Month: May 2022
-
காமாத்திபுராவின் ஒரே பாதை
கங்குபாய் காட்டியாவாடி திரைப்படம் சுமாராய்த் தான் இருந்தாலும், முதல் அரை மணி நேரத்துக்கு திரையிலிருந்து கண்ணை விலக்க முடியாமல் பார்க்க வைத்த பன்சாலிக்கு நன்றிகள் பல. சோகம் அப்பி வழியும் அதே முதல் முப்பது நிமிடங்களில் துல்லியமான மெல்லிசையும், பல வண்ணங்கள் வழிந்தோடும் கலையும் ஒளிப்பதிவும் கவனம் கலைக்க முயன்றாலும், பகீரென்று அடிவயிற்றைக் கலக்கும் திரைக்கதையால் பன்சாலியும், நாளை மலரப்போகும் ரோஜாப்பூ போலச் சன்னமான நாசியுடனும் அழுத்தமான உதட்டுடனும் இருக்கும் கங்குவும்(ஆலியா பட்) தான் மனசில் நிற்கிறார்கள்.…