Month: February 2024
-
நியூயார்க்கர் கார்ட்டுன் வாசகம் #885
ஒவ்வொரு வாரமும் நியூயார்க்கர் பத்திரிக்கை ஒரு கார்ட்டுனுக்கு வாசகர்களின் வாசகங்களை ஏற்றுக்கொள்கின்றது. நியூயார்க்கரின் கார்ட்டூன்களுக்கு ஒரு நூறு வருட பாரம்பரியம் இருக்கிறது. அதற்கேற்றார் போல் இந்த மாதிரி கார்ட்டுன் வாசகம் எழுதுவதற்க்கும் ஒரு எழுதப்படாத இலக்கண விதி இருக்கிறது. கடந்த சில வருடங்களாக வாரா வாரம் நானும் வாசகம் எழுதிக் கொண்டிருக்கிறேன், கொஞ்சம் பிடிபட்ட மாதிரி தோன்றுகிறது. நியூயார்க்கரில் தான் எழுதுவதை பிரசுரிக்க மாட்டேன் என்கிறார்கள், நானும் விக்கிரமாதித்தனாய் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இங்கேயாவது அதை போட்டு வைக்கலாம்…
-
ப்ளாக், ப்லாக் மற்றும் பத்தொன்பது
திடீரென பழைய திரைப்பட விமர்சனத்துக்கு ஈமெயிலில் ஆரேழு கமெண்டுகள் வந்த போதே புரிந்திருக்க வேண்டும். என்னவென்று சென்று பார்த்தால் தான் தெரிந்தது – இன்றோடு சரியாக பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த பன்சாலியின் ப்ளாக் திரைப்படம் தற்போது நெட்ஃபிளிக்ஸில் வந்திருக்கிறது. அறிவிப்பைப் பார்த்து விட்டு ஜனம் முழுக்க அதைப் பற்றி இண்டர்நெட்டில் தேட, இன்னமும் கடையை மூடாமல் இருக்கும் அரதப்பழசான நம் ப்ளாகில் இருந்த பட விமர்சனம் கண்ணில் பட, நன்றி நன்றி என்று ஈமெயில்கள். முன்பெல்லாம்…