Month: April 2017
-
அசோகமித்திரன்
[புகைப்படம்: அவுட்லுக்] மாடியிலிருந்து எட்டிப்பார்த்தார் அசோகமித்திரன். கைனடிக் ஹோண்டாவை ஓரமாய் பார்க் செய்து விட்டு ஏறிட்டுப் பார்த்தேன். பல்லைச் சற்றே கடித்தபடி கவலையோடு என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். முன்னால் மாட்டியிருந்த ப்ளாஸ்டிக் பையை எடுத்துக் கொண்டு அவர் இருந்த அபார்ட்மெண்ட் கட்டிடத்தின் மாடியேறினேன். ”உள்ள வாங்க, அதோ அந்த ரூம்ல இருக்கார்” என்றார் ஒரு பெண்மணி, அந்த அப்பார்ட்மண்டின் க்ரில் கேட்டை திறந்தபடி. மனைவியாய் இருக்கும் என்று முடிவுசெய்து, வாங்கி வந்திருந்த மாம்பழப் பையை அவரிடம் கொடுத்தேன்.…
subbudu