kirukkal .com » பத்திரிக்கை

இன்ன பிற – 4
போன பத்தியை புனைவு என்று வகைப்படுத்தியிருந்ததை பார்க்காமல்,  நிஜமாவா? என்று புருவம் உயர்த்தியபடியே ஈமெயில் எழுதிய இரண்டு அன்பர்களுக்கும் இல்லை என்று பதில் போட நாளாகிப் போனது. யாரந்த எழுத்தாளர் என்று சிலரும் கேட்டிருந்தனர். நானும் அந்த ஈமெயில்களை இங்கே போட்டு பதில் எழுதினால் வித்தியாசமற்று போய்விடும் என்று…

தமிழில் சிறுகதையும் தொடர்கதையும் நாவலும் கிட்டத்தட்ட இல்லை என்றாகி விட்ட இந்த நாளிலும் இந்த கப்சா வலைப்பதிவுகளை விழுந்தடித்து படிக்கும் தமிழர்களை சொல்ல வேண்டும். அப்படியே மிச்சிகனில் இருந்தும் டல்லாஸில் இருந்தும் பொழுது போகாமல் தமிழ் எழுத்தாளர்களை உசுப்பேத்தும் கம்ப்யூட்டர் ஆசாமிகளை பிடித்து, கடைசியாய் கடைசிப் பக்கம் வரை படித்த நாவல் என்னவோ என்று கேட்டால்,”ம்ம்ம்ம்….அதான் சார் வந்தியத்தேவன்….வந்து…பொன்னியின் செல்வன்” என்று சொல்லி விட்டு, “நீங்கள் குடித்த க்ளாசில் காப்பி குடிக்கிறேன் ஐயா” என்று அடுத்த மெயில் அனுப்ப ஆரம்பித்து விடுவார்கள்.

சிறுகதைகளும் தொடர்களும் இல்லாத வாரந்திரிகளை நினைத்துப் பார்க்க முடியவில்லை. 20 வயது இளைஞ/ஞிகள் படிக்கும் தமிழ்ச் சிறுகதைகள் எங்கே எழுதப்படுகின்றன. தேடிப் பார்த்தாலும் அவர்களின் வாழ்க்கையை அருகில் இருந்த பார்க்கும் நேர்த்தியான சிறுகதைகளை பார்க்க முடியவில்லை. அவர்களை மயக்கி தமிழில் படிக்க வைக்க சுஜாதா மீண்டும் பிறந்து வந்தால் தான் உண்டு. அவர்களை சிறுகதைகளை படிக்க வைக்க நம்மாட்கள் முற்படுவதில்லை. அடுத்த தலைமுறையை நினைத்துப் பார்த்து பயப்பட தேவையில்லை. தற்போதைய இளைஞர்களே படிக்காத பட்சத்தில் அடுத்த தலைமுறை பற்றிய கவலை என்பதெல்லாம் கப்சா.

இவர்களுக்கு எல்லாம் குமுதத்திலோ விகடனிலோ எழுதினால் படிக்க தோன்றுவதில்லை. ஃபேஸ்புக்கில் எழுதப்படும் முதல் தமிழ்ச் சிறுகதை பிரபலமாவது சர்வ நிச்சயம். படிக்கக் கூடிய சைஸில்(அதாவது ஐம்பது வரிகளுக்கு மிகாமல்),  முடிக்கக் கூடிய  வேகத்தில் எழுதினால் கண்டிப்பாய் படிப்பார்கள்.

எழுத்தாளர் பாராவின்  கல்கி தொடர்கதையை முழுவதும் படித்தீர்களா ? நினைத்து கொண்டிருக்கிறீர்கள் அல்லவா. படியுங்கள். இந்த டுவிட்டர்வேக உலகத்தில், தமிழ்த் தொடர்கதைகளை படிக்கும் பொறுமை இருந்தால் நீங்கள கொடுத்து வைத்தவர்கள்.

பசங்க என்ற படத்தை பற்றி கேள்விப்பட்டு பார்த்தால் அதீதமான கற்பனைக் காட்சிகள், அதிகப் பிரசங்கித்தனமான குழந்தைகள், கோடம்பாக்க சிச்சுவேஷங்கள், இடைச்சொருகலாக காதல். தமிழில் சிறுவருக்கான நல்லதொரு படத்துக்காக இன்னமும் காத்திருக்க வேண்டியது தான்.

இன்ன பிற – 2
“திரைப்படம் எடுப்பது எப்படி என்பதைப் பற்றி புத்தகம் எழுதும் அளவு `மீடியா டிரீம்ஸ்’ நிறுவனத்தில் எனக்கு அனுபவம், ஐந்து திரைப்படங்களில் ஏற்பட்டுவிட்டது. எந்த பட்ஜெட்டும் குறிப்பிட்ட தொகையை இரண்டு மடங்கு மீறும். இதற்கு மனசுக்குள் தயாராக இருக்க வேண்டும். அதாவது, அவர்கள் ஒரு கோடிக்குள் படத்தை முடிக்கிறேன் என்று சொன்னால் இரண்டு கோடிக்குத் தயாராக இருக்க வேண்டும். அதேபோல் ஒரு படத்தை மூன்று மாசத்தில் முடிக்கிறேன் என்று ஒருவர் சொன்னால், ஆறு மாசத்துக்குத் தயாராக இருக்கவேண்டும். படத்தை பதினெட்டு நாளில் முடிப்பேன் என்று ஒருவர் சொன்னால் உடனே அவரை வழி அனுப்பவும். சம்மதத்துக்காக பொய் சொல்கிறார். படத்தில் ஏதாவது ஒரு ஸ்டார் இருந்தால் அதற்காக அரை மடங்கு கூடுதல் பணம், நேரம் இரண்டுக்குமே தயாராகவும், ஒரு நாளைக்கு ஷூட்டிங் செலவு முப்பதாயிரம் என்று சொன்னால் புளுகுகிறார் என்று அர்த்தம். தமிழ் சினிமாவின் ரேட் ஒரு நாளைக்கு ஒரு லட்சம். பெரிய டிபன் பாக்ஸில் குறைந்தபட்சம் இருநூறு பேர் தின்னே தீர்ப்பார்கள். இதை யாரும் எதுவும் செய்ய முடியாது. கலாசாரம் இப்படி.

இதையெல்லாம் படித்த பின்னும் உங்களில் சிலர் படம் எடுக்கும் தைரியம் பெற்றால் கடவுள் உங்களைக் காப்பாற்றட்டும்!”

- `படமெடுத்துப் பாழாய்ப் போக’ கட்டுரையில் சுஜாதா, 2003

இருபத்தி நான்கு வாரங்களாக குமுதத்தில் எழுதிக் கொண்டிருந்த சுஜாதாவின் கதைக்கு முற்றும் போட்டு விட்டார் ரஞ்சன். நாற்பது வருடங்களுக்கு மேல் எழுதிக் கொண்டிருந்த ஒரு மிகப் பிரபலமான எழுத்தாளனின் கதையை எழுதுவது சுலப(ம்/மன்று).

சுஜாதா அவருடைய வாழ்க்கையின் சுவாரசிய பக்கங்களை அவரின் பத்தி எழுத்துக்களில் அவ்வப்போது எழுதி வந்திருக்கிறார். அவை எல்லாவற்றையும் திரட்டி, மேலும் சிலரை சந்தித்து ஒரு பயோகிராபி தொடரை எழுதி முடித்திருக்கும் ரஞ்சனுக்கு நன்றிகள் பல.

எனக்குத் தெரியாத பல விஷயங்கள் தொடரின் கடைசி சில வாரங்களில் வந்தது. சுஜாதா சினிமாவில் ஒரு காட்சியில் நடித்தது, சினிமா டைரக்‌ஷன் செய்ய பெல் நிறுவன வேலையை ராஜினாமா பண்ண நினத்தது, தன்னுடைய கையெழுத்தை வைத்து தனக்காக ஒரு கணிப்பொறி ஃபாண்ட் அமைத்துக் கொண்டது, ராஜீவ் மேனனின் நட்பு மற்றும் குமுதத்தில் ஆசிரியர் அனுபவங்கள்.

குமுதம்காரர்கள் இதை வருகிற புத்தக சீசனில் புத்தகமாக கொண்டு வந்தால் சில ஆயிரமாவது போகும். தேசிகனும் சுஜாதா பற்றி பயோகிராபிக்கு சில வருடங்களாக யோசித்து கொண்டிருக்கிறார். சுஜாதாவுடனும் இதை பற்றி பல மணி நேரங்கள் பேசியிருப்பதாய் சொன்னார். செய்வார் என நம்பலாம்.

அமெரிக்க வரைபடத்தின் வட மேற்கு மலைபகுதியை சூம் செய்தால் தெரியும் சியாட்டலில் ஏகப்பட்ட பனியுடன் வொயிட் கிறிஸ்துமஸ் கொண்டாடினோம். அப்படி ஒரு வெள்ளை விரிப்பு. பச்சை மரங்களையும் கார்களையும் சேர்த்து பனி விழுங்கிக் கொண்டு மீண்டும் ஒரு முறை தன் இருப்பை காட்டிக் கொண்டது.

நான்கு நாட்களாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் போல, டிவியில் சொல்வதற்கு நேர்மாறாக, பனி என்றால் மழை. மழை என்றால் கடும் பனி. சாட்டிலைட் புருடாவுக்கெல்லாம் அசைவதாய் இல்லை இயற்கைத் தாய்.

க்ளிஷேவாக சொல்வதானால், மாறணும் ஆயிரம். தமிழ் சினிமாவில் மாறவேண்டியவை என்று லிஸ்ட் போட்டால், கதை, நடிப்பு என்பதற்குப் பின் மேக்கப் கலை. தசாவதாரத்தை விட நன்றாக இருந்தாலும், அறுபது வயது பெரியவருக்கு முப்பது வயது கையிருக்கிறது.

கெளதம் மேனன் தன் அப்பா பற்றி ஒரு மெமாயிர் எடுத்ததெல்லாம் அவருடைய கதாசிரிய உரிமை. அதற்கு சரியாக ஒரு திரைக்கதை அமைக்காததால், தியேட்டரில் எத்தனை விளக்குகள் விசிரிகள் இருக்கிறதென்று எண்ண ஆரம்பித்து விட்டேன்.

ஹாரிஸின் பாடல்களும் படத்தோடு பார்க்கும் போது ஒரிஜினாலிடி இல்லை. சூர்யாவோ அபூர்வ சகோதர்கள் கமல் போல ஒல்லி மீசையில் நடனமாடும் எண்பதுகளின் பாடலில் அனக்ரானிசமாக contemporary சிந்தஸைஸர் ஒலி. சகிக்கவில்லை.

க்ளைமாக்ஸில் சூர்யாவின் துயரத்தில் பங்கெடுக்காமல் அந்த பின்சீட்டுப் பெண் சிரித்ததில், கெளதம் மேனனுக்கு எதோ ஒரு செய்தி இருக்கிறது.

சுஜாதா ஒரு முரண்நோக்கு
தமிழிலக்கியத்தில் முத்தெடுக்கும் மகானுபாவர்கள் சிலர், சுஜாதாவின் மறைவிற்கு பின், வெகுஜன வணிகத்தளத்தில் தனக்கும் இனி இடம் கிடைக்கலாம் என்று நினைத்தவர் பலர். அதற்கு முதல்படியாக, சுஜாதாவைப் பற்றி ஒரு நல்ல அஞ்சலி எழுதி, அவரை தனது ஆசானாக காட்டிக்கொண்டு, வெகுஜன ஊடகத்தில் ஆதாயம் தேட ஆரம்பித்தார்கள். சுஜாதா இருக்கும்வரை ஓரிரு வார்த்தைகள் கூட எழுதாதவர்கள், திடிரென்று, கையில் கிடைத்த கணையாழியின் கடைசி பக்கங்களை படித்து விட்டு, நான் அவருடைய வாரிசு தான். அவருடைய நடையும், கருத்தாக்கமும் அவருக்கு பிறகு எனக்குத் தான் உண்டு என்று எழுதிய அ.கைகள் பலர். சுஜாதா பாணியில், அவர்களை பசித்த புலி பதம் பார்க்கட்டும்.

இதற்கு நேர் எதிராக, சுஜாதாவின் மறைவிற்கு பின்னும் அவர் மேலுள்ள கோபங்களை கொட்டித் தீர்த்தனர் பலர். அப்படி ஒரு கோபக் கொட்டித்தீர்த்தலாகத் தான், காலச்சுவடு கண்ணணின், சுஜாதா ஒரு முரண்நோக்கு, என்று அஞ்சலியை பார்க்க முடிகிறது.

“சார்!! உங்களுக்கு தான் அப்படி தோணுது, ஏன்னா உங்களுக்கு சுஜாதாவை ரொம்ப பிடிக்கும்”, என்று சொல்பவர்கள், கண்ணனின் இந்த கட்டுரையை படித்துப் பார்க்கலாம். அவர் கூறும் முரண்நோக்குக்காண காரணங்கள் அக்கட்டுரையில் கிடைப்பதரிது. துணுக்குத் தோரணமாகவே எனக்குத் தோன்றுகிறது.

தீவிர இலக்கியத் தளத்திலிருந்து வெகுஜன எழுத்திற்கும் வணிக சினிமாவிற்கும் நகர்ந்துவிட்டவர்களும் நகர்வதற்குக் கொதி போட்டுக்கொண்டிருப்பவர்களும் சுஜாதாமீதும் அவர் மறைவுக்குப் பின்னர் அவர் எழுத்தின் மீதும் கொண்ட திடீர் கரிசனம், ந ட்சத்திர ஒளி அவர்கள் விமர்சனக் கண்களைப் புண்ணாக்கிவிட்டதன் அடையாளம். இலக்கியத் தளத்தில் சுஜாதாவின் இடத்தை அவரது எழுத்தின் தரம் தீர்மானிக்கும். அதிகாரமும் நட்சத்திர ஆதரவும் அதிக காலம் அவருக்கு முட்டுக்கொடுக்க முடியும் எனத் தோன்றவில்லை.

என் பார்வையில் அறிவியல் தமிழை முன்னெடுப்பதே சுஜாதாவுக்குச் செலுத்தப்படும் ஆக்கபூர்வமான அஞ்சலியாக இருக்கும். அந்த முன்னெடுப்பு கடந்த சில பத்தாண்டுகளாக அறிவியல் என்ற ‘முழு உண்மை’மீது எழுப்பப்பட்ட கேள்விகளையும் விவாதங்களையும் – சுஜாதா முற்றாகப் புறக்கணித்த அல்லது அறிந்துகொள்ளாத உரையாடல் இது – உள்ளடக்கியதாக இ ருக்க வேண்டும். தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தில் இயங்கும் மரண வியாபாரிகளின் ஆட்டங்கள் முடிந்த பிறகு இந்தப் பணியை அவரது ஆத்மார்த்தமான அன்பர்கள் முன்னெடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

கடைசி இரண்டு பத்திகளில் கண்ணன் சொல்லும் விஷயம் புரிகிறது. மரண வியாபாரிகளின்[Merchants of Death] என்று யாரை சொல்கிறார் என்று தான் புரியவில்லை. புரிந்தால் சொல்லுங்கள்.

தசாவதாரத்தில் சுஜாதாவின் பங்குப் பற்றி சில சமயங்களில், கற்றதும் பெற்றதும் கட்டுரையில் அவரே குறிப்பிட்டிருந்தார். சுஜாதா எழுதியதிலிருந்து பார்த்தால், படத்தின் கதை திரைக்கதையோடும் நெருக்கமாக இருந்தார் என்று தெரிகிறது.

படத்தின் பூஜை விளம்பரத்தில், சுஜாதாவும் கிரேஸி மோகனும் இருந்தார்கள். படத்தின் டைட்டிலில் இருவரும் இல்லை. படம் வரும் போது சுஜாதாவும் இல்லை. கமல் காரணம் சொல்வாரா என்று தெரியாது. வேண்டுமானால் தேசிகனை கேட்டுப் பார்க்கலாம். அல்லது பெருமாளைத் தான்.

சுஜாதாலஜி தளத்திற்கு உள்ளடக்கங்கள் திரட்டிக் கொண்டிருக்கிறேன். பேசாமல் தளத்தை wiki ஆக்கி விட்டால், என்னுடைய நேரமின்மையால் இக்காரியம் பாதிக்கப்படாது என்று தோன்றுகிறது. அதே நேரத்தில் சுஜாதாவின் எழுத்துக்களுக்கு நேர்மையாக எழுதப்படும் எதிர்மறை விமர்சனங்களுக்கும் இடம் கிடைக்கும்.

படிப்பது – ஸ்லேட்
நேற்றைக்கு ஸ்லேட்[Slate] படித்துக் கொண்டிருக்கும் போது, அதைப் பற்றி முன்னமே சொல்லியிருக்க வேண்டும் என்று தோன்றியது.

இணையத்தில் ஓடியாடி தேடிப்பிடித்து படிக்கும் பழக்கம் கொஞ்சம் போரடிக்க ஆரம்பித்த போது, அதாவது இப்போது இருக்கும் அளவுக்கு தேடல் வசதியோ, வலைப்பதிவுகளோ இல்லாத 1999ல், அருந்ததி ராய் பற்றி தேடும் போது, லக்ஷ்மி கோபாலகிருஷ்ணன் எழுதிய Booker Snooker பத்தி கண்ணில் பட அறிமுகமானது தான் ஸ்லேட். குமுதம் ஆனந்த விகடனுக்கு பிறகு இன்னமும் விடாமல் படித்துக் கொண்டிருப்பது ஸ்லேட் மட்டும் தான். தினமும் படிக்க முடியாவிட்டாலும், நம்மூர் மாமாக்கள் சொல்வது போல, ஹெட்லைனாவது பார்த்து விடுவேன். இதைப் போலவே இன்னும் ஒன்றிரண்டு மின்னிதழ்கள்[Salon, Plastic] முன்பு படித்து கொண்டிருந்தேன். சுருக்கமாய், அமெரிக்காவின் ஒரே ஒரு no-nonsense மின்னிதழ் ஸ்லேட் தான்.

மின்னிதழ் என்றால் சி.என்.என் போலவோ என்.டி.டிவி மாதிரியோ, செய்திகளை உடனுக்குடன் தந்து காசு பார்க்கும் தளமல்ல. எந்த செய்தி நிறுவனத்துடன் இணையாமல் சுதந்திரமாக, சில எடிட்டர்களின் மேற்பார்வையுடன் பிரசுரிக்கப்படும் மின்னிதழ் அல்லது செய்தி சஞ்சிகை. இப்படி நிருபர்கள் அல்லாத எழுத்தாளர்களால் எழுதப்படும் மின்னிதழ்களை படிக்கும் போது அறிமுகமான வலைப்பதிவுகள் வசீகரமான ஒரு யோசனையாக தெரிந்தன. இப்போதும் அப்படித்தான் என்று சொல்ல முடியாது.

Slateல் வெறும் செய்தியாக எதை தேடினாலும் கிடைக்காது. ஒரு செய்தியை சார்ந்த காமெண்டரிகளால் ஆனதே ஸ்லேட். எந்த ஒரு செய்தியைப் பற்றியும் அபிப்பிராயம் கொண்டவர்களால் எழுதப்படுகிறது.  உதாரணத்திற்கு அணுசக்தி ஒப்பந்தத்தை பற்றியோ, இந்தியாவின் பணவீக்கத்தை பற்றியோ அபிபிராயங்கள் கொண்ட ஒரு எழுத்தாளர் அதைப் பற்றி ஆராய்ந்து எழுதும் பத்திகள். கிட்டத்தட்ட வலைப்பதிவுகள் மாதிரி. ஆனால் அதுவும் அல்ல. செய்திப் பத்திரிக்கைகளுக்கும் வலைப்பதிவுகளுக்கும் நடுவே எங்கேயோ இருக்கிறது ஸ்லேட்டின் ராஜ்ஜியம்.

ஸ்லேட்டில் ரொம்பவும் பிடித்தது அதீத பாசாங்குகள் இல்லாமல் எழுதப்படும் டெக்னாலஜி மற்றும் கலை விமர்சனங்கள். பயணக்கட்டுரைகளோ கடைத்தெரு சமாச்சாரங்களோ எல்லாவற்றையும் பற்றி ஸ்லேட்டில் விஷயமுண்டு. சில சமீபத்திய உதாரணங்கள் – 1 2, 3,4 & 5.

இவை எல்லாவற்றிகும் மேலாக ஸ்லேட்டின் கார்டூன்கள். ஒவ்வொரு பத்திக்கும் கிழே கொடுக்கப்படும் Related on the Web என்கிற சுவாரசியமான பத்தியும் படிக்கப்பட வேண்டியன. ஸ்லேட்டை RSS செய்தியோடை மூலம் உங்களின் RSS ரீடரில் படிக்கலாம்.

மைக்ரோசாப்ட்டிடம் இருந்து ஸ்லேட்டை சமீபத்தில் தான் வாஷிங்கடன் போஸ்டு வாங்கியது. அப்படி வாங்கியிருந்தாலும், எந்த குறுக்கீடும் இன்றி ஸ்லேட் சுதந்திரமாக செயல்பட காரணம், ஸ்லேட்டின் விளம்பரங்கள்.

தமிழில் மட்டும் ஸ்லேட் போல ஒரு மின்னிதழ் எழுதி காசு பார்க்க முடியாது.அதனால் இந்தியாவிற்கு ஸ்லேட்டை போல ஒரு மின்னிதழ் தேவை. சுதந்திரமாகவும் பிரபலமாகவும் இருக்கும் மின்னிதழ்கள் இந்தியாவில் இல்லவே இல்லை. ஸ்லேட்டை போல எதாவது இருந்தால் சொல்லுங்கள் படிக்கிறேன்.

பி.கு – தேடிப் பார்த்ததில் ஸ்லேட்டு.காம் – slatu.com இன்னமும் இருக்கிறது. தமிழில் எழுதலாம். slatulu.com கூட இருக்கிறது. தெலுங்கில்.

குமுதத்தில் ஞாநி
குமுதம் தவிர மற்ற இதழ்கள் தீம்தரிகிட இதழில் வரும் கட்டுரைகளை பயன்படுத்தலாம் என்று specificகாக ஃபைன் பிரிண்ட் போடும் அளவுக்கு, குமுதத்துக்கு எதிராக இருந்த எழுத்தாளர் ஞாநி, குமுதத்தில் ஓ பக்கங்கள் எழுதுகிறார், என்றவுடன் விஷயமிருக்கும் என்று நினைத்தேன். இருக்கிறது.

ஓ பக்கங்களுக்கு முன்னமே அவர் எழுதி, சொல்ப பிரதிகளே விற்ற தீம்தரிகிடவின் வாசகன் என்ற அளவில் எனக்கு ஞாநியின் நேர்மையான கருத்துக்கள் பிடிக்கும். சிலதில் ஒற்றுப்போக முடியாவிட்டாலும்(எம்.எஸ் அஞ்சலிக் கட்டுரை – தீம்தரிகிட) அவர் சொல்ல வந்ததை மறைக்காமல் சொல்லும் விஷயம், தமிழ்நாட்டுக்கு, அதன் பத்திரிக்கைகளுக்கு அரிது தான்.

தீம்தரிகிட இதழை நடத்தி கொஞ்சம் நஷ்டம் அடைந்தார் என்று அதை படித்தவர்களுக்கு புரியும். பழுப்பு நிறத்தில், கெட்டி அட்டை இல்லாத ஒரு பேப்பர் கட்டை ஸ்டேப்லர் செய்து கொடுப்பது போல இருந்தாலும், ஞாநியின் முகத்திலடிக்கும் நேர்மை பிடிக்காமல் இருந்தால் அரிது.

ஆர்குட்டில் ஒரு குழு உண்டாக்கும் அளவுக்கு ஓ பக்கங்கள் பிரபலமான போது, விகடனில் அவர் எழுதிய கட்டுரைகள் சில, outright boring. பலவற்றில் எதாவது எழுத வேண்டிய கட்டாயத்தில் எழுத வேண்டியது தெரிந்தது. தமிழக முதல்வரைப் பற்றிய கட்டுரை கூட சற்றே உண்மையின் விளிம்பில் இருப்பதாக் தோன்றினாலும், கொஞ்சம் அவசரமாக யோசிக்காமல் எழுதியதோ என்று தோன்றியது.

ஓ பக்கங்களை, குமுதத்தில் இனி தொடரப்போகிறார். படித்துப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது.

முதல் வார தொடரிலிருந்து -

இனி ஆங்கில நிருபர் வேலை வேண்டாமென்றும் முழு நேர தமிழ் எழுத்தாளனாவதென்றும் முடிவு செய்தேன். அப்போது புதிய பத்திரிகையான ஜூனியர் விகடனில் வேலைக்குச் சேர்ந்தேன். என் வேலை நீக்கத்துக்கு எதிராக எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்தபோது அன்றைய குமுதம் உதவி ஆசிரியர் எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன், ‘நான் குமுதத்துக்கு கடிதம்தான் எழுதினேனே தவிர, கட்டுரை எதுவும் எழுதவில்லை’ என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு ஒரு சாட்சிக் கடிதம் கொடுத்தார். நான்கு வருடம் நடந்த வழக்கில் நான் ஜெயித்தேன்.

அப்போது என் கருத்தை குமுதம் வெளியிட்டதால், என் எக்ஸ்பிரஸ் நிருபர் வேலை போயிற்று. இப்போது என் கருத்தை வெளியிட முடியாத நிலை விகடனில் வந்ததால், நான் குமுதத்தில் எழுத வந்திருக்கிறேன். கடைசியாக நான் ஜல்லிக்கட்டு பற்றி எழுதிய ‘ஓ’ பக்கக் கட்டுரை, கடைசி நிமிடத்தில் அச்சாகாமல் நிறுத்தப்பட்டது. காரணம் பப்ளிக் செண்ட்டிமெண்ட்டுக்கு விரோதமாக அது இருந்ததாம். அது மட்டுமா? நான் எழுதிய, எழுதுகிற, எழுதப் போகும் பல விஷயங்கள் அப்படித்தானே! எந்த செண்ட்டிமெண்ட்டுக்கும் விரோதமாக இருப்பதைப் பற்றிக் கவலைப்படுவது ஒரு எழுத்தாளனின் வேலை அல்ல. பகுத்தறிவுக்கும் பொதுநலனுக்கும் விரோதமாக எது இருந்தாலும் அதை உரக்கச் சொல்வதே நம் பணி.

எவ்ளோ படிப்பது ?
சமீபத்தில் வெளியான ஒரு அஸோஸியெட்டட் பிரஸ் வாக்கெடுப்பு சொல்வதைப் பார்த்தால், அமெரிக்கர்களில் நான்கில் ஒருவர், போன வருடம் ஒரு புத்தகம் கூட படிக்கவில்லை. நம்மூர் பப்ளிக் எக்ஸாம் ரிசல்ட் போல, அங்கும் அதிகம் படிப்பது பெண்கள் தான். அடுத்ததாக நிறைய புத்தகம் படிப்பவர்கள், முதியவர்கள்.

பைபிள் மற்றும் ஆன்மீக புத்தகங்களை விடுத்துப் பார்த்தால் அதிகம் படிக்கப்படுபவை பாப்புலர் பிக்-ஷன், வரலாறு, பயோகிராபி மற்றும் மர்மக் கதைகள். இவை தவிர மில்ஸ் அன் பூன் போன்ற ரொமாண்டிக் கதைகளும் அதிகம் படிக்கப்பட்டன.

புத்தகம் படிக்கவில்லை என்ற சொன்னவர்களை தவிர்த்துப் பார்த்தால், ஓவ்வொரு அமெரிக்கரும் சராசரியாக படித்திருந்தது தலா ஏழு புத்தகங்கள். இந்த விகிதாசாரம் குறைந்து கொண்டு வருவது தான் கவலையளிக்கிறது என்கிறார்கள்.

மூன்று வருடங்களுக்கு முன் National Endowment for Arts என்னும் கழகம் Reading at Risk என்னும் ஒரு ரிப்போர்ட்டை பதிப்பித்தது. 2002ல் 57% சதவிகிதம் அமெரிக்கர்கள தான் ஏதாவது ஒரு புத்தகமாவது படித்திருந்தார்கள். இது பத்து வருடங்களில் 4% குறைந்திருந்தது. இதற்கு காரணமாக கூறப்பட்டது கேபிள் டீவி மற்றும் இண்டர்நெட்.

அமெரிக்கர்களின் படிக்கும் பழக்கத்தை அதிகரிக்கவே, The Big Read என்னும் புரோக்கிராமை இந்த வருடம் ஆரம்பித்திருக்கிறார்கள். இதில் கண்டிப்பாய் படிக்கப்பட வேண்டிய புத்தகங்களை பட்டியலிட்டு, மாதத்திற்கு ஒரு புத்தகம் என்று ஹைலைட் செய்கிறார்கள். ஒவ்வொரு மாதமும், அந்த மாதத்திற்கான புத்தகத்தை பற்றி ஏராளமான் விவாதங்களும், விமர்சனங்களும் அவரவர் வீட்டருகில் உள்ள அரசு நூலகங்களில் நடைபெறுகின்றன.

கடந்த ஒரு மாதமாக நடைபெறும் இந்த Big Read ஒரு வெற்றி என்றே தோன்றுகிறது. லைப்ரரிகள் களை கட்டுகின்றன. ஒரு நகரத்தில் உள்ள எல்லோரும் ஒரே புத்தகத்தை படிக்கிறார்கள், அதை பற்றி சனிக்கிழமைகளில் நூலகங்த்தில், பர்கர் சாப்பிட்டுக் கொண்டே கதைக்கிறார்கள். இனிமேல் படிப்பாரில்லை என்று பழுப்படைந்து, அடுக்குகளின் ஓரங்களில் இருந்த இந்த லைப்ரரி புத்தகங்களின் எல்லா பக்கங்களும் திருப்பப்படுகின்றன, படிக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட புனர்ஜென்மம் தான்.

இந்த பிக் ரீட் பரிந்துரைக்கும் புத்தகங்களில் எனக்கும் பிடித்தவை ஐந்து. ஏற்கனவே இவைகளை படித்திருந்தாலும் மீண்டும் படிக்கப் போகிறேன். பிடித்த ஆர்டரில், ரே ப்ராட்பரியின் டிஸ்டோபிய கதை, பாரன்ஹீட் 451. பிறகொரு நேரத்தில் ரேயின் இந்த சயின்ஸ் பிக்-ஷனைப் பற்றி எழுத எண்ணம். மற்றவை, ஸ்காட் பிட்ஸ்ஜிரல்டு எழுதிய The Great Gatsby, ஹெமிங்வேயின் Farewell to the Arms, ஹார்பர் லீயின் To Kill a Mockingbird மற்றும் அமெரிக்காவை புரட்டிப் போட்டு புலிட்சர் வாங்கிய ஸ்டெயின்பெக்கின் Grapes of Wrath.

மேலே சொன்ன – அமெரிக்கர்களில் நான்கில் ஒருவர் போன வருடம் ஒரு புத்தகம் கூட படிக்கவில்லை என்ற கணக்கை கொஞ்சம் மாற்றிப் போடலாம். அமெரிக்கர்களில் நான்கில் மூவர் சென்ற வருடம் ஒரு புத்தகமாவது படித்திருந்தார்கள்.

இதை வைத்து நமது தமிழ் கூறும் நல்லுலகத்தின் நிலைமையை கணக்கிடலாம். ஏனென்றால் இதற்கெல்லாம் நம்மூரில் கணக்கெடுப்பதே இல்லை. அப்படியே எடுத்தாலும், “சார் நீங்க கடேசியா இன்னா பொஸ்தகம் படிச்சீங்க ?” என்று சர்ச் பார்க் பஸ் ஸ்டாண்டில் யாரோ ஒரு நிருபர் காமிரா சகிதமாக கேள்வி கேட்க, நம் ஆசாமி வியர்வை வழிய பஸ் வருகிறதா என்று பார்த்துக் கொண்டோ, அல்லது MU@3CB5:30(யோசியுங்கள். விடை கடைசியில்) என்று அப்ரிவேஷனில் SMS அனுப்பிக்கொண்டோ, “அது வந்து சார், I think I read the book last week with Asin hugging teddy bear in the cover” என்று ஏதாவது சொல்லிவிட்டு எஸ்கேப்புவார்.

சீரியஸாக யோசித்தால் உண்மை புரியலாம். அதாவது தமிழ் நாட்டில் பத்திரிக்கைகள் அளவு புத்தகங்கள் விற்பதில்லை. லட்சக்கணக்கில் விற்கும் பத்திரிக்கைகளுக்கு நடுவில் ஆயிரம் காப்பி விற்றாலே, “My writing career has taken off” என்று காலரை தூக்கிவிடும்  எழுத்தாளர்கள் வந்துவிட்டார்கள். அதனால் எழுத்தாளர்களும் AGS ஆபிஸிலோ, அறநிலையத் துறையிலோ மூக்குக் கண்ணாடியை தூக்கி விட்டபடியே கம்யூட்டர் தட்டி கணக்கெழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பக்கம், சரியான புத்தகங்கள் வரவில்லை என்று பப்ளிக்கும்(so called public), மற்றொரு பக்கம், நான் புத்தகம் எழுதினால் வாங்க ஐநூறு பேராவது இருக்கிறார்கள் என்று ஜெயமோகன் போன்ற சீரியஸாக எழுதும் இலக்கியவாதிகளும் இயங்குகிற ஊர் தமிழ்நாடு தான்.

ஆறுகோடி பேர் என்று அடிக்கடி சொல்லிக் கொள்ளும் நம்மூரில், ஐநூறு பேர் தான் முதல் காப்பி வாங்க போகிறார்கள் என்றால், ஒரு எழுத்தாளன் எப்படி எழுதுவான் என்று தெரியவில்லை. அப்படியே எழுதினாலும், எழுத்தினால் கிடைக்கும் சம்பளம் கரண்ட் பில் கட்டகூட சரியாகவில்லை என்றால், working below your labor worth என்று யோசித்து அதிகமாய் பணம் தரும் தனது கம்புயூட்டர் புரோகிராமிங் செய்ய போவது ஒண்ணும் விந்தையல்ல. தமிழ் சினிமா போல கடைசியாய் வேற ஒண்ணும் தெரியாதவர்கள் வந்து சேரக்கூடிய நிலைமையில் உள்ளது தமிழ் புத்தக உலகம். “ஒண்ணு ராவூத்தர் ஹோட்டல்ல ரவுண்டா தோசை ஊத்து இல்லாக்கட்டி ராமர் பாலத்தை பத்தி ஒரு 200 பக்கம் எளுது” என்று அப்பாக்கள் சொல்லும் காலம் கண்ணுக்கு தெரிகிறது.

“இவ்ளோ நேரம் உன்னிய பேச வுட்டோமே, நீ இப்ப என்ன சொல்ல வர” என்று கேட்பவர்களுக்கு, படிக்கலாம். தமிழோ ஆங்கிலமோ, வெண்பாவோ How to win friendsஓ, ரமணி சந்திரனோ எண்டமூரியோ, சுஜாதாவோ சொக்கனோ, புத்தகம் படிக்கலாம்.

ஒரு நாளைக்கு அதிகபட்சம் அரை மணிநேரம், மாகஸின்களை தவிர்த்து புத்தகம் என்று நாவலோ நான்-பி்க்-ஷனோ படியுங்கள். டாக்டருக்காவும் டாட்டருக்காகவும் வெயிட் செய்யும் போது கையில் கொண்டு போன புத்தகத்தை படியுங்கள். எழுதும் நேரத்தை தவிர, பா.ராகவன் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் படிப்பதாய் சொன்னார். அவர் எழுத்தாளர். நம் போன்றவர்களுக்கு அரை மணியோ ஒரு மணியோ போதும்.

ஜோடி நம்பர் 1னை ஒரு முறை பார்த்தால் போதும். ரிபீட் டெலிகாஸ்ட் செய்கிறார்கள் என்று நாளொன்றுக்கு நாலுமுறை பார்த்தால் டி.டியையும் மோனிஷாவையும் பிடித்துப் போகும். அப்புறம் கொஞ்சம் பைத்தியமும் பிடிக்கும். அதை விடுத்து நிலா நிழல் படியுங்கள். சரியான ஆரம்பம். ஏற்கனவே இவையெல்லாம் படித்திருப்பவராயின், ஏசுவின் தோழர்களோ, பதினெட்டாவது அட்சக்கோடோ படிக்கலாம்.

எதைப் படிப்பது, எங்கே வாங்குவது என்று கேட்டால், இருக்கவே இருக்கிறது நமது நியூ புக்லேண்ட்ஸ் அல்லது எனி இந்தியன் அல்லது லாண்ட்மார்க்.

இதற்கெல்லாம் மேலே நீங்கள் போன வருடம் புத்தக சந்தையில் வாங்கிய எத்தனை புத்தகங்களை படிக்க எடுத்தீர்கள் என்று கேள்வி கேட்டுக் கொள்ளலாம். ஆசையாய் வாங்கிப் போட்ட பிரம்மோபதேசமும், விசாரணை கமிஷனும், நிலா பார்த்தலும், அம்மா வந்தாளும் எங்கே என்று அப்பார்ட்மெண்டை தூசு தட்டலாம். ராமர் பாலத்தின் காமெடி செய்திகளை பார்ப்பதை விடுத்து செய்யப்படும் இவை எல்லாமே ஒரு நல்ல த்ரில்லர் புத்தகத்தின் ஆரம்பம் போலத்தான். ஷோ சுவீட் !!

விடை : MU@C3B5:30 – Meet you at Chennai City Center by 5:30.

மெக்ஸிகோ சலவைக்காரி ?
குமுதம் 360 பார்வை தொடரில், இந்த வாரம் சுஜாதா மெக்ஸிகோ சலவைக்காரியின் ஜோக்கை, குமுதம் நிறுவனர் எஸ்.ஏ.பியிடம் சொன்னதை பற்றி சொல்கிறார். இப்போதும் எந்த ஒரு பெரிய பத்திரிக்கைகளிலும் அதை விலாவரியாக எழுத முடியாது என்கிறார். யாராவது புதிய தமிழ் வானம் அல்லது புதிய தமிழ் பூமி என்ற பத்திரிக்கைகளில் சுஜாதாவை எழுத அழைக்கலாம். ஜோக் வெளிவந்தால் சரி.

கமலின் அப்பு குள்ளமான ட்ரிக்குக்கு அடுத்தபடியான ஒரு தமிழ் நாட்டு கேள்வி, மெக்ஸிகோ சலவைக்காரி தான். கமல் கூட, அப்புவைப் பற்றி ஏதோ டீவி தொடர் எடுக்கப்போவதாக சொல்கிறார். சுஜாதா…ம்ஹும். பிடி கொடுக்கிறபாடில்லை. தெரிந்தவர்கள் மெயில் எழுதி அனுப்பலாம். உண்மை என்றும் நிருபிக்க முடிந்தால், சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் மூன்றாம் பாகம் பரிசு.

பார்வை 360யிலிருந்து –

மெக்சிக்கோ சலவைக்காரி ஜோக் என்று நீங்கள் அடிக்கடி குறிப்பிடுகிறீர்களே அது என்ன ஜோக்?’ என்று திடீர் என்று கேட்டார்.

நான் அதிர்ந்துபோய், ‘அது கொஞ்சம் ஒரு மாதிரியானது. உங்களிடம் போய் சொல்வதா என்று தயக்கமாக இருக்கிறது’ என்றேன்.

‘சொல்லுங்க.’

‘சொல்லிவிடுவேன்’ என்று பயமுறுத்தினேன்.

‘சொல்லிப் பாருங்க.’

சொன்னேன்.

சற்று நேரம் உறைந்துபோய் மௌனமாக இருந்தார். அதன் பின் கண்ணில் நீர் வரச் சிரித்தார். அடுத்த வாரம் அரசு பதில்களில் அதைக் குறிப்பிட்டு, அது தனக்குத் தெரிந்துவிட்டது என்று கோடி காட்டி எழுதியிருந்தார்.

இப்போதுகூட எனக்கு அந்தச் சம்பவத்தை யோசித்தால், சங்கடமாக இருக்கிறது. அவ்வளவு நல்ல மனிதர், பக்திமான். அவரிடம் போய் அந்த கச்சடா ஜோக்கைச் சொன்னோமே என்று. ஆனால், அவர் அதற்காக என்னை எந்த விதத்திலும் மரியாதைக் குறைவாகக் கருதவில்லை. மெ.ச. ஜோக் முதலில் ப்ளேபாய் பத்திரிகையில் வந்தது. அதை ஒருமுறை வசந்த் சொல்ல ஆரம்பித்து, கணேஷ் தடுத்து செக்ஸ் அதிகம் இருப்பதால் அதை சொல்லாமலேயே விட்டுவிட்டான். அதன் பின் அதைப் பற்றிய உபகதைகள் பல தோன்றி தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் அதைப் பாதுகாத்து வருகிறார்கள். இன்றும் அதை மரியாதைப்பட்ட பத்திரிகைகளில் பிரசுரிக்க முடியாது.

பார்வை 360 – சுஜாதா
குமுதத்தில் இந்த வாரம் முதல் சுஜாதா எழுதும் ஒரு 360 டிகிரி தொடர். ஆரம்பதிலேயே தனது புத்தகங்களிலிருந்து தமிழ் சினிமாவாக மாறியவற்றை கலாய்கிறார்.

1965 என்று ஞாபகம். ‘சசி காத்திருக்கிறாள்’ என்ற கதை வெளிவந்தபோது, வாசகர்களிடமிருந்து அதைப் பாராட்டி நிறையக் கடிதங்கள் வந்தன. ஆசிரியர் எஸ்.ஏ.பி. அதற்கான செக் அனுப்பும் அச்சிட்ட படிவத்தின் ஓரத்தில் ‘அடிக்கடி எழுதுங்கள்’ என்று பொடிப்பொடியாக ஒரு குறிப்பு அனுப்பியிருந்தார். அந்தச் சிறு குறிப்பே எனக்கு உற்சாகமளிக்கப் போதுமானதாக இருந்தது. விளைவு சுஜாதா.

அன்று எஸ்.ஏ.பி. அந்தக் குறிப்பை அனுப்பியிராவிட்டால், இன்று இந்தக் கட்டுரைவரை வந்திருக்கமாட்டேன்.

சினிமாவாக மாறிய என் முதல் கதை ‘காயத்ரி’ 1977_ல் வெளிவந்தது. தினமணி கதிரில் வந்த கதையை பஞ்சு அருணாசலம் திரைப்படமாக எடுக்க விரும்பினார். பஞ்சு ஒரு நல்ல வாசகர். ரஜினிகாந்த் என்ற புதிய நடிகரும் ஸ்ரீதேவியும் நடிப்பதாகச் சொன்னார். படம் முடிந்து முதல் பிரதியை தனியாக ரஜினிகாந்துடன் உட்கார்ந்துகொண்டு ப்ரொஜெக்ஷன் பார்த்தது ஞாபகம் இருக்கிறது. எழுதப்பட்ட கதை சினிமாவாக மாறும்போது, எப்படியெல்லாம் வேஷம் மாறும் என்பதை எனக்கு முதலில் உணர்த்திய அனுபவம்/ அது, ஒரு வகையில் ‘ப்ரியா’ போன்ற பெரிய அதிர்ச்சிகளுக்கு என்னைத் தயார்படுத்தியது. இளம் ரஜினிகாந்த் அடர்த்தியான தலைமுடியுடன் வசீகரமான தோற்றத்துடன் வீற்றிருக்க, இரண்டு பேரும் சிகரெட் பிடித்துக் கொண்டு தனியாகப் பார்த்தோம்.

எழுத்தாளனுக்கு சினிமாவில் என்ன வேலை?
கொற்றவை எழுதி முடித்த கையோடு எழுத்துக்கு கொஞ்ச காலம் break விட்டதன் காரணத்திற்கு ஜெயமோகன், ஆனந்த விகடன் பேட்டியில் பதில் சொல்கிறார். கொற்றவையின் உருவக நடை மண்டைக்குள் ஏறி இறங்க மறுத்ததாலும், ஒரு பெரிய நாவல் எழுதி முடித்த சலிப்பும் முக்கிய காரணம் என்கிறார்.

நான் கடவுள் படத்தில் வசனம் எழுதுகிற அவர், இயக்குநர் பாலாவுடன் பணிபுரிகிற அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டு கொஞ்சம் hype கொடுக்கிறார். முக்கியமாக மலையாள சினிமாவில் ஒரு நல்ல திரைக்கதை ஆசிரியரா ஆகணும் என்பது நான் தனது சினிமா கனவு என்று தமிழ் மிடியாவில் மலையாள தூது விடுகிறார். அசோகவனம் என்னும் தனது அடுத்த நாவல் தன் அம்மா, பாட்டிகளைப் பற்றியது என்கிறார்.

பேட்டியிலிருந்து –

எழுதித் தள்ளியாச்சு, போதுமேன்னும் ஒரு எண்ணம்; நுட்பமான நாவலை யார் கூர்ந்து படிப்பாங் கன்னு கூடவே ஒரு அவநம்பிக்கை. ஒரு பெரிய நாவலை எழுதினதும் வர்ற நிறைவும் சலிப்பும் ஒரு காரணம். அப்புறம் சில தனிப்பட்ட காரணங்கள். முக்கியமா எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் மரணம். அவருடன் ஏற்பட்ட முரண்பாடுகளை என் மனைவி ஏற்றுக்கொள்ள வில்லை. அதனால், இனிமேல் இலக்கிய விவாதமே வேண்டாம் என்று தோன்றியது. எழுதுவதை நான் நிறுத்தினாலும், இன்டர்நெட்டில் என் எதிரிகள் என்னைத் திட்டிக்கிட்டேதான் இருக்காங்க!

என்னைப் பொறுத்தவரைக்கும் நான் செய்கிற வேலையோட சலிப்புக்கு இந்த சினிமா வேலை பல மடங்கு மேல்! அவ்வளவுதான். என் செயல் களுக்கோ, என் எழுத்துக்கோ நான் யாருக்கும் எந்த உத்தரவாதமும் தர முடியாது. என் எழுத்தைப் பார்த்தால் தெரியும். ‘விஷ்ணுபுரம்’ எழுதின சூட்டோட சம்பந்தமே இல்லாம ‘பின்தொடரும் நிழலின் குரல்’ எழுதினேன். அதில் இருந்து ‘ஏழாம் உலகம்’ ரொம்ப தூரம். திடீர்னு பேய்க் கதைகளா எழுதினேன். ‘நிழல் வெளி கதைகள்’னு தொகுப்பா வந்தது. நாளைக்கே நான் ஒரு செக்ஸ் நாவல் எழுதக்கூடும். துப்பறியும் நாவல் எழுதலாம். ‘டிக்ஷனரி’ ஒண்ணு ரெடி பண்ணலாம். தத்துவ நூல் எழுதலாம். என் போக்கு அப்படி!’’

அசோகமித்திரன் – தீராநதி – நேர்க்காணல்
தீராநதியின் ஜனவரி இதழில் வந்துள்ள அசோமித்திரனின் நேர்காணல், சில காலமாய் போரடித்துக் கொண்டிருந்த அந்த இலக்கிய இதழுக்கு உயிருட்டக்கூடியது. அசோகமித்திரனின் பேச்சை ஒரு முறையாவது கேட்டவர்கள், இந்த நேர்க்காணலை படிக்கும் போது அவருடன் உரையாடுவது போலவே இருப்பதை அறிவர். வழக்கம்போல எளிமையான் பேச்சும், மற்றவரை கேலி செய்யாத கருத்துக்களும், செறிவான அனுபவங்களும் நிறைந்தது இப்பேட்டி.

தற்போதை புத்தக பதிப்புத் தொழில் பற்றிய தனது ஆர்வத்தை முன்வைக்கும் போது நிறைய புத்தகம் விற்பது சந்தோஷமாக இருந்தாலும், அவை படிக்கப்பட வேண்டும் என்ற கவலையை முன்வைக்கிறார்.  சாரு நிவேதிதாவின் எழுத்துக்கள் தனக்கு உவப்பாக இல்லாத போதிலும், அது அவருடைய தனிப்பட்ட சாய்ஸ் என்கிறார்.

எளிமையும், கவலையும் கலந்த ஒரு ஆழ்ந்த அனுபவ பகிர்வு.

இரண்டு கட்டுரைகள்
சமீபத்தில் படித்த கட்டுரைகளில் இரண்டு பிடித்தன.

ஒன்று.

ரோபாடிக்ஸ் பற்றி சயண்டிபிக் அமெரிக்கனில், பில் கேட்ஸ் எழுதிய, A Robot in Every Home. இருக்கிற எல்லா டெக்னாலஜியும் ரொம்ப முன்னேற்றி ஓசைப்படாமல் ரோபாடிக்ஸ் பக்கம் திரும்பி இருக்கிறார்கள் மைக்ரோசாப்ட்காரர்கள். கேட்ஸின் இந்த கட்டுரை, ரோபாடிக்ஸ்  பற்றி சாமனியனுக்கு ஒரு curtain raiser.

கேட்ஸ்  சொல்ல வருகிற விஷயம் சுவாரசியமானது தான். இதுதான். தற்போது உலகில் உள்ள அனைத்து ரோபோ தயாரிப்பாளர்களும், அவர்களுக்கு தேவையான மென்பொருளை அமைத்துக் கொள்கிறார்கள். இன்றுல்லபடி ஒரு இரண்டடி ரோபோ மூன்று இஞ்ச் கையசைக்க, சியிலோ, சி++யிலோ, மெஷின் லாங்வேஜிலோ லைப்ரரி பங்ஷன்களை எழுதி, டாட்டா பைபை சொல்லித் தருகிறார்கள். ஒரு ஜப்பான் கம்பெனி தயாரிக்கும் ரோபோ மென்பொருள் மற்றோர் கம்பெனியால் ரோபோவில் உபயோகிக்க inter-operableஆக இல்லை. இதனால், ஆளாளுக்கு தனி மென்பொருள் தயாரிக்க, ஒவ்வோர் ரோபோவும் மற்றோர் ரோபோவிலிருந்து ஏராளமாய் வேறுபடுகின்றன.

மைக்ரோசாப்ட், இந்த சைன்ஸ் பிக்க்ஷன் ரோபோ உலகில் ஏராளமாய் பணங்கொட்டி, Microsoft Robotics Studio மென்பொருளை எழுதியிருக்கிறார்கள். இப்போதைக்கு இது ஒரு இலவச சேவை தான். ஆனால்  மைக்ரோசாப்டின் ஆர்வத்தை பார்த்தால், இன்னும் 5-6 ஆண்டுகளில், இந்த மார்க்கெட் பன்மடங்கு வளரலாம். மைக்ரோசாப்ட்டின் இந்த அறிமுகம், ரோபாடிக்ஸ் மார்க்கெட்டின் Tipping Point ஆகக்கூடும். அப்போது கேட்ஸின் இந்த கட்டுரை, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும்.

அடுத்த பத்து வருடங்களில் உங்களுக்கு அமிர்தாஞ்சன் தேய்த்து விடவோ, பொன்னியின் செல்வன் படித்து நடித்துக் காட்டவோ, வேளாவேலைக்கு இன்சுலின் ஊசி போடவோ, கூட உட்கார்ந்து கண் கசக்கி ‘செல்வி’ பார்க்கவோ, ஒரு அசமஞ்ச ரோபோ வீட்டோடு வரக்கூடும். அதற்கு முன் ஷங்கரும் சுஜாதாவும், கமலை வைத்து ‘ரோபோ’ எடுப்பது நலம்.

இரண்டு.

இதிலும் கேட்ஸ் சம்பந்தப்பட்டிருக்கிறார். பீட்டர் சிங்கரின், What Should a Billionaire Give – and What Should You?, என்னும் நியுயார்க் டைம்ஸ் கட்டுரை, சற்றே நீளமாயிருந்தாலும், சிந்திக்க தூண்டுகிறது. கிறித்துமஸுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு வந்த இக்கட்டுரையில், வாழ்வின் விலை பற்றி ஆரம்பித்தாலும், அதை தாண்டி நமது நம்பிக்கைகளை அசைத்து பார்க்க முயற்சி செய்கிறார், பீட்டர் சிங்கர் என்னும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக பேராசிரியர்.

அமெரிக்காவின் நான்கு பெரிய கொடை கர்ணன்களாகிய ஆண்ட்ரியு கார்னகி, ஜெ டி ராக்ப்பி்ல்லர், பில் கேட்ஸ் மற்றும் வாரன் பப்பெட் ஆகியவர்களில் கார்னகி தவிர மற்ற மூவர் நாத்திகர்கள். இவர்களை கொடுக்க வைத்தது, வளர்ப்பு முறையா ? நம்பிக்கைகளா ? தன்னை இறந்த பின்னும், இவ்வுலகம் ஞாபகம் வைத்திருக்க வேண்டும் என்று கோவில்கள் கட்டும் பேரரசர்கள் போன்ற எண்ணமா ? உலகை மாற்றும் முயற்சியா ? அல்லது  வெறும் egoவா ?. எது ?

நேரம்டா நேரம் !! – 2
என்னை கேட்டால், இதை படிப்பதற்கு முன் முந்தைய Time மேட்டரை படிப்பது சாலச் சிறந்தது என்பேன்.

இரண்டு நாட்கள் முன்பு ஆபிஸ் செல்லும் போது பஸ்சில், படித்துக் கொண்டிருந்தது, மாலனின் ஜன கண மன. காலை பஸ்சில், வழக்கமாக எனக்கு அருகில் உட்காரும் அந்த ஜப்பானிய இளைஞன் படிப்பது ஜப்பானிய புத்தகங்கள் தான். அவனை பார்த்து தான் நாமும் நமது vernacular மொழியில் படிக்கலாம் என்று எண்ணி, ஒரு வருடம் முன்பு பஸ்சில் தமிழ் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன். அதுவரை லைப்ரரியில இருந்து எடுத்த, பிலிப் ராத், ஃபாக்னர், லியான் யூரி என்று ஜல்லியடித்துக் கொண்டிருந்தேன்.

பஸ்சில் பக்கத்து சீட்டு அமெரிக்கர்கள் சிலர், என்ன புத்தகம் படிக்கிறீர்கள், இது என்ன மொழி என்று நிஜ ஆர்வத்துடன் கேட்பார்கள். அவர்களில் இரண்டொருவருக்கு, சுஜாதா – அசோகமித்திரன் பற்றி சொல்லி இருக்கிறேன். சிலர் ஜேம்ஸ் பாட்டர்சனை படித்துக் கொண்டே, என் புத்தகத்தில் எட்டிப் பார்ப்பார்கள். சிலர் ஒன்றும் கண்டு கொள்ளாமல், மாக்கிண்டாஷுவார்கள்.

இரண்டு நாட்கள் முன்பு எதிரில் உட்கார்ந்து கொண்டிருந்த அந்த IPod பெண், தமிழ் புத்தக அட்டையை பார்த்து கொஞ்சம் முகம் சுளித்தது, சங்கடமாய் இருந்ததால், புத்தகத்தை மூடி வைத்து விட்டு மோட்டுவளையை பார்த்துக் கொண்டே தூங்கிப் போனேன்.

நேற்று சியாட்டல் பை படித்துக் கொண்டிருந்த போது, கண்ணில் பட்ட விஷயம் விவகாரமாயிருந்தது. சியாட்டல் விமான நிலையத்தில், தொலைபேசியில் தமிழ் பேசிக் கொண்டிருந்த அப்பாவி தமிழனை சந்தேக கேஸில் பிடித்து விசாரித்து பின்பு விட்டு விட்டார்கள். என்ன தான் அமெரிக்க போலிஸ் நியாயமாக நடந்து கொள்பவர்களாய் இருந்தாலும், நம்ம ஆளு கொஞ்சம் கடியாகி, இனிமேல் விமான நிலையத்தில் தமிழே பேச மாட்டேன் என்று சொல்லி விட்டு சிக்காகோ பிளைட் ஏறியிருக்கிறார்.

மாலனின் புத்தகத்தில் கோட்சே துப்பாக்கியெடுத்து பிர்லா தோட்டம் செல்லும் வரை படித்து விட்டு படுக்கும் போது தான் அது ஞாபகம் வந்தது. டைம் வாரப் பத்திரிக்கை சந்தாவை நிறுத்தலாம் என்று முடிவு  செய்து இருந்தாலும், காலை காபிக்கு துணையாக Seattle Times பேப்பர் போட சொல்லியிருந்தேன்.  ஜிம் போவத்ற்காக காலை 5:30க்கு கதவு திறந்தால் வாசலில், ஒரு குயர் பேப்பரை ரப்பர் பேண்டில் கட்டி போட்டிருந்தார்கள்.

ஏதோ காபிக்காக ஐம்பது செண்ட்டுக்கு வாஙகும் சியாட்டல் டைம்ஸ், ஒரு இரண்டு கிலோவாவது இருக்கும். இருக்கிற information overloadல் இந்த ரெண்டு கிலோ இன்பர்மேஷன் வேறு. பஸ்சில் எடுத்து சென்றால் எக்ஸ்ட்ரா டிக்கெட் கேட்பார்கள் என்று முக்கியமான பேப்பரை மட்டும் எடுத்து செல்கிறேன். இனிமேல் அந்த iPod பெண் வந்தால் முகம் சுளிக்காமல், பாட்டு கேட்கலாம். எனக்கு என்னவோ ஒரு Time  போய் இன்னோரு Time வந்த்து, கத்தி போய் வாள் வந்ததாய் தான் தோன்றுகிறது.

நேரம்டா நேரம் !!
நீங்கள் டைம் படித்திருக்கிறீர்களா ? டைம் ஒரு அமெரிக்க வார இதழ். அதை விடுங்கள், நம்மூர் இந்தியா டுடே பார்த்ததுண்டா. அதைப் போலவே டைமும், அமெரிக்க நடுத்தரவர்க்க பார்த்சாரதிகளுக்கும், சுரேஷ்களுக்குமான பத்திரிக்கை. சந்தா ஓன்றும் அதிகமில்லை. வருஷத்துக்கு இருபதே டாலர், ஜெண்டில்மென். வெறும் இருபதே டாலர்.

நல்ல வழவழ அட்டையில், எதாவது கொழ கொழ மேட்டரை, பேனை பெருமாளாக்கி கவர் ஸ்டோரி போடுவார்கள். அதை நாமும் பஸ்சில்,  பாதி தூக்கத்தில், ஏக குளுரில், படித்துக் கொண்டே ஆபிஸ் செல்வோம். கடைசி ரெண்டு பக்கத்தில், ஏஞ்சலினா ஜோலியின் குழந்தையும், டாம் க்ரூஸின் அடுத்த கர்ள் பிரண்டும் பல் இளிப்பார்கள். அதை பற்றி ஒரு மூன்று பத்தியும், லண்டனில் நடந்த கேட்வாக்கில் அவிழ்ந்த பாவடையும்  பற்றியும் ‘சுவாரசியமாக’ எழுதி விட்டு, இனிதே முற்றும் போடப்படும். நடுநடுவே சூப்பர்மேன் என்னும் கற்பனை ஹீரோ, Gayயா இல்லையா ? ப்ளாகிங் என்னும் புதிய மீடியா தாக்குப்பிடிக்குமா புடுங்கிக்குமா ? சதாம் ஹுசைனா சாகிர் ஹுசைனா ? என்று ‘time’ly கட்டுரைகள் வேறு.

இவ்வளவு கடுப்பாக காரணம், டைம் பத்திரிகை அல்ல. பல வருடங்களாக இந்தியா டுடே படித்து வந்தும், அது ஒரு டைமின் க்ளோன் என்று  தெரியாமல் போனதால் வந்த வெறுப்பு தான். கடந்த ஒரு வருடமாக டைம் படிக்கும் நான் ஆழ்ந்து கவனிப்பது, இந்தியா டுடேவின் காப்பி திறமை தான். என்னமாய் அடிக்கிறார்கள். அட்டையில் இருந்து, க்டைசி பக்கம் வரை அதே மாதிரி ரிப்போர்டிங், புகைப்படங்கள், கருத்து கணிப்புகள், gossipகள் என்று எல்லாமே அதே அதே.

ஏப்ரல் 2007ல் முடியும் எனது சந்தாவிற்கு இப்பொழுதே பணம் கட்டச் சொல்லி கடிதம் போட்டிருக்கிறார்கள். இருபது டாலர் செக் அனுப்பினால், ஒரு வருட சந்தாவும், ஒரு ‘டைம்’பீஸும் தருகிறார்கள். இதை எழுத ஆரம்பித்த பொழுது அனுப்பலாம் என்றிருந்தேன், இப்போ ம்ஹும். No Way.