Category: பயாஸ்கோப்
-
புதுப்பேட்டை
போன வருடம் வந்த படங்களில், எந்த படம் சிறந்த படம் என்று ஏகத்துக்கு எழுதி குவித்து விட்டார்கள். டீவிடி அட்டைகளுக்கு கதை சுருக்கம் எழுதுபவர்கள் கூட விமர்சகர் போர்வையில் தமிழ் சினிமா விமர்சனம் எழுதும் இந்த கலேபர காலத்தில் உண்மையான சிறந்த படம், கவனிக்கப்படுவது கடினமே. போன வருடத்தில் நிறைய தமிழ் படம் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லையென்றாலும், பார்த்த பத்து பன்னிரண்டில் பிடித்தது இவ்விவை. புதுப்பேட்டை மற்றும் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது. இவ்விரண்டும் எந்த லிஸ்டிலும்…
-
மணியும் ரத்தினங்களும்
ஆடிக்கொரு முறை தான் வரும் மணி ரத்னத்தின் படம். அவர் படம் பற்றி அவரை விட மற்றவர்கள் நிறைய பேசுகிறார்கள். “…த்தா படன்னா இப்படி நச்சுனு இருக்கணுன்டா” என்று விடலைகளும், “மனிஷாவும் அரவிந்த்சாமியும் மீட் பண்ணும் போது காமிரா என்னமா திரும்பறது, அப்சலூட்ளி கார்ஜியஸ்” என்று இன்னோவா ஓட்டும் லயன்ஸ் க்ளப் மாமிகளும், “ஆய்த எழுத்தின் பின்னணியில் நடப்பு அரசியலின் சுயநலமும், இலக்கமற்ற வெற்று கோஷங்களும், அதிகார வெறியும் விஷயங்களை மொண்ணையாக புரிந்து கொள்ளும் மெளடீகமும் உள்ளன…
-
தமிழ் – மணிரத்னம் – குரு
இந்தியிலிருந்து தமிழில் டப் செய்யப்படும் மணிரத்னத்தின் குரு டிரைலர், இந்தியா க்ளிட்ஸிளிருந்து.
-
தீபாவளி, தலைவலி
இந்த தீபாவளிக்கு தமிழ் சினிமாவின் மேல் உள்ள நம்பிக்கைகள் மேலும் குறைந்தன. இத்தனைக்கும் பார்த்தது இரண்டே தீபாவளி ரிலீஸ்கள் தான். வரலாறு – வல்லவன். தமிழ் சினிமாவின் சாஸ்வதமான பத்து பார்முலாக்கலில், இவை இரண்டும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும். காதலுக்காக வேஷம் போடும் காதலனும், பிறந்ததும் தன்னை பிரிந்த தந்தையை தேடிச் செல்லும் ஒரு பிள்ளையும் தமிழ் சினிமாவின் ஆதி காலத்து வரவுகள். வல்லவன் பார்த்துவிட்டு திரும்பும்போது பிடித்த தலைவலி விட ரெண்டு நாளாகியது. கதையல்ல நிஜம்.…