கிறுக்கல் அவார்ட்ஸ் 2007

எல்லா விருதுகளுக்கும் முன்னால் ‘சிறந்த‘ சேர்த்துக் கொள்ளவும்.

புத்தகம்

illiad_kizhakku.jpg

அட்டைப்படம் – ஹோமரின் இலியட் [கிழக்கு பதிப்பகம்]

ஓலிப்புத்தகம் – வந்தார்கள் வென்றார்கள் [கிழக்கு ஒலிப்புத்தகம்]

தொகுப்பு – சுஜாதாவின் கணையாழியின் கடைசி பக்கங்கள் – [தேசிகன் – உயிர்மை]

eppidi_prodigy.jpg

சிறுவர் புத்தகங்கள் – எப்படி இயங்குகிறது ? – [ப்ராடிஜி பதிப்பகம்]

சிறந்த ஆராய்ச்சிப் புத்தகம் – ராமானுஜர் [இந்திரா பார்த்தசாரதி – கிழக்கு]

புத்தக விற்பனை நிலையம் – நியு புக் லாண்ட்ஸ்[தி.நகர்]

புத்தக நிறுவனம் – கிழக்குப் பதிப்பகம்

வார இதழ் பிரபலம் – ஞாநி [இதற்கு முன்னால் இவர் எழுதிய தீம்தரிக்க்ட மாதமிருமுறை இதழ் அவ்வளவு பிரபலமில்லை]

உட்டாலாக்கடி தொடர் – அரசு கேள்வி பதில் [குமுதம்]

வெகுஜன இதழ் -ஆனந்த விகடன்

டாட்காமிதழ் – குமுதம்

seth godin small is the new big

ஆங்கில புத்தகம் – Small is the new big [ Seth Godin]

இந்த ஆண்டு படித்த பழைய –

நாவல் – எழாவது உலகம் [ஜெயமோகன் – தமிழினி]

கதைத் தொகுப்பு – இன்று [அசோகாமித்திரன் – கிழக்கு]

கட்டுரைத் தொகுப்பு – பார்வைகளும் பதிவுகளும் [வாஸந்தி – உயிர்மை]

கவிதை – கல்யாண்ஜி கவிதைகள் [சந்தியா பதிப்பகம்]

தொலைக்காட்சி

பேட்டி – காபி வித் அனு [சூர்யாவின் தீபாவளி பேட்டி]

போட்டி – சூப்பர் சிங்கர் ஜூனியர்[விஜய் டிவி], Deal or No Deal[NBC -USA]

விவாத மேடை – நீயா ? நானா ?[ராசிபலன் உண்மையா இல்லையா ?]

ரியாலிடி நிகழ்ச்சி – ஜோடி நம்பர் ஒன் – சீசன் 2.

தொகுப்பாளினி – திவ்யதர்ஷினி [ஜோடி நம்பர் ஒன்]

பார்க்கத் தூண்டிய நிகழ்ச்சி – Planet Earth[BBCயின் தொடர், டிஸ்கவரி சானலில்]

சிறுவர் தொலைக்காட்சி – ஜெட்டிக்ஸ்

நகைச்சுவை நிகழ்ச்சி – லொல்லு சபா

புள்ளி விவரங்கள்- ஹெட்லைன் நியூஸ்

உடனுக்குடன் செய்தி – சி.என்.என் ஐ.பி.என்

தமிழ் சாட்டிலைட் சானல் – விஜய் டீவி

சினிமா

தமிழ் –

ட்ரைலர் – ஓரம்போ

சுமார் ட்ரைலர் – கற்றது தமிழ், பில்லா

டைட்டில்ஸ் – சிவாஜி

வசனகர்த்தா – சுஜாதா [சிவாஜி]

அதிகம் சொல்லப்பட்ட பஞ்ச் – சும்மா அதிருதுல்ல!! [அனுராதா ஸ்ரீராம் வரை எல்லோரும் சொல்லியாகி விட்டது]

அதிகம் சொல்லப்படக்கூடிய பஞ்ச் – சிக்ஸுக்கு அப்புறம் செவண்டா, ______க்கு அப்புறம் எவண்டா!! [கோடிட்ட இடத்தை உங்கள் நாமகரணத்தால் நிரப்புக]

ஸ்க்ரிப்ட் – வெற்றி மாறன் [பொல்லாதவன்]

நம்பக்கூடிய ஸ்டண்ட் – ராம்போ ராஜ்குமார் – பொல்லாதவன்

‘காதுல பூ’ ஸ்டண்ட் – சிவாஜி

sivaji_shreya.jpg

குருப் டான்ஸர்கள் – வாஜி வாஜி

பாடல் செட் – வாஜி வாஜி

குத்துப் பாடல் – சரோஜா சாமான் நிகாலோ

முணுமுணுக்க வைத்த பாடல் – உன்னாலே உன்னாலே [என் வசம் என் வசம் இரண்டடுக்கு ஆகாயம், இரண்டிலும் போகுதே என் காதல் கார் மேகம்]

பாடல் – யாரோ யாரோடு இங்கு யாரோ [ சென்னை 600 028]

பாடகர் – எஸ்.பி.பி [யாரோ யாரோடு இங்கு யாரோ], கார்த்திக் / நரேஷ் ஐயர் [ கரு கரு விழிகளால்]

பாடகி – ஹரிணி [உன்னாலே உன்னாலே], சின்மயி [நான் முத்தம் தின்பவள்]

பாடலாசிரியார் – தாமரை [கரு கரு விழிகளால் – கையின் ரேகை போலே கள்ளத்தனம் ஓடும்], வைரமுத்து [நான் முத்தம் தின்பவள் – இரு குறையட்டும் தெருவிளக்கு, நீ இடங்சுட்டி பொருள் விளக்கு]

chennai_600028_2.jpg

இசை – யுவன் [சென்னை 600 028], ரஹ்மான்[குரு]

சுமார்ப் படம் – சிவாஜி, மாயக் கண்ணாடி[சேரன்]

சொதப்பல் படம் – பொய்[கே.பாலசந்தர்]

வராத படம் – தசாவதாரம்

பார்க்கத் தூண்டிய படம் – எவனோ ஒருவன்

நோட்டபிள் படம் – பருத்தி வீரன்

ஆங்கில காப்பி படம் – கண்ணாமூச்சி ஏனடா

படம் – சென்னை 600 028, பொல்லாதவன்

paruthi_veeran.jpg

நடிகர் – கார்த்தி [பருத்தி வீரன்]

நடிகை – ப்ரியா மணி [பருத்தி வீரன்]

நகைச்சுவை நடிகர்/நடிகை – ஹும் ஹும்.

புது இயக்குனர் – வெற்றி மாறன் [பொல்லாதவன்]

ஆங்கிலம்

காதுல பூ படம் – Live Free Die Hard

கொட்டாவி – Shrek 3

காமெடிப் படம் – Knocked Up

சொதப்பல் காமெடிப் படம் – Super Bad

the_lives_of_others.jpg

கலக்கல் படம் – The Lives Of Others [2006]

பார்க்கத்தூண்டிய படம் – No Country for Old Men

நாவலிலிருந்து எடுக்கப்பட்ட படம் – Atonement [Ian McEwan]

இந்தி

படம் – சக் தே இந்தியா

guru_maniratnam.jpg

இயக்குனர் – மணி ரத்னம் [குரு]

இசை – ஏ ஆர் ரஹ்மான்

மற்றவை

காபி – சரவணபவன்

டிபன் – ஆனியன் ரவா [கற்பாகாம்பாள் மெஸ்]

ஞாபகமறதி நியுஸ் – இந்தியாவின் உலகக்கோப்பை வெளியேற்றம், நந்திகிராம்

கடையலங்காரம் – போத்தீஸ் [சம்மர் ஸ்பெஷல்]

விளம்பரம் – ஏர்டெல்

கூட்டமான ஹோட்டல் – முருகன் இட்லி [வெளியே சேர் போட்டு லைனில் கூட்டம் – பெசன்ட் நகர்]

க்ரெடிட் கார்ட் காலி கடை – லாண்ட்மார்க் [ஸ்பென்ஸர் ப்ளாசா]

நகம் போன ஆட்டம் – 20-20 சாம்பியன்ஷிப் பைனல்

இயந்திரா – ஆப்பிள் ஐ.போன், நிண்டேண்டோ வீ

டெக்னாலஜி – ஆயிரம் டாலருக்கு உங்கள் டி.என்.ஏ ரீடிங் [23 & me].

இந்த ஆண்டுக்கான இடது கைப் பரிசுகள் [கற்றதும் பெற்றதும் ஸ்டைலில்] –

1. ஜோடி நம்பர் ஒன்னில் கிடைத்த கேப்பில் புட்டேஜ் எடுத்துக் கொண்டு, “எனக்கு நடிக்கத் தெரியாதையா” என்று அழுது அதிர வைத்த சிம்புவுக்கு அரை டஜன் கைக்குட்டைகள்.

2. சிவாஜியில் கூல் கூல் என்று காதில் பூச்சுற்றிய இயக்குனர் ஷங்கருக்கு, Quentin Tarantino: The Cinema of Cool புத்தகம் பரிசு.

3. தீப்பெட்டி சைஸ் சென்னை சிட்டி சென்டரில், பிகர் வெட்ட காத்திருக்கும், நூற்றுக்கணக்கான பல்சர் டீனேஜர்களுக்கு ஆளுக்கு ஒரு KFC சிக்கன் லெக் பீஸ்.

4. இந்திய உலக சினிமா என்று அவ்வப்போது உடான்ஸ் விடுவதற்காக, மீரா நாயருக்கு, சிவகவி படத்தின் ஒரு தேய்ந்த விடியோ காஸெட்.

5. இந்தியாவின் உலகக் கோப்பை வெளியேற்றத்திற்கு பிறகு, “இனிமேல் நோ மோர் அட்வர்டைசிங் வித் ப்ளேயர்ஸ்” என்று உதார் விட்டு இப்போது மீண்டும் அவர்களை அழைக்கும் நிறுவனத் தலைவர்களுக்கு, கோலி சோடா.

6. ரியாலிடி ஷோவான பிக் பிரதரில் பங்கு கொண்டு நாட்டுக் பெருமை சேர்த்த ஷில்பா ஷெட்டிக்கு, பிரபு குஷ்பு நடித்த சின்ன தம்பி படத்தின் டிவிடி பரிசு.

7. கிண்டியில் ரவுண்டானாவை நோண்டி போட்டுவிட்டு வீட்டுக்கு போய் விட்ட அதிகாரிகளுக்கு, நகர்வலமாக புல்டோசரில் ஒரு ரவுண்டு இலவசம்.

8. விடாமல் மெகா சிரியல் பார்க்கும் தாய்மார்களுக்கு ஒரு பாட்டில் க்ளிசரின் பரிசு.

9. இரண்டு மொபைல் போன் வைத்திருக்க்கும் சென்னைவாசிகளுக்கு, தீப்பெட்டிகளில் நூலால் கட்டிய மற்றொரு போன் இனாம்.

10. ஓயாமல் போன்-இன் நிகழ்ச்சிகளுக்கு போன் செய்யும் பொதுஜனத்திற்கு, சுகபோதானந்தாவின் மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் புத்தகம்.

பொய் / உண்மை

வெகு நாட்களுக்கு பிறகு இரு நேர்த்தியான ஆங்கில பதிவுகள் படிக்க நேர்ந்தது. தொடர்ந்து படிக்கும் வெகு சில வலைப்பதிவுகளில், இவையும் அடக்கம். இந்தப் குறிப்பிட்ட பதிவுகளை படித்து, ரசித்து, சிரித்து, யோசிக்க நேரம் தேவைப்படலாம். எனக்குப் பட்டது.

முதல் பதிவை எழுதியவர் ஹூக் மாக்லியோட்(Hugh Macleod). ஒரு கார்டூனிஸ்ட். விசிட்டிங்கார்ட்களின் பின் கார்டூன் வரைவது இவரது தொழில். மிக நேரடியாக முகத்தில் அடிக்கும் படி உண்மையை ஒரே ஒரு கார்ட்டூனில் சொல்வார். மைக்ரோசாப்டைப் பற்றி வரைந்த ஒரு தாக்குதல் கார்ட்டூனை, மைக்ரோசாப்ட் ஏற்றுக் கொண்டுள்ளது.

பொய் சொல்லுதல் பற்றி, 2004ல் எழுதியிருந்த ஒரு போஸ்டை, திரும்பவும் கொண்டுவந்திருந்தார். என்னவோ செய்தது.

இரண்டாவது பதிவை எழுதியது, Freakonomics என்னும் புத்தகத்தை எழுதிய இருவரில் ஒருவர் – ஸ்டீவ் லெவிட்(Steve Levitt). சமீபத்தில் வந்து எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய எகனாமிக்ஸ் புத்தகம். புத்தகத்தில் சொன்னது அத்தனையும் காம்ன்சென்ஸ் தான். ஆனால் இந்த வேக உலகில், காமன்சென்ஸ் இஸ் நாட் காமன். அதனால் தான் க்ரைம் சதவிகிதத்துக்கும், ஆபார்ஷனுக்கும், முடிச்சுபோட இவர்களால் மட்டுமே முடிந்தது. கண்டிப்பாய் படிக்க வேண்டிய புத்தகம்.

உண்மை சொல்லுதல் பற்றி இவர் எழுதிய பதிவு. க்ரைக்ஸ்லிஸ்ட்(craigslist.org) என்னும் ஒரு free-ads வலைதளத்தில் வந்திருந்த ஒரு பெண்மணியின் பணக்கார ஆண்களை பற்றிய ரொம்பவும் ”உண்மையான’ ஒரு கேள்வியும், அதற்கு ரொம்பவும் ”உண்மையான’ பதில் சொன்ன ஒரு பணக்கார ஆண் எகனாமிஸ்டை பற்றியது. யோசிக்க வைத்தது.

குளோபல் வார்னிங்

al gore global warming

மேலே உள்ள தலைப்பை அனேகர் குளோபல் வார்மிங் என்று தான் படித்திருப்பீர்கள். அப்படியென்றால் உங்களையும் மீடியா ஆக்கிரமித்துவிட்டது. குளோபல் வார்மிங் பற்றி ஒரு ரெண்டு நிமிஷம் பேசுங்க என்றால் பலர் எஸ்கேப். “என்ன பெருசா குளோபல் வார்மிங், உலகோன்(உலகம்) சூடாவுது சார் அவ்ளோதான்” என்பார்கள் மிச்ச சிலர். தவறு மீடியாவுடையது. எந்த காபி ஷாப்ல மீட் பண்ணலாம் என்று வருகிற டுவிட்டர் தொந்தரவுகளை சற்று நேரம் அணைத்துவிட்டு படித்தால் குளோபல் வார்மிங் வார்னிங் புரியும்.

ஒரு சனிக்கிழமை, நீங்கள் உங்கள் நண்பர்களுடன் ஸ்பென்ஸர் ப்ளாசா செல்கிறீர்கள். உள்ள போய் அதே பிகர் அதே சமுசா அதே கிசுகிசு என்று பிடிக்காமல், “நான் கார்லயே இருக்கேன் நீங்க போய்ட்டு வாங்க” என்று சொல்லிவிட்டு லூசுப்பெண்ணே லூசுப்பெண்ணே என்று பாட்டு கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். கார் ஜன்னல் மூடியிருப்பதாலும் வெளியே வெயிலாக இருப்பதாலும், கொஞ்ச நேரத்திற்கு பிறகு உள்ளே வேர்த்துக் கொட்டுகிறது அல்லவா. அது தான் குளோபல் வார்மிங். சத்தியமாக. அடிக்க வராதீர்கள்.

கடந்த நூறு ஆண்டுகளில் உலகத்தில் ஆவரேஜ் தட்ப வெட்பம் ஒரு டிகிரி பாரன்ஹீட் ஏறியிருக்கிறது. ஏன் என்று விஞ்ஞானிகள் இன்னும் ரூம் போட்டு கோக் குடித்துக் கொண்டு விவாதித்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறாக உலகம் சூடாவதால், தட்பவெட்ப நிலையில் பலவித மாற்றங்கள் வர வாய்ப்புண்டு. பனிப்பாறைகள் சீக்கிரம் உருகி வெள்ளம் வரலாம், மும்பையை போல நிறைய மழை பெய்யலாம், கடலின் மட்டம் அதிகமாகி மெரினாவில் வாக்கிங் போகிறவர்களை இழுத்துச் செல்லலாம். காமெடியில்லை. ஆவரேஜ் தட்ப வெட்பம் ஒரு டிகிரி பாரன்ஹீட் எறிய அதே நூறு ஆண்டுகளில் கடல் மட்டம் ஆறு முதல் எட்டு இன்சுகள் உயர்துள்ளன.

உலகம் சூடாகிக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை. அது இயற்கையாக் நிகழ்கிறதா அல்லது மனிதனின் அலட்சியத்தின் விளைவா என்பது தான் விவாதமே. மனிதனால் induce செய்யப்படுவதை Anthropogenic Effect என்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு ஆன்த்ரோபோஜெனிக் விளைவுதான் க்ரீன் ஹவுஸ் எஃபக்ட்(Green house effect). மேலை நாடுகளில் குளிர் காலத்தில், க்ரீன் ஹவுஸ் என்று ஒரு குட்டிக் கண்ணாடி வீட்டில் செடிகளை வளர்ப்பார்கள். நம் ஊட்டியில் கூட உண்டு. இதற்கு காரணம், கண்ணாடி வீட்டிற்க்குள் சூரியனின் கதிர்கள் பாய்ந்து உள்ளே உள்ள செடிகள், குளிரால் அழியாமல் கதகத என்று இருக்கும். உள்ளே இருந்து வெப்பம் அவ்வளவாக வெளியே போகாது. உலகம் அந்த மாதிரி ஒரு க்ரீன்ஹவுஸ்.

சூரிய கதிர்கள் அட்மாஸ்பியர்(beer அல்ல) முலமாக பாய்கின்றன. அந்த atmosphereல் உள்ள CO2, நைட்ரஸ் ஆக்ஸைட், மீத்தேன் போன்ற சில வாயுக்கள் அந்த கண்ணாடி வீட்டின் கண்ணாடி போல செயல்படுகின்றன. அட்மாஸ்பியர் இல்லாமல் போனால் உலகம் ஒரு அறுபது டிகிரி உஷ்ணம் கம்மியாக இருக்கும். நாம் குளுரில் மாண்டு விடிவோம். உலகத்தின் உள்ளே வரும் அந்த உஷ்ணத்தை உலகம் உள்வாங்கிக் கொள்கிறது. அந்த உஷ்ணம் மீண்டும் எனர்ஜியாக மேலே எழும்புகிறது. அப்படி செல்லும் எனர்ஜியை முழுவதும் வெளியே விடாமல் உலகத்தை கதகத என்று வைத்துக்கொண்டிருகின்றன greenhouse gases.

ஆனால் அட்மாஸ்பியர் கார்பன் டையாக்ஸைட் அதிகமாகி, எந்த உஷ்ணமும் உள்ளே வரலாம் ஆனால் வெளியே போக முடியாமல் போய் விட்டால், ஸ்பென்ஸர் ப்ளாசா கார் போல உலகத்திற்கு வேர்த்துக் கொட்டும். அதுதான் குளோபல் வார்மிங். இதற்க்கெல்லாம் காரணம் நீங்கள்தான். நானும்தான்.

இதோ இதை நான் டைப் செய்யும் போது, இதை நீங்கள் படிக்கும் போதும், குளோபல் வார்மிங்கை ஆளுக்கு கொஞ்சூண்டு அதிகமாக்கி கொண்டிருக்கிறோம். இது மட்டும் அல்ல, நீங்கள் பாட்டு கேட்கும் போதும், மெகா சீரியல் பார்க்கும் போதும், இவை ஏன் உச்சா போய் ப்ளஷ் செய்யும் போதும் குளோபல் வார்மிங் கவுண்டர் ஏறிக் கொண்டிருக்கிறது. இவை எல்லாவற்றிற்கும் தேவையாயிருப்பது மின்சாரம். அவை வருவதோ கரியை எரிப்பதால். கரி மற்றும் எண்ணெய் எரிக்கும் போது அவை இந்த க்ரீன்ஹவுஸ் வாயுக்களை உருவாக்குகின்றன.

“I used to be the president of America”, என்று சில மணித்துளிகளே நீடித்த, மீடியாவின் தவறான ரிப்போர்டிங்கால் நிகழ்ந்த தேர்தல் குளறுபடியை நக்கலடித்து பேசியபடியே ஆரம்பித்து, அல் கோர்(Al Gore) க்ளோபல் வார்மிங் பற்றி, The Inconvenient Truth என்றொரு ஹாலிவுட் படமெடுத்திருக்கிறார். எதோ ஒரு ஆஸ்கர் வென்ற டாகுமெண்டரிப் படம்.

க்ளோபல்(அல்லது குளோபல்) வார்மிங் பற்றி சில பார்வையாளர்களுக்கு அல் கோர் விளக்குவதும் அதை பற்றி அறிய தான் செய்த பிரயாண பிரயத்தனங்களைப் பற்றித்தான் படம். நடுநடுவே கொஞ்சமாய் தலைக்காட்டும் அரசியல் நெடியைத் தவிர்த்துப் பார்த்தால் நல்ல படம். பிரகாஷ்ராஜின் மொழிக்குப் பிறகு குடும்பத்துடன் அனைவரும் பார்க்க வேண்டிய படம். அவர் சொல்லும் முக்கிய மெசேஜ்(தமிழ் ஹீரோ ரேஞ்ஜ்சுக்கு இல்லையென்றாலும்) குளோபல் வார்மிங் என்றாலும், 50 வருடங்களுக்கு முன் இருந்த இரண்டு பில்லியன் உலக ஜனத்தொகை, 50 வருடங்களில் ஆறு பில்லியனானது என்ற கேள்வி சிந்திக்க வைத்தது. அதாவது கடந்த 50 வருடங்களில் நாம் 4 பில்லியன் பேர் பிறந்து இந்த உலகத்தின் population pressureஐ அதிகமாக்கி இருக்கிறோம். வேறெப்போதும் இல்லாத அளவுக்கு உலகில் உள்ள நீர் நிலம் ஆகியவற்றை உபயோகித்து வருகிறோம்.

அல் கோர் வாஷிங்கடன்வாசி. இந்த அமெரிக்க தலைநகரத்தின் செயல்பாடறிந்தவர். என்ன சொன்னால் அரசாங்க மிஷினரி வேலை செய்யும் என்று தெரிந்திருக்கிறார். குளோபல் வார்மிங், ஆபத்து ஆபத்து என்று கத்தினால் கேட்க மாட்டார்கள். அதனால் இப்படி படமெடுத்து, மக்களிடம் கொண்டு செய்து இதை ஒரு மக்கள் இயக்கமாக்கி வருகிறார். ஆல் கோர் குளோபல் வார்மிங்கை invent செய்துள்ளார் என்றெல்லாம் சிலர் கிண்டலடித்தாலும், மக்கள் பேச ஆரம்பித்துள்ளது அவரது ஒரு வெற்றிக்கொடி கட்டல் தான்.

டைம் பத்திரிக்கையும் சமீபத்தில் இந்த உஷ்ணத்தை தணிக்க 51 வழிகள் என்று கோனார் நோட்ஸ் போட்டுள்ளது. வீடுகளில் fluorescent bulbs போடுங்கள் என்பதில் ஆரம்பித்து, கார்பன் வரி கட்டுங்கள், ஸிந்தடிக் உடைகளுக்கு பதில் vintage துணிவகைகளை பயன்படுத்துங்கள், உங்கள் மாத பில்களை ஆன்லைனில் செலுத்துவதால் பேப்பர் மிச்சமாகும், ஜன்னல் கதவை திறந்தால் காற்று வரும் ஏசியின் பயன் குறையும், இரண்டு மூன்று பிளைட் பிடித்து சியாட்டலிருந்து நியுயார்க் சென்றால் பெட்ரோல் அதிகமாவதால் ஒரே ப்ளைட்டில் காசதிகமானாலும் செல்லுங்கள், உங்கள் ஊரின் உழவர் சந்தையில் காய்கறி வாங்கினால் மிச்சமாகும் பெட்ரோல் என்றெல்லாம் சொல்லுகிறார்கள். முக்கியமாக எல்லா நிறுவனங்களும் தனது தொழிலாளர்கள் ரொம்ப தூரம் பயணம் செய்ய விடாமல் அவர்களின் வீட்டின் அருகிலோ அல்லது வீட்டில் இருந்தபடியே வேலை செய்வதை ஊக்குவியுங்கள் என்கிறார்கள். கொஞ்சம் அபத்தமாய் இருந்தாலும் நமக்கு நன்மை இருப்பதால் அப்படி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கலாம்.

அடுத்த முறை நுங்கம்பாக்கம் காப்பி ஷாப் வரச் சொல்லும் கேர்ள் பிரண்டிடம், லோக்கல் நாயர் கடையில் மசால் வடை தோய்த்து சிங்கிள் டீ அடித்தால், குளோபல் வார்மிங் அவேர்னஸ் கப்பிள்ஸ் என்று போற்றுவார்கள் என்று சொல்லிப் பார்க்கலாம். “ஒண்ணு பண்ணு நீ உங்க வீட்ல காபி குடி, விஷால் கூட நான் இஸ்பஹானி போறேன்” என்று பதில் வந்தால் அல் கோரை கோவிக்காதீர்கள்.

கட்டிப்புடி வைத்தியம்

free hugs campaign
#

வசூல்ராஜாவில் கமலின் அம்மாவாக நடித்த ரோஹினி ஹத்தங்காடி, கமலுக்கு சொல்லிக் கொடுக்கும் கட்டிப்புடி வைத்தியம், உலக பிரபலமாகியிருக்கிறது.

இரு வருடங்களாக சிட்னி் கடைத்தெருவில், யுவான் மான்[Juan Mann] என்னும் இளைஞர், வாரம் ஒரு நாள் முழுவதும், free hugs என்றெழுதிய ஒரு போர்டை பிடித்துக் கொண்டு, போகிற வருகிறவர்களுக்கெல்லாம் கட்டிப்புடி வைத்தியம் செய்கிறார். கட்டிப்புடி வைத்தியம் கட்டாயம் கிடையாது. ஒரே ஒரு சின்ன ஹக் தான்.

இந்த free hugs campaignனுக்கு யுவானின் காரணம்- என்ன தான் social communities, world is a small village என்று ஜல்லியடித்தாலும், மனிதர்கள் தனிமைப்பட்டுக் கிடக்கும் இந்த சமுதாயத்தில், எல்லோராலும் ஒரு சின்ன மாற்றம் ஏற்படுத்த முடியும் என்னும் மனிதம் தான். ரோட்டில் செல்லும் ஏதோ ஒரு அன்னியனுக்கு கிடைக்கும் அந்த ஒரு நிமிட அணைப்பினால், வாழ்க்கையின் மீது சின்ன hope எற்படுமேயானால், free hugsக்கு கிடைத்த வெற்றியாகும்.

Sick Puppies என்னும் ஆஸ்திரேலிய டீனேஜ் ராக் பாண்ட், ப்ரி ஹக்ஸுக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து ஆச்சரியப்பட்டு , ஒரு மெட்டிசைத்து, யுவானை வைத்து ஒரு மியுஸிக் விடியோ செய்தார்கள். You Tubeல், செப்டம்பர் 22, 2006 ரிலீஸ் செய்யப்பட்ட அந்த விடியோ ஆறு நாட்களில் பத்து லட்சம் முறை பார்க்கப்பட்டது. அதற்கு பிறகு நடந்ததை, வரலாறு சொல்லும்.

ஓவ்வொரு நாட்டிலும், Free Hugs Campaign ஒரு மக்கள் இயக்கமாக ஆரம்பமானது. Sick Puppies பாண்ட் பிரபலமாகி, இப்போது லாஸ் ஏஞ்சலஸில் பாடிக்கொண்டிருக்கிறார்கள். இதை ஆரம்பித்து வைத்த யுவான், ஓப்ரா ஷோவில் கட்டிபுடி வைத்தியத்தை புட்டு புட்டு வைக்கிறார்.

ஒரு மாதத்திற்க முன்பு சென்றிருந்த Salmon Days Festivalலில் நான்கைந்து காத்திக் யுவ யுவதிகள், free hugs போர்டை பிடித்து கொண்டு இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தார்கள். நானும் இது ஏதொ myspace மேட்டர் போலிருக்கிறது என்று கட்டிப்புடிக்காமல் வந்து விட்டேன். இப்போது படித்தவுடன் தான் அவர்களின் நல்லெண்ணம் புரிகிறது.

நம்மூரில் இது ஒத்துக் கொள்வார்களா என்று சொல்வதற்கில்லை. சுற்றுலா செல்லும் மாமு, மச்சிகள் free hugs மேட்டரை நகரத்திலேயே விட்டுச் செல்வாராயின், நலம். முறுக்கு மீசை பிரகாஷ் ராஜ் மாமன்கள், அவர்களது திருப்பாச்சிகளுடன் free hugsக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.