ஹாப்பி பர்த்டே வாத்யாரே!!

Sujatha Rangarajan

சிறுகதை எங்கும் இருக்கிறது. சில சமயங்களில் நான் ஆபீஸுக்கு நடந்தே செல்வேன். ஒரு நாள் அவ்வாறு செல்லும்போது ஒரு கூலிக்காரப் பெண் விரசலாக நடந்து என்னுடன் வருகிறாள். பேசிக் கொண்டே வருகிறாள். கையிலே குழந்தை. அந்தக் குழந்தையை முன்னிலையில் வைத்து தன் கணவனைத் திட்டிக்கொண்டு வருகிறாள். எனக்கு அவள் பேச்சை மூன்று அல்லது நான்கு நிமிடங்கள்தான் கேட்க முடிந்தது. அவளுடைய கணவன் அவளை எந்த அளவுக்குக் கொடுமைப்படுத்துகிறான். திட்டுகிறான், அடிக்கிறான் என்பதையெல்லாம் பற்றிப் புலம்புகிறாள். யாரிடம்? ஒன்றரை வயதுக் குழந்தையிடம்! இந்தப் புலம்பல் எல்லா நகரத்திலும், எல்லா கிராமத்திலும் இருப்பதுதான். இதில் சிறுகதை இல்லை, புலம்பி முடித்தபின் அந்தக் குழந்தையைப் பார்த்து, ‘டேய், என்னையாவது நீ நல்லா வச்சுபயாடா’ என்கிறாள் இதில் கதை இருக்கிறது. இந்த வரி என் மனத்தில் ஆழமாகப் பதிகிறது. இதை ஒரு கதையில் மனைவி பேசுவதாக உபயோகித்திருக்கிறேன்.

– விவாதங்கள் விமர்சனங்கள் by சுஜாதா

Leave a comment