Month: April 2021
-
கரோனாவாசம்
போன வருடம் பிப்ரவரி 29ம் தேதி அமெரிக்காவின் முதல் கரோனா(கொரோனா அல்ல) துக்கம் நடந்தது என் வீட்டின் கொல்லைப்புரத்தில் இருக்கும் ஆஸ்பத்திரியில். ஆறு மைல் தள்ளி இருக்கும் கர்க்லாண்டில் அகாலமாய் அந்த மரணம் நிகழ அமெரிக்காவே வாய் திறந்து பார்க்க, இந்தியன் ஸ்டோரில் மில்க்பிக்கீஸ் வாங்கப் போனவன் இந்த நியூஸ் கேட்டு இன்னும் இரண்டு பாக்கெட்களை அள்ளிக் கொண்டு வந்தேன். அதன் பிறகு உலகத்தில் நடந்தது எல்லாம் வரலாற்றுப் புத்தகங்களுக்கானது. வைரஸ் வந்து, எல்லோரும் பீதியில் உறைந்து…