கண்ணீரில்லாமல்

sujatha

ஏழு வருடங்களுக்குப் பிறகும் வாரம் ஒருமுறையாவது ஞாபகத்துக்கு வந்து விடுவார். சில சமயம் பல நாட்கள். ஆகாய விமானங்கள் தடயமின்றி காணாமல் போனாலோ, இந்தியாவை சுத்தம் செய்கிறேன் என்று யாராவது சவடால் விட்டாலோ, ‘சே, வாத்தியார் என்ன சொல்லியிருப்பார்’ என்றே இன்னமும் தோன்றுவது அதிசயமல்ல.

அவரெழுதிய எந்த ஒரு புத்தகத்தை இப்போது படிக்கும் போதும், ‘இவருக்கு என்ன தான் புரியாமல் போயிருக்கும்’ என்று தோன்றுவதும் அதிசயமல்ல. முன்னமே சொன்னது போல், எத்தனை பெரிய ரிசஷனயும் மறக்கடிக்கும் எழுத்துக்களை தந்ததற்கு நன்றிகள் பல, வாத்யாரே !!

பி.கு – கண்ணீரில்லாமல் – சுஜாதா உயிர்மையில் 2004-05களில் எழுதிய கட்டுரைத்தொகுப்பு. அதில் சங்ககால காப்பிய சித்தர்கள் முதல் க்வாண்டம் தியரியின் கர்நாடக கிரிக்கெட் வரை வழக்கமான சகலமும் சௌக்கியம்.

One response to “கண்ணீரில்லாமல்”

  1. Vijay Avatar
    Vijay

    வாத்தியாரின் பேட்டி:
    கேள்வி கேட்டவர் இன்னும் அதிகம் வாத்தியாரைப் பற்றி “Observe” செய்திருக்கலாம்…!

    Like

Leave a comment