Month: January 2020
-
ஸ்டிரச்சர் கேஸ்
தமிழ் சினிமா இன்னமும் ஸ்டிரச்சர் கேஸ் தான். வருடத்திற்கு குறைந்தது இருநூறு திரைப்படங்களாவது திரைக்கு வருகின்றன (முந்நூறு பூஜைகள்). அதில் பத்துப் படம் போட்ட பணத்தை எடுத்தால் பெரிய விஷயம். ஒரு படமோ அல்லது அரை படமோ தான் மனதில் நிற்கும் படங்கள். மற்றவை எல்லாம், என் வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போன கதை தான். கடந்த பத்தாண்டில் வெளியான, நாயகனைப் போல், முள்ளும் மலரும் போல் ஒரு கால் நூற்றாண்டு கழித்தும் மனதில் நிற்கும் படங்கள் எவை…
-
மீண்டும் – இன்ன பிற
2010ல் தமிழ் பேப்பரில் பாரா எழுத சொல்லி இன்னபிற என்றொரு வாரப் பத்தி எழுதிக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று இரவு உட்கார்ந்து நள்ளிரவு வரை எழுதி முடித்து சொக்கனுக்கு அனுப்பி விட்டு தூங்கப் போவேன். அது வெளிவந்து கொண்டிருந்தபோது யாராவது ஒரு ஆசாமி – சூப்பர் ப்ரோ என்று டுவிட்டரில் சொல்வார். அதோடு சரி. ரொம்ப வரவேற்பெல்லாம் இருந்ததாக ஞாபகம் இல்லை. கிட்டத்தட்ட 25 வாரங்களுக்கு பிறகு வேலைப் பளு காரணமாக அப்பத்திக்கு ஒரு…
subbudu