Category: ஸ்பார்கி
-
இன்னபிற
சதா எழுதிக்கொண்டிருப்பதே ஒரு நல்ல பழக்கம் தான், எழுத்தாளனுக்கு. ஒரு கணினிப் பொறியாளனுக்கும் அதே போலத் தான், கணினியில் வேலைப் பார்ப்பது. நிற்க. கணினித் தொழில் செய்து கொண்டே எழுத நினைப்பவர்கள், சற்றே யோசிக்கவும். ஒரு பத்து நாள் எழுதாமல் இருந்து விட்டால், எழுத நினைத்தாலும் முடிவதில்லை. கணினி ப்ரோக்கிராமும் சரி, கன்னித் தமிழும் சரி, ஒரே மாதிரி தான். பயிற்சி பயிற்சி. ஒரு மாதமாவது அந்தப் பக்கம் போய் விட்டு வரலாம் என்பதற்குள், இந்தப் பக்கம்…
-
கடயநல்லூர் ராமசாமி, ஸீரோ டிகிரி மற்றும் டைம் பாஸ்
வழக்கம் போல இந்த ஞாயிறு பத்திரிக்கையையும் யாரோ சுட்டுக் கொண்டு போய் விட்டார்கள். இதுவரை நான் பேப்பர் போட மறந்து விட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால் போன ஞாயிறன்று, பேப்பர் எடுக்காமல் வெளியே போய் திரும்பி வந்தால் பேப்பரை காணோம். எந்த பிரகஸ்பதியோ டிஸ்கவுண்ட் கூப்பனுக்காக எடுத்து கொண்டு போய் விட்டார். இந்த வாரமாவது, திருடனை பிடிக்க ஆறரைக்கு கண் விழித்த போது, ஸ்பார்கி குரைத்து கூச்சல் போட்டது. “ஆஹா ஸ்பார்கி !! திருடனை பிடித்ததற்கு உனக்கு…
-
கூகிள் ரீடர் 2.0
காலையில் ஸ்பார்கி குரைத்தது. ஸ்பார்கி[sparky], என் பக்கத்து அப்பார்ட்மெண்டின் செல்ல ஜெர்மன் ஷெப்பெர்டு. நான் இந்த அப்பார்ட்மெண்டுக்கு ஜாகை வந்த போது, முதல் இரண்டு நாள் இரவில் குரைத்து முறைத்தது. அந்த வீட்டில் இருந்த பொக்க வாய் ஸ்பானிஷ் பாட்டி, துணி துவைக்கும் போது, ஹாய் சொன்னவுடன் தான் ஸ்பார்கி கனிவு பார்வை பார்த்தது. ஸ்பார்கி என்னை போல் ஒரு அம்மாஞ்சியை பார்த்தால் தான் குரைக்கும். எதிர் வீட்டு ஆஜானுபாகு Nickகை பார்த்தால், love seatயில் முகம்…