kirukkal.com

  • about
  • archive
  • all that is
  • photoblog
  • July 13, 2014

    நியூயார்க்கர் கார்ட்டுன் வாசகம் #434

    newyorker_cartoon_434

    போன வாரப் பதிவு.

  • June 3, 2014

    நியூயார்க்கர் கார்ட்டுன் வாசகம் #431

    newyorker_cartoon_431

    போன வாரப் பதிவு.

  • May 27, 2014

    நியூயார்க்கர் கார்ட்டுன் வாசகம் #430

    newyorker_cartoon_caption_contest_430

    போன வாரப் பதிவு.

  • May 26, 2014

    நூலக ஞாபகம்

    லயன்காமிக்ஸ்

    அஷ்வினுடன் பேசிக்கொண்டிருக்கும் போது சிறுவயதில் தனியாக வீட்டில் நூலகம் நடத்தியது ஞாபகம் வந்தது. ஐந்தாவதோ ஆறாவதோ படித்துக் கொண்டிருந்தேன். அந்த கோடை விடுமுறையில் திடீரென்று கையில் இருந்த புத்தகங்களை எல்லாம் போட்டு ஒரு நூலகம் வைத்து சம்பாதிக்கலாம் என்று ஏனோ தோன்றியது. காரணம் சரியாக ஞாபகம் இல்லை. எங்கேயாவது படித்ததாலோ அல்லது “அவனப் பாரு, எப்படி சூட்டிகையா இருக்கான்” என்று யாரையோ காட்டி விட்டுப் பெரியவர்களில் யாரோ சொன்னதாலோ இருக்கலாம்.

    நாங்கள் இருந்த அந்த புரசைவாக்க வெள்ளாளத் தெருவின் சற்றே பெரிய சந்தில் 50-60 வீடுகள் இருந்தன. அந்த வீடுகளை தற்போதுள்ள அப்பார்ட்மெண்ட் காம்பெளக்ஸிற்கு ஒப்பிடலாம். எல்லா வீட்டிலும் ஒரிரு குழந்தைகளாவது இருந்தார்கள். இப்படி எல்லாம் மார்கெட் ஸ்டடி செய்தேனா என்று தெரியாது. ஆனால் நினைத்த இரண்டொரு நாளில் நூலகம் ஆரம்பித்து விட்டேன்.

    கையில் நூறு புத்தகங்களாவது இருந்தன. லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸில் ஆரம்பித்து பூந்தளிர், ரத்னபாலா, அம்புலிமாமா, கோகுலம், அமர் சித்ர கதா என்று என் வயது சிறுவர்கள் படிக்கும் புத்தகங்கள். அவ்வப்பொது ஒரு ஸ்போர்ட்ஸ் ஸ்டாரும், ரீடர்ஸ் டைஜஸ்டும் அகப்படலாம். வீட்டுல் எல்லாரும் தூங்கிய பிறகு, அந்த புத்தகங்களை அள்ளிப் போட்டு ஒவ்வொன்றிலும் நம்பர் எழுத ஆரம்பித்து விட்டேன். அதை தவிர அதை படிக்கும் சார்ஜ் என்று நானாய் முடிவு செய்த விஷயங்கள். அமர் சித்ர கதாவாயிருந்தால் 50 காசு, ராணி காமிக்ஸிற்கு பத்து காசு, தீபாவளி மலருக்கு 75 காசு என்று எனக்கு மட்டுமே புரிந்த கணக்கு.

    பெட்ரூம் அலமாரியில் இருந்த அத்தனையையும் தூக்கி தூர வைத்து விட்டு இந்த புத்தகங்களை உயர வாரியாக அடுக்கி வைத்தேன். ஒரு பழைய துணியை அயர்ன் செய்து திரையிட்டேன். நூலகத்திற்கு பெயர் வைத்ததாய் ஞாபகமில்லை. அடுத்த நாள் என் நூலக மினி திறப்பு விழா. கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்த நண்பர்களிடம் விஷயம் சொன்னவுடன் கொஞ்சம் புரியாமல் மட்டையை கிழே போட்டுவிட்டு நூலகத்தை பார்க்க வந்தார்கள். அந்த நூறு புத்தகங்களை ஒரு நூலகமாக அவர்களால் ஏற்றுக்கொள்ள முடிந்ததா என்று தெரியவில்லை. ஒரு புத்தகத்தையும் எடுக்காமல் போய்விட்டார்கள்.

    அடுத்த நாள் ரவி வந்து ஒரு ஸ்பைடர் புத்தகத்தை எடுத்துப் போனான். சதீஷ் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் எடுத்தான். ரவி எடுத்து போன புத்தகத்தை ரோட்டில் வைத்து விட்டு கிரிக்கெட் விளையாடப் போய்விட்டான். ஒரு கல்லின் மேல் தனியாக கிடந்த என் புத்தகத்தை பார்த்த அந்த கணத்தில் புரிந்து போனது, என் புத்தகங்கள் தான் என் பொக்கிஷம். அந்த புத்தகத்தை எடுத்துப் போய் வீட்டில் வைத்தேன். லைப்ரரி மூடப்பட்டது. இன்று வரை.

  • May 22, 2014

    நியூயார்க்கர் கார்ட்டுன் வாசகம் #429

    newyorker caption contest 429 may 22 2014

    ஒவ்வொரு வாரமும் நியூயார்க்கர் பத்திரிக்கை ஒரு கார்ட்டுனுக்கு வாசகர்களின் வாசகங்களை ஏற்றுக்கொள்கின்றது. நியூயார்க்கரின் கார்ட்டூன்களுக்கு ஒரு நூறு வருட பாரம்பரியம் இருக்கிறது. அதற்கேற்றார் போல் இந்த மாதிரி கார்ட்டுன் வாசகம் எழுதுவதற்க்கும் ஒரு எழுதப்படாத இலக்கண விதி இருக்கிறது. கடந்த ஒரு வருடமாக வாரா வாரம் நானும் வாசகம் எழுதிக் கொண்டிருக்கிறேன், கொஞ்சம் பிடிபட்ட மாதிரி தோன்றுகிறது.

    நியூயார்க்கரில் தான் எழுதுவதை பிரசுரிக்க மாட்டேன் என்கிறார்கள், நானும் விக்கிரமாதித்தனாய் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இங்கேயாவது அதை போட்டு வைக்கலாம் என்று தோன்றுகிறது. இந்த வாரம் முதல்.

←Previous Page
1 … 17 18 19 20 21 … 316
Next Page→
  • about
  • archive
  • all that is
  • photoblog
 

Loading Comments...
 

    • Subscribe Subscribed
      • kirukkal.com
      • Join 26 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • kirukkal.com
      • Subscribe Subscribed
      • Sign up
      • Log in
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar