போட்டுத்தாக்கு!

ஜெட்லாகினால் தூங்க முடியாமல் தமிழ் சானல் துழாவினேன். காலை 4:30க்கு யார் தான் தூர்தர்ஷன் பார்க்கிறார்கள். பொதிகையின் இசை அரங்கத்தில் யாரோ மாமி ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா’ என்று பாரதியை பாடிக்கொண்டிருந்தார். அந்த மாமியை பாலசந்தர் சின்னத்திரையில் பார்த்த ஞாபகம்.

பொதிகையின் எண்பதுகளில் போடப்பட்ட கார்ட்போர்ட் செட்களில், சாமந்தி பூமாலையை வளைவு வளைவாகப் போட்டு, குத்து விளக்கின் தீபத்திலிருந்து மிருதங்கத்தை ஃபோகஸ் செய்து பாட்டை ஒப்பேற்றினார்கள்.

பாட்டு முடிந்தவுடன் விட்டால் போதுமென்று சானல் தாவலை தொடர்ந்தேன். எதோ ஒரு 24 மணிநேர பாட்டு சானலில், எதோ ஒரு அழகான கோயிலின் குளப்படிகளில், ரம்யா கிருஷ்ணனின் மேல் முட்ட ஆர்வமாய் முயன்று கொண்டிருந்த சிம்புவின் ‘போட்டுத்தாக்கு’. பாரதி ஞாபகத்துக்கு வர, டிவியை பொதிகைக்கு மாற்றிவிட்டேன்.

Leave a comment