Month: May 2007
-
காணவில்லை
இளைஞர்களின் கோலிவுட்டை, இந்த படத்திற்கு பின்னர் காணவில்லை. தேடிப்பார்கிறேன் காற்றோடு. அப்பாஸ் ட்ரம்ஸ் அடிக்கிற மாதிரி நினைத்துக் கொண்டு சைகை செய்து நடந்து போவார், போன வாரம் கூட பீச்சில் ஒரு யுவா, அதே போல ஒரு பெண்ணின் பின்னால். Strikingly similar. ஒரே ஞாபகம்ஸ்.
-
அறிமுக ப்ரேரரக்
சுஜாதா ஒர் எளிய அறிமுகத்தை, அறிமுகப்படுத்த மட்டுமே முடிந்தது. தினமும் சுஜாதாவை படிப்பதால், போகிற போக்கில் எழுதி விடலாம் என்று நினைத்தால், கல். அந்த குட்டி பயோகிராபிக்கு, பதினைந்து புத்தகங்களை வைத்து கொண்டு நோட்ஸெடுத்து, connecting the dots செய்வதற்குள் ஆறு மணிநேரமாகி விட்டது. வார இறுதியில், பல மாதங்களுக்கு பிறகு சியாட்டலில் சூரியன் தென்பட்டதால், புத்தகத்தையும் காமிராவையும் தூக்கிக் கொண்டு பீச்சுக்கு சென்று விட்டேன். நேரம் கிடைக்கும் போது அந்த தலைப்பில் எழுத நினைத்ததை முடிக்க…
-
தேவன் வருகை
வெள்ளிக்கிழமை அன்று, ஆபீசில் இருந்த அனேகர் கிளம்பிய பின்னர், கடலை பார்த்துக் கொண்டிருந்தேன். கொஞ்சமாய் இருட்ட ஆரம்பித்தது. சடசடவென ஒரு 10-15 நிமிடத்தில், கொஞ்சம் நன்றாக இருட்டி, மேகத்தின்னூடே சூரிய கதிர்கள் வர ஆரம்பித்தன. புதுசாய் வாங்கிய காமிராவை பக்கத்தில் வைத்துக் கொண்டிருந்த எனக்கு கொண்டாட்டம். ஒரு இருபது போட்டோக்கள் எடுத்து தள்ளினேன். ஒரு ஆறு தான் தேறியது. அதை வைத்து தேவன் வருகை என கதை சொல்ல முடியும். ஃப்ளிக்கரில். அந்த ப்ளு டிஞ்ச் இருட்டை…
-
ஹாப்பி பர்த்டே டியூட் !! – சுஜாதா ரங்கராஜன்
http://vimeo.com/moogaloop.swf?clip_id=5037086&server=vimeo.com&show_title=0&show_byline=0&show_portrait=0&color=ffffff&fullscreen=1 வாழ்வின் சில கடின நேரங்களையும், பல சாதாரண வருடங்களையும் சலிப்பில்லாமல் ஓடச்செய்த ஒரு கலக்கல் எழுத்தாளருக்கு 73ம் பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்னுமொரு நூற்றாண்டிரும் !! இந்த பிரபஞ்சத்தின் ஆரம்ப கணத்தில் இருந்து தொப்பையில் பஞ்சு வருவது வரைக்கும் எல்லாவற்றையும் எழுதும் எழுத்தாளர்கள் குறைவு. அந்த நோக்கில் பார்த்தால், இப்படி ஒரு prolific எழுத்தாளர், சுவாரசியமாகவும் எழுதுவது ஒரு கடின காம்போ. தாங்க் யூ வாத்யாரே !! சுஜாதாவின் இந்த நேர்காணல் கடந்த ஆண்டு விஜய்…
-
கேள்விகள் ஆயிரம்
தீயின் மனமும் நீரின் குணமும் தெளித்துச் செய்தவள் நீ நீயா ? தெரிந்தப் பக்கம் தேவதையாக தெரியாப் பக்கம் பேய் பேயா ? நேரம் தின்றாய் நினைவைத் தின்றாய் என்னைத் தின்றாய் பிழையில்லையா ? வேலைவெட்டி இல்லாப் பெண்ணே வீட்டில் உனக்கு உணவில்லையா ? இருவிழி உரசிட ரகசியம் பேசிட இடிமழை மின்னல் ஆரம்பம் பாதம் கேசம் நாபிக்கமலம் பற்றிக்கொண்டதும் பேரின்பம் தகதகவென எரிவது தீயா ? சுடச்சுடவெனத் தொடுவது நீயா ? தொடுத் தொடுவெனச் சொல்லுகின்றாயா…