Month: November 2006
-
புத்தகமும் தமிழும்
குமுதம் டாட்காமில் ரவி பெர்னாட்டின் பேட்டிகளில், கிழக்கு பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் பா ராகவனுடனான பேட்டி ஐந்து பாகங்களாக காணக்கிடைத்தது. தமிழ் புத்தகங்கள் மற்றும் தமிழ் பதிப்புத் தொழிலின் தற்போதைய போக்கு பற்றி சற்றே அலசினார்கள். ரவி பெர்னாட் கொஞ்சம் குறுக்கிட்டு் அடுத்த கேள்விக்கு தாவாதிருந்தால் இன்னும் பல சுவாரசிய விஷயங்கள் கிடைத்திருக்கும். பா ராகவன் எப்போதும் ஒரு convictionனுடன் பேசுகிறார். தமிழ் புத்தகங்கள் இன்னும் நிறைய விற்கபோகிறது, தமிழ் புத்தக நேர்த்தி அதிகமாகியுள்ளது, அ-புனைவுகளை[non-fiction] மக்கள் விரும்புகிறார்கள்…
-
கட்டிப்புடி வைத்தியம்
# வசூல்ராஜாவில் கமலின் அம்மாவாக நடித்த ரோஹினி ஹத்தங்காடி, கமலுக்கு சொல்லிக் கொடுக்கும் கட்டிப்புடி வைத்தியம், உலக பிரபலமாகியிருக்கிறது. இரு வருடங்களாக சிட்னி் கடைத்தெருவில், யுவான் மான்[Juan Mann] என்னும் இளைஞர், வாரம் ஒரு நாள் முழுவதும், free hugs என்றெழுதிய ஒரு போர்டை பிடித்துக் கொண்டு, போகிற வருகிறவர்களுக்கெல்லாம் கட்டிப்புடி வைத்தியம் செய்கிறார். கட்டிப்புடி வைத்தியம் கட்டாயம் கிடையாது. ஒரே ஒரு சின்ன ஹக் தான். இந்த free hugs campaignனுக்கு யுவானின் காரணம்- என்ன…