கிறுக்கல் – பெயர்க்காரணம்

“சார், பார்த்திபனை பார்த்து தானே காப்பி அடிச்சீங்க”, என்று ஒருவருக்கு மேற்பட்டு கேட்டதனால், கொஞ்சம் பெயர்க்காரணம்.

பார்த்திபன் தான் காரணம். ஆனால் நேரடியாக அல்ல. சில வருடங்களுக்கு முன்பு, பார்த்திபனின் ‘கிறுக்கல்கள்’ நூல் வெளியிட்டு விழாவிற்கு சென்று வந்த சுஜாதா, அதை பற்றி சிலாகித்து எழுதினார். அந்த கட்டுரையில் இந்த தகவலும் இருந்தது –

கிறுக்கல் என்ற வார்த்தைக்கு எழுத்து என்று தான் அர்த்தம். அதற்கு ‘பிங்கள நிகண்டு’ என்னும் பழந்தமிழ் நூலில் குறிப்புள்ளது. எவ்வாறு scribe என்பது scribble ஆகியதோ, அதே போல் கிறுக்கல் என்பது பின்னர் தாறுமாறான எழுத்துக்கு குறிக்கப்பட்டது.

இங்கு எழுதுவது என்னவோ தாறுமாறான கிறுக்கல் தான், ஆனால் கிறுக்கல் என்பது எழுத்தாகும். நன்றி – பார்த்திபன், சுஜாதா மற்றும் பிங்கள நிகண்டு.

,