Month: October 2006
-
கடயநல்லூர் ராமசாமி, ஸீரோ டிகிரி மற்றும் டைம் பாஸ்
வழக்கம் போல இந்த ஞாயிறு பத்திரிக்கையையும் யாரோ சுட்டுக் கொண்டு போய் விட்டார்கள். இதுவரை நான் பேப்பர் போட மறந்து விட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால் போன ஞாயிறன்று, பேப்பர் எடுக்காமல் வெளியே போய் திரும்பி வந்தால் பேப்பரை காணோம். எந்த பிரகஸ்பதியோ டிஸ்கவுண்ட் கூப்பனுக்காக எடுத்து கொண்டு போய் விட்டார். இந்த வாரமாவது, திருடனை பிடிக்க ஆறரைக்கு கண் விழித்த போது, ஸ்பார்கி குரைத்து கூச்சல் போட்டது. “ஆஹா ஸ்பார்கி !! திருடனை பிடித்ததற்கு உனக்கு…
-
சென்னையிலிருந்து புத்தகங்கள் – 1
என்ன தான் சென்னையிலிருந்த போது தமிழ் புத்தகங்களை தேடிப் பிடித்து படித்தாலும், அமெரிக்கவாசியான பின்பு தான், தமிழ் இலக்கிய ஆர்வம் பிய்த்துக் கொள்கிறது. தெரிந்தவர்களில் யார் வருவதாய் தெரிந்தாலும், உடனே ஒரு ஜிமெயில் பறக்கும். புக்ஸ் வாங்கி வர முடியுமா ? முடிந்தால், இந்தா பிடியுங்கள் லிஸ்ட். பலர் புத்தகம் தானே, டான்டெக்ஸ் இல்லாத வரை சரியன்று ஒத்துக் கொண்டு வாங்கி வருவார்கள். சிலர், இவன் யாருடா சுத்த கேணையா இருக்கான் என்று ஜகா வாங்குவார்கள். தப்பில்லை.…
-
இருவரில் ஒருவர்
நண்பர் ராம்கி தன் இரண்டு[1,2] புத்தகங்களையும், சியாட்டல் வந்த மற்றோரு நண்பர் மூலம் அனுப்பியிருந்தார். ராம்கி இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு இலக்கிய சந்திப்பில் தமிழ் ப்ளாகராக அறிமுகமானார். நல்ல நண்பர். சக ரஜினி ரசிகர். எப்பொழுது கேட்டாலும் சென்னையிலிருந்து புத்தகம் வாங்கி அனுப்புவார். இதெல்லாம் தாண்டி, மு.க புத்தகத்தின் மூலம் ஒரு நல்ல எழுத்தாளராக ஆகியுள்ளார். படிக்க ஆரம்பித்தவுடன் தோன்றிய இரண்டு விஷயங்கள் இவ்விவை. கருணாநிதி என்பவர் இல்லாமல் தமிழ் நாட்டின் அரசியல் வரலாறு, ஜோதிகா…
-
முல்லைகொடி யாரோ ?
முதலில் பருந்து என்றார்கள். பிறகு சிலந்தி என்றார்கள். இப்பொழுது பச்சைக்கிளி முத்துச்சரம் என்கிறார்கள். கௌதம் மேனன் – சரத்குமாரின் அடுத்த படம் வருகிறதோ இல்லையோ, எனக்கு ஒரு zooவிற்குள் போன பீலிங் வருகிறது.