டென்னிஸ் ஆட்டக்காரர் பந்தை சர்வ் செய்யும் முன்பு இப்படி பந்தை அடிப்பாராயின் ஒவ்வொரு முறையும் அந்த விசை செலுத்தப்பட்டு பந்து மேல்நோக்கி நகர்கிறது. இது ஒரு விதத்தில் பந்தின் வேகத்தைச் சற்றே அதிகமாக்குகிறது.

ஒரு குறிப்பிட்ட டென்னிஸ் பந்து எவ்வளவு உயரத்தில் துள்ளும் என்பது பந்தின் உள்ளே இருக்கும் காற்றின் அழுத்தத்தைப் பொறுத்தது. பௌதிகத்தில் இந்த அழுத்தத்தின் அளவைக் கண்டறிய ஒரு சமன்பாட்டை பயன்படுத்தலாம்: p=rRT, இங்கு “p” என்பது அழுத்தம்(pressure), “r” என்பது அடர்த்தி(density), “R” என்பது வாயுவின் constant மற்றும் “T” என்பது தட்ப வெப்பநிலை(temperature).

இந்த சமன்பாட்டில் வெப்ப நிலையைத் தவிர மற்ற எல்லாமும் மாறாமல் இருக்கும் என்று வைத்துக் கொண்டால்(இவற்றை அவ்வளவு எளிதாக ஒரு டென்னிஸ் பந்தில் மாற்ற முடியாதென்பதால்), அதிக வெப்பநிலை அதிக அழுத்தத்திற்கு வழிவகுக்கும் என்று புரிந்து கொள்ளலாம். ஏனென்றால், வெப்பநிலை அதிகரிக்கும் போது பந்தின் உள்ளே இருக்கும் வாயு மூலக்கூறுகள் விரிவடைகின்றன. வாயு மூலக்கூறுகள் விரிவடையும் போது, அவற்றின் ஆற்றல் அதிகரிக்கிறது மற்றும் அவை பந்தின் உள்ளே வேகமாகச் சுற்றி வருகின்றன. அதனால்தான் அதிக அழுத்தம் பந்தின் அதிக துள்ளலுக்கு வழிவகுக்கிறது. டென்னிஸ் விளையாட்டின் போது பெரும்பாலான ஆட்டக்காரர்கள் சர்வீஸின் வேகத்திற்குப் பந்தின் விரைவான துள்ளலை நம்பியிருக்கிறார்கள். அந்த துள்ளலுக்காகத் தான் ஆட்டக்காரர் ஒரு பந்தைப் பல முறை அடித்து அடித்து அதன் உஷ்ணத்தை அதிகமாக்கி சர்வ் செய்கிறார்.

எதிர்காலத்தில் இந்த பந்துகளினுள் சிலிக்கான் சிப்புகள் பதித்து வரப்போகின்றன. “அடிச்சது போதும், சட்டுனு சர்வ் பண்ணித் தொலை” என்று உள்ளிருந்து கணினிப்பெண் குரல் கேட்க வாய்ப்புண்டு.