பதிவுகள்

நிறையா? குறையா?

மற்றெதுவும் பேசுவதற்கு முன் இவ்விரண்டு பத்திகளை படிக்கவும்.

புத்தகக் காட்சி என்பது தமிழ் அறிவுலகத்தின் அடையாளம் போல் ஆகியுள்ளது. ஆண்டுதோறும் புத்தகக் காட்சியை ஒட்டி புது நூல்கள் வெளியிடப்படுகின்றன. நான் கடந்த 15 ஆண்டுகளாகத் தவறாமல் எனது புதிய நூல்களைச் சென்னை புத்தகக் காட்சியை முன்னிட்டு வெளியிட்டு வருகிறேன். நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. தமிழ்ப் புத்தகங்களுக்கான வாசகர்களின் எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டுகளில் மிக அதிகமாகியிருக்கிறது. இளைஞர்கள் படிப்பதில்லை என்பது பொய். விருப்பமான புத்தகங்களை மட்டுமே தேடிப் படிக்கிறார்கள் என்பதே நிஜம். உண்மையில் 40 முதல் 50 வயதுகளில் உள்ளவர்கள்தான் புத்தக வாசிப்பைக் கைவிட்டுவிட்டார்கள். வாழ்க்கை நெருக்கடியைக் காரணமாகச் சொன்னாலும், தொலைக்காட்சி, இணையம், அலைபேசி போன்றவை அவர்களின் நேரத்தை விழுங்கிவிடுகின்றன என்பதே உண்மை. இணையத்தில் நடைபெறும் ஆன்லைன் வர்த்தகம், புத்தக விற்பனையை மேலும் விஸ்தீரணம் செய்துள்ளது. ‘அமேசான் கிண்டில்’ போன்றவற்றின் வருகை ‘ஈ-புக்’ விற்பனைக்கான புதிய சாத்தியங்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் எழுத்தாளர்களே தனது புத்தகங்களை வெளியிடலாம். 55 சதவிகிதம் ராயல்ட்டி அவர்களுக்குக் கிடைக்கும்.

புத்தக வாசிப்பு என்பதை அறிவார்ந்தத் தேடுதலாக எவரும் நினைப்பதில்லை. இணையத்தில் எல்லாமே இருக்கிறது என்ற தவறான மயக்கம் பலரையும் பிடித்தாட்டுகிறது. இன்னொரு பக்கம் இலவசமாகப் புத்தகங்கள் தரவிறக்கம் செய்யக் கிடைக்காதா எனத் தேடுகிறார்கள். இதுதான் சமகாலச் சூழல். பை பையாகப் புத்தகங்களை வாங்கிக்கொண்டு போகிறவர்களில் பாதிப் பேர், அதில் ஐந்து நூல்களைக்கூடப் படித்து முடிப்பதில்லை. வீட்டு அலங்காரப் பொருள்களைப்போல புத்தகங்களும் மாறிக்கொண்டிருப்பது துரதிருஷ்டமே. எது நல்ல புத்தகம் என்று வாசகன் தேடிக் கண்டுபிடிக்கப் பெரும் சிரமம் உருவாகிவிட்டது. சந்தை வணிகத்துக்காகப் பதிப்பகங்கள் எவ்வித முறையான உரிமையும் பெறாமல் பல புத்தகங்களைப் பதிப்பிக்கின்றன. எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் ராயல்ட்டி பெரும்பான்மை யினருக்குக் கிடைப்பதே இல்லை. எழுத்தாளர்களின் அடிப்படைப் பிரச்னைகள் சார்ந்து குரல் கொடுக்க எவ்விதமான அமைப்புகளும் இல்லை என்பது கூடுதல் வருத்தம் தருகிறது. புத்தகக் காட்சி வழியாக வெளிக்காட்டப்படும் பிம்பம் தற்காலிகமானதே. எழுத்து சார்ந்த இந்த விற்பனைப் பெருக்கம், தமிழ் இலக்கிய உலகில் பெரும் மாற்றம் உருவாகிவிட்டதைப்போன்ற பொய்த்தோற்றத்தைத்தான் உண்மையில் ஏற்படுத்தி உள்ளது.

இரண்டும் நேரெதிர் கருத்துக்கள் கொண்டவை. எழுதியவர் ஒரே எழுத்தாளர் அதுவும் ஒரே கட்டுரையில் என்பது தான் குழப்பியடிக்கிறது. விகடன் தடம் இதழில் அவர் எழுதிய இந்த கட்டுரையின் தலைப்பு – சென்னை புத்தகக் காட்சி: வரவேற்பும் எதிர்பார்ப்பும் – எஸ்.ராமகிருஷ்ணன்.

நல்ல எழுத்தாளர்களே இப்படி செய்தார்களானால், கொஞ்ச நஞ்சம் படிக்கிறவர்கள் என்னாவது.

அமெரிக்கா · இலக்கியம் · சியாட்டல் · சியாட்டல் டைரி

தூக்கியடித்த தமிழ்


படம் – கேசவ்

இடம்: சியாட்டில். மணி: காலை ஆறேமுக்கால். கோவிலில் பட்டர் திருப்பாவை படித்த எல்லாரையும் முன்னே வந்து ஒரு அகல் விளக்கேற்ற சொல்கிறார். ஏற்றிய விளக்குகளை ஒரு தட்டில் வைத்து கருவறையில் எடுத்துப் போய் திரையிட்டுக் கொள்ள, ‘அசைந்தாடும் மயில்‘ பாடப்படுகிறது. பாடல் முடிந்தவுடன் ட்யூப்லைட்டுக்கள் அணைக்கப்பட, பிரகாரம் சற்றே இருட்டாகின்றது.

கருவறையில் இருந்து மணி அடிக்கிறது. ஓம் நாரயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹி என்று பட்டர் சமஸ்கிருதத்தில் காயத்ரி சொல்கிறார். சட்டென்று திரை விலக, கருவறையிலும் இருட்டு. முன்பு ஏற்றப்பட்ட அகல் விளக்குகள் ஆரத்தியாக பெருமாளுக்கு காட்டப்படுகிறது. அகல் விளக்குகள் சுடரொளியாக, சம்ஸ்கிருதம் நின்று கணீரென தமிழ்த் தொடங்க, எல்லோருமாய் ஒன்றாக திருப்பாவை 24 சொல்லத் தொடங்குகிறார்கள் –

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடமுதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி

பாதி பாசுரம் பாடிக் கொண்டிருக்கும் போதே அந்த இருட்டில் தெரிந்த ஆரத்தியின் சுடரொளியும், சுடர்கொடியின் தமிழும் தூக்கியடித்து ஏழாம் நூற்றாண்டில் போய் நான் விழ, ஆண்டாள் தெரிந்தாள். அவளோ கண்ணை மூடி கண்ணனை நினைத்து, பாதியில் நான் விட்ட திருப்பாவையை பாடிக் கொண்டே இன்னுமொரு நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சென்று கோகுலத்தில் நிற்கிறாள்.

குன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கு ஏல் ஓர் எம்பாவாய்

அவளின் தமிழ் என்னை கொஞ்சம் கொஞ்சமாய் hallucinate செய்ய, நடப்பது என்ன என்று புரிவதற்குள், ஆரத்தியை கொண்டு வந்து பட்டர் “கண்ணுல ஒத்திக்கோங்கோ” என்கிறார். ‘எனை காணவில்லையே நேற்றோடு’ வினீத்தைப் போல் கைகளை சுட்டுக் கொண்டு 21ம் நூற்றாண்டுக்கு திரும்பினேன்.

நம்மாழ்வார் சொன்ன அகலில் அகலும் அணுகில் அணுகும் புரிந்தது.

Blog · Book

Five books to re-read this winter

For never-resting time leads summer on, to hideous winter, and confounds him there – Shakespeare’s Sonnet 5

Although Shakespeare metaphorically refers to a youth’s prime and old age as summer and winter, he kept winter where it belongs. And this winter when ‘Bomb Cyclone‘ attacks, there must be enough reading material to beat the cold. Here are my pick to re-read and to #RuleTheWinter #LikeABoss.

1) Calvin and Hobbes by Bill Watterson – Last year, I got my son the Calvin and Hobbes series and he has been reading and re-reading it like a true 8 year old. Often, he would call me to read a strip with him as it was ‘too-funny to read alone‘. And as I read those random strips with him, I could recollect the joy I had reading them myself as a kid.

For starters, Calvin and Hobbes is a comic strip about a intelligent six-year old boy named Calvin and his imaginary(anthropomorphic) friend Hobbes. Bill Watterson the genius and reclusive creator of this comic series named Calvin and Hobbes after two philosophers, John Calvin and Thomas Hobbes. Going by that it’s the most entertaining philosophy book in the world and one that touches every aspect of human life. I would probably re-read this over and over.

Bill Watterson balanced the sensibilities very well with Calvin and Hobbes. Hobbes’ sarcasm and his dim-view about human nature is brilliant while Calvin is a straight shooter with no filters to his mouth whatsoever.

There are way too many memorable episodes of C&H(the one with the raccoon, the one with aliens etc..) to mention but a personal favorite is the final strip that summarizes the spirit of the comic. It always brings a tear to the eye while reading this one.

2) Zero to One: Notes on Startups, or How to Build the Future by Peter Thiel – While I manage to read a lot of tech blogs, books, articles and magazines, Thiel’s book was different. I read the book when it was published, and he re-framed my thinking with his controversial thesis – Competition is for losers. This was a persuasive and a refreshing take on monopolies creating the best value for an entrepreneur and the society. Wait…what?? So, is capitalism bad? “Not-really”, says Thiel. It’s just bad for the companies while its good for the customers.

The perfect target market for a start-up is a small group of particular people concentrated in a group but served by few or no competitors – Peter Thiel

He wants the next generation entrepreneurs to embrace monopoly using a) proprietary tech b) economies of scale c) network effects and d) great branding. Using these, startups can launch services to the smallest set of users who will help perfect the product like how Facebook was initially released only to Harvard students and how PayPal was released to just eBay customers.

Is this a self-help book for entrepreneurs? No, the book is an intellectual jog through the start-up world with contrarian insights like ‘focus as much on sales as on product’. In a way, the book became a sort of monopoly in its own business genre.

3. Sapiens: A Brief History of Humankind by Yuval Noah Harari – The broadest summary of human history ever told in 464 pages. Mind-boggling in its gargantuan goal and a minimalist in approach, Harari’s writing will make you re-think everything you know and will know.

A few million years ago, humans took the long view of life. They traded muscles for neurons. It led to a situation where a chimpanzee could rip through a human like a rag doll. But over the last 2.5 million years the humans used those neurons and evolved to the top-of-the food chain that no other species can stand in the way of them today. Yes, Harari’s story is the sweeping and exciting rise of homo sapiens into the super species. And some more. A must read.

4. Siddhartha by Hermann Hesse – This novel can also be called as The last temptation of Siddhartha as it reminds one of Nikos Kazantzakis’ controversial novel. It tells us the story of rich young man who leaves his home looking for self-realization but in the process, gets tangled in the web-of-life – starts to party hard, meets a girl, falls in lust and then in love, gets married, has a kid and then realizes he is living the life that he actually wanted to walk away from. Then in sheer despair stumbles upon enlightenment.

This is a story of everyone’s life – the paths we take, the mistakes we make and the lessons we learn along the way. Hermann Hesse is a German poet and this novel is written feverishly and poetically. The prose is flowing and arresting to point that one will usually read this in one sitting. There is a long discussion between Siddhartha and a ferryman Vasudeva that reminded me of the Tyler Durden monologue in Fight Club.

Best suited for cold, gloomy Sunday afternoons and for sure will leave a smile on your face.

5. A Fine Balance by Rohinton Mistry

“After all, our lives are but a sequence of accidents – a clanking chain of chance events. A string of choices, casual or deliberate, which add up to that one big calamity we call life.”

One of the best fiction novels that talks about the dark period of 1975-77 in India. While the background of the novel is about The Emergencythe novel about four lives that come together during this time.

Yes it’s tragic and very very depressing so in that sense its not a book for winter. However it is also the best book for winter for summer is not so far away. It may leave you heart-broken but the fantastic prose of Mistry will make up for it. Personally I read this a few years back and want to re-read it now.

Those are the five books I’m reading this season. You?