Tag: microfiction
-
53ம் தெருவில் ஒரு பூனை 🐈⬛
அருண் அப்பார்ட்மெண்டிற்கு லிப்டில் போகும் போது கண்ணாடியில் முகம் பார்த்துக் கொண்டான். நான்கு நாள் தாடியும், அடர்த்தியான கலைந்த தலைமுடியும் தெரிந்தது. ஃபோனை அப்பார்ட்மெண்டின் கதவருகே எடுத்துக் கொண்டு போன போது சரக் என்று பூட்டு திறந்து கொள்ளும் ஓசை கேட்டது. கவிதா சோபாவில் படுத்துக் கொண்டிருந்தாள். பாதி உடம்பை மைக்ரோ ப்ளஷ் போர்வை மூடிக்கொண்டிருந்தது. வாராத தலை, மூக்குக் கண்ணாடி, கையில் Catakism – Bow to the meow புத்தகம். போனை டேபிளில் வைத்து…