Category: பயாஸ்கோப்
-
முல்லைகொடி யாரோ ?
முதலில் பருந்து என்றார்கள். பிறகு சிலந்தி என்றார்கள். இப்பொழுது பச்சைக்கிளி முத்துச்சரம் என்கிறார்கள். கௌதம் மேனன் – சரத்குமாரின் அடுத்த படம் வருகிறதோ இல்லையோ, எனக்கு ஒரு zooவிற்குள் போன பீலிங் வருகிறது.
-
சில்லுனு ஒரு காதல்
கௌதம் மேனனின் சிஷ்யர் கிருஷ்ணாவின் இயக்கதில் முதல் படம். சூர்யா – ஜோதிகா திருமணத்திற்க்கு ஒரு pre-cursor ஆக வரும் படம். ரஹ்மான் – வாலி காம்பினேஷனில் ஒரு totally different ரொமாண்டிக் படம். சில்லுனு ஒரு காதல், இப்படியாக பல எதிர்பார்புகளை தாங்கி வந்தது. ஆனால் சொல்ல வந்த விஷயத்தை ஊறுகாயாய் வைத்துக் கொண்டு கன்னா பின்னாவென்று கடித்துத் துப்பி இருக்கிறார்கள். இன்னும் இரண்டு பாராவில், இந்த படத்தை பற்றி சொல்வதாய் உத்தேசம். பார்க்கலாம். சூர்யா…