18. இதை வாசகருக்கும் எழுத்தாளருக்கும் உள்ள ஏற்பாடு என்று சொல்லலாமா?
ஒரு நட்பு என்று சொல்லலாம். ஒரு வாசகர் தனக்கு பிடித்தமான எழுத்தாளரை ஒரு நண்பரைப்போல் தேர்ந்தெடுக்கிறார். காரணம், அவர் எழுதுவது இவருக்கு புரிகிறது. கதையின் எதோ ஒரு பகுதியை வாசகரால் தன் மனத்தில் மீண்டும் வாழ முடிகிறது. அந்த எழுத்தாளர் அந்த வாசகரின் வாழ்வின் குறையை ஏதோ ஒரு விதத்தில் நிரப்புகிறார்.
19. அதற்குக் கதை புரியவேண்டும் அல்லவா?
ஆம். கதை வாசகருக்கு புரியவேண்டியதை மிக முக்கியமாக கருதுபவன் நான்.
20. சிலர் புரியாமலேயே கதை எழுதுகிறார்களே?
அவர்களைப் —- — ——.
– சுஜாதா [சிறுகதை: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள், 1998.] [தொகுப்பு: கடவுள்களின் பள்ளத்தாக்கு]
Leave a Reply