kirukkal .com » புத்தகம்

இன்ன பிற – 3
மேலே இருக்கும் சார்ட் எதைப்பற்றி என்று சட்டென  கண்டுபிடிப்பவற்கு பிங்க் ஸ்லிப் கிடைக்காமலிருக்க லஸ் பிள்ளையாரை வேண்டிக்கொள்கிறேன். கடந்த ஒருவருடமாக, மக்கள் தொகையையும் மசாலா படங்களையும் தவிர ஏறிக் கொண்டே இருக்கும் ஒரே விஷயம் வேலையின்மை. போன வருடத்தில் இருந்து போன வெள்ளிக்கிழமை வரை இழந்த வேலைகள் 5 மில்லியன். 1949க்கு பிறகு ஒரே மாதத்தில் கிட்டத்தட்ட ஏழு லட்சம் வேலைகள் பறிபோயினதும் இந்த வருடத்தில் தான். தினத்தந்தி செய்தி மாதிரி கடன் துரத்தல் தாங்க முடியாமல் இந்தியர்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிறார்கள், வேலை போனவர்கள் மற்றவர்களை சுடுகிறார்கள், நெவாடா விபச்சாரம் ஆளில்லாமல் அவுட்-ஆப்-பிசினஸாகிறது என்று இருக்கிறது நிலவரம். கிட்டத்தட்ட யாருமே எதிர்பார்க்காத நிலையில் உலகம். நம் வாழ்வின் நாட்கள்.

சந்தை முன்னேறி விட்டது என்கிறார்கள் எகானமிஸ்டுகள். இதற்கு பதில் எதாவது ஆந்தையார், பருந்தார், குருவியார் செய்திகளை நம்பலாம்.

இந்தியாவில் இருந்து வாங்கி வந்திருந்த ஜூனியர் விகடனயும் குமுதம் ரிபோர்ட்டரையும் படித்துக் கொண்டிருக்கும் போது உரைத்தது. மூன்று பக்கங்களுக்கு ஒரு பக்க விளம்பரமாக லேகிய வைத்தியர்கள் வைத்திருக்கும் வைத்தியசாலைகள். இந்த புத்தகங்களை படிக்கும் டெமோகிராபிக் இருபத்தி ஐந்திலிருந்து முப்பது வரை உள்ள இளைஞர்களாய் தான் இருக்க வேண்டும். இவர்களை மங்கிய வெளிச்ச லாட்ஜ்களை நோக்கி வரவழைத்து கொண்டிருக்கும் இந்த லேகிய திலகங்கள் பிசினஸில் இன்னமும் இருப்பது ஆச்சரியமாய் இருக்கிறது.

உதயம் தியேட்டர் வாசலில் இரவு 8 மணிக்கு கடை விரித்து, ’நிற்பதற்கு’ மாத்திரை விற்கும் ஆசாமியை சுற்றி நிற்கும், கொஞ்சமும் கையாலாகாத இளைஞர் கூட்டத்தின் கையில் தென்படுவது மடித்து வைக்கப்பட்ட இம்மாதிரியான அரசியல் பத்திரிக்கைகள் தான்.

கடந்த ஆறு மாதமாக முன்பு போல எழுத முடியாவிட்டாலும், படித்து விடுகிறேன். சமீபத்தில் படித்து ரசித்தது, போன வருடம் புலிட்சர் வாங்கிய, ஜூனோ டயஸ் எழுதிய The Brief Wondrous Life of Oscar Wao.

டாமினிகன் ரிபப்ளிக்கில் பிறந்த ஜூனோ போல இந்த புத்தகத்தின் கதாநாயகன் ஆஸ்கர் டாமினிகனில் பிறந்து நியு ஜெர்சியில் வாழும், 300 பவுண்ட் எடையுள்ள ஆசாமி தான். ஆஸ்கருக்கு பிடித்தமான காமிக்ஸ், விஞ்ஞான சிறுகதைகள், விடியோ கேம்கள் என்று சாதரணமாக ஆரம்பித்து ஒரு க்ளாசிக் காதல் கதையாக மாறி டாமினிகன் ரிபப்ளிக் பற்றியும் அடிமைத்தனத்தை பற்றியும் விரிவாக சொல்லும் நாவலாக உருவெடுக்கும் போது சுவாரசியமாகிறது. ஆங்காங்கே பல பத்திகள் வியக்க வைக்கின்றன. Rafael Trujillo என்னும் சர்வாதிகாரி அதிபரைப் பற்றியும் அறிமுகம் கிடைக்கிறது.

ஜூனோ போல் தமிழில் ஒரு எழுத்தாளர் உருவாகாமல் இருப்பதற்கு காரணம் நம்மூரில் இருக்கும் ஒருவிதமான போராட்டமில்லாத எதையும் ஒத்துக்கொள்ளும் மனோபாவம். அமெரிக்காவில் செட்டிலான எதாவது ஒரு தமிழ் குடும்பத்தை வைத்து இப்படி ஒரு நாவலை பின்னி எடுக்கலாம். அது தமிழ் படமாகாத பட்சத்தில்.

சுஜாதாட்ஸ் – 3
”குட்மார்னிங் ஸார்!”

மக்கின்ஸி அவனிடம் ஓரணா நாணயத்தை வீசி எறிந்தான்.

பொறுக்கிக்கொண்டு அடைப்பத்துடன் விலகினான். வெளியே, “துரை எழுந்துட்டாரு” கேட்டது. மூன்று வேலைக்காரர்கள் மெளன வரிசையாக உள்ளே நுழைந்தார்கள்.

மக்கன்ஸி தன் உள்ளாடைகளில் நடந்து, அறையை விட்டு வெளியே வந்து, அருகே இருந்த குளியலறைக்குள் நுழைந்து, தன் உடைகளை கழற்றி எறிய, அவற்றை ஒரு கருப்பன் பிடித்துக் கொள்ள, மக்கன்ஸி இப்போது உரித்த கோழியைப் போல பிறந்த மேனியாக இருந்தான். வெள்ளை வெளேர் என்று உருவி விட்ட அம்புத்தனமான உடற்கட்டு. கொப்புளிக்கும் தசை நார்கள். திருகி விட்ட கயிறு போல, ஒரு அவுன்ஸ் ஊளைச்சதை இல்லாத ஆரோக்கியம்.

வேளையாட்களில் ஒருவன் மண்பானையிலிருந்து குளிர்ந்த நீரை ஆதரவுடன் ஊற்ற அவன் தன்னை தேய்த்துக்கொண்டு கைநீட்டும்முன் மற்றொரு கருப்புக்கை சோப்புடன் தயாராக இருந்தது. மக்கின்ஸி உற்சாகமாக பாடத் துவங்கினான்.

- கருப்பு சிவப்பு வெளுப்பு (அ) ரத்தம் ஒரே நிறம், ஆகஸ்ட் 1983.

காணமல் போன கதைக் கடல்
நேற்று இரண்டாம் முறை படித்து முடித்தேன்.

ஓரண்டுக்கு முன்பே, சொக்கன் எழுதியிருந்த சல்மான் ரஷ்டியின் கதையை[ஃபத்வா முதல் பத்மா வரை] படித்திருந்தாலும், மீண்டும் படிக்கத் தோன்றியதற்கு காரணங்கள் சில. ரொம்பவும் சில்லியானது, ரஷ்டியின் பிரிந்த தோழியான நம்மூர் பத்மாவின் Top Chef நிகழ்ச்சியை இரண்டு நாட்களுக்கு முன் Bravo சானலில் பார்க்க நேரிட்டது. தலையில் அடித்துக் கொள்ளாத குறை. அதைவிட முக்கியமான காரணம் சமீபத்தில் படித்த ரஷ்டியின் லேட்டஸ்ட் நாவலான The Enchantress of Florence. மீண்டும் தலையில் அடித்துக் கொள்ளாத குறை.

ரஷ்டியின் தி முர்’ஸ் லாஸ்ட் ஸையை படித்தவர்கள், அவரின் சமீபத்திய நாவலை படித்து என்ன சொல்கிறார்கள் என்று அறிய எண்ணம். அவர் எழுதிய குழந்தைகள் கதையான, Haroun and The sea of stories போல அவரின் கதைக் கடலும் காணாமல் போனதாக தெரிகிறது. கொஞ்ச நாட்களுக்கு கதை எழுதுவதை விடுத்து, Imaginary Homelands போல பத்தி எழுதலாம்.

சொக்கன் எழுதிய பயோகிராபிகளில் அவர் சிறந்ததாக கருதுவது, சாப்ளின் கதையைத் தான். என்னைக் கேட்டால் இந்த புத்தகம் தான் என்பேன்.

ரஷ்டியை பத்து வருடங்களாக தொடர்ந்த அந்த ஃபத்வா அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஓட்டமும் நடையுமாக தொடங்கும் இந்த புத்தகம் செல்வது சீரான வேகத்தில். ரஷ்டி அவரின் வாழ்க்கையை பற்றி முன்பே எழுதியிருந்தாலும், சொக்கன் காட்டும் ரஷ்டி கொஞ்சம் புதிதானவர். பம்பாயை காதலிக்கும் சாதாரண மனிதராக, காதல் மன்னனாக, தாய்நாட்டை விட்டு  தொலைந்து போனவராக, போராளியாக.

நம் வாழ்க்கை மொத்தமும் கதைகளின் தொகுப்பு தான் என்னும் ரஷ்டியின் நாவல்கள் பிறந்த கதையை விவரமாக விவரிக்கிறார் சொக்கன். ஃப்த்வா நாட்களை பற்றி, புலம் பெயர்ந்ததால் பட்ட அவஸ்தையைப் பற்றி  நடுநிலையாக சொல்கிறார்.

இரண்டு மணி நேரத்தில் படிக்கக் கூடிய இந்த புத்தகத்தை படித்தவுடன் வரும், ‘இந்த மாதிரி புக்ஸ் எல்லாம் ஈஸியாக எழுதாலாம் போல இருக்கே’ என்ற எண்ணம் தான் சொக்கனின் வெற்றி.

பி.கு – நெப்போலியனை பற்றி சொக்கன் எழுதிய போர்க்களப் புயல் புத்தகத்தை படிக்க வேண்டும்.  நெப்போலியன் எனக்கு ரொம்பவும் பிடித்த காரெக்டர். செந்திலும் நானும் 1998ல் The Waterloo என்று ஒரு திரைக்கதை ஆகக்கூடிய கதை செய்தோம். ”ஃப்ர்ஸ்ட் ஷாட்ட ஓப்பன் பண்ணா”, என்று வுட்லண்ட்ஸ் டிரைவ் இன்னில் பல பேருக்கு கதையை வாயால் டால்பி ஸ்டீரியொவில் திரைப்படம் போட்டு காண்பித்தோம். இன்னமும் தயாரிப்பாளர் கிடைத்தபாடில்லை. நாங்களும் விடுவதாயில்லை. நெப்போலியனைப் போல.

அடுத்தது என்ன? – அசோகமித்திரன்
[ஆனந்த விகடன்]

நாளை[ஏப்ரல் 23] உலக புத்தக தினம். படிப்பதைப் பற்றி பின்பு யோசிக்கலாம், அட்லீஸ்ட் ஆளுக்கொரு புத்தகம் வாங்கலாம்.

ஒரு எழுத்தாளினியின் ஜர்னல்
நள்ளிரவு வரை கண்முழித்து, அவ்வப்போது இரண்டு பக்கங்கள் தாவி, அரை டஜன் பாராக்களை எகிறி குதித்து, பத்துப் பதினோரு வரிகளை மென்று முழுங்கி, லைப்ரரியில் ஃபைன் கட்டி, போன வாரம் தான் ஜாய்ஸ் கேரோல் ஓட்ஸ்(Joyce Carol Oates அல்லது JCO)  என்னும் அமெரிக்க எழுத்தாளினியின் 500 பக்க ஜர்னலை ஒருவழியாய் படித்து முடித்தேன்.

ஓட்ஸைப் பற்றி முன்னமே அவரது மென்மையான உள்ளர்த்தம் நிறைந்த சிறுகதைகள் மூலம் அறிந்திருந்தாலும், சமீபத்தில் படித்த High Lonesome என்னும் தேர்ந்தெடுத்த சிறுகதைத் தொகுப்பின் மூலம் தான் மீண்டும் கண்டுகொண்டேன். இதில் 80களில் எழுதிய Golden Gloves என்னும் மிக நுட்பமான சிறுகதை ரொம்பவும் பிடித்துப் போனது.

1970களில் ஓட்ஸ் கனாடாவின் விண்ட்ஸ்ர் யுனிவர்சிடியில் ஒரு புரபஸராக பணியாற்றிக் கொண்டிருந்தார். முப்பதுகளில் இருந்த ஓட்ஸ் அப்பொழுதே எழுத்துலகில் மிகப் பிரபலம்.  1971ல் ஒரு வருட sabbatical லீவில் இங்கிலாந்துக்கு சென்ற போது, தனிமைத் துயர் போக்க திடிரென்று எழுத(டைப்) செய்ய ஆரம்பித்த அவரது ஜர்னல் இன்று வரை எழுதப்பட்டு கொண்டிருக்கிறது. மொத்தமாய் 5000 பக்கங்கள். இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளது 1973-82 வரை எழுதப்பட்டது மட்டுமே.

இந்த ஜர்னலின் புத்தக வடிவத்தில் காணக் கிடைப்பது, ஒரு சராசரி எழுத்தாளினியின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள். ஜர்னலை பிறகொரு காலத்தில் யாராவது படிப்பார்கள் என்று நினைத்துக் கொண்டெல்லாம் ஓட்ஸ் ரொம்பவும் மெனக்கெட்டு எதையும் எழுதவில்லை. தன் யூனிவர்சிடி வாழ்க்கை, தன் வீட்டின் பின் ஓடும் காட்டாறு, தன் கணவரான ரே ஸ்மித்தின் மீதான காதல், அவர்கள் இருவரும் சைக்கிள் ஓட்டிய நாட்கள், எழுத்தாளர்களான ஜான் அப்டைக் போன்றவர்களுடனான நட்பு, கனவில் வரும் கதை மாந்தர்கள், நண்பர்கள், எதிரிகள், படித்த புத்தகங்கள், மிரட்டிய ஆசாமிகள், போரடித்த படங்கள் என்று ஒருவரின் தனிமனித வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள் தான். இதையெல்லாம் மீறி எழுத்தாளரான அவரது மனதில் நிகழும் creative process, பல கதைகள் எழுதிய விதமும், எழுதத் தூண்டிய தருணத்தையும் தன் நண்பருடன் பகிர்ந்து கொள்ளும் பாங்குடன், தனக்குத் தானே எழுதிக் கொண்ட ஜர்னல் தான் இப்புத்தகம்.

இம்மாதிரி ஜர்னல்களை படிப்பது, மற்றவர்களின் டைரியை படிப்பது போன்ற ஒருவித வாயரிசம் தான் என்றாலும், எழுத்தாளனின் மனதில் நிகழும், கதைகளில் வராத எண்ணங்களை வெளிப்படுத்துவதனால் படிக்க ரொம்பவே பிடித்திருந்தது.

தற்போது இண்டர்நெட்டில் பல எழுத்தாளர்களும் வலைப் பதிவுகளை ஜர்னல் ஸ்டைலில் எழுதுகிறார்கள். சிலர் free-form எனப்படும் ஒரு hybrid ஸ்டைலில். இவை இரண்டிலுமே சுவாரசிய அ-சுவாரசிய விஷயங்கள் இருக்கின்றன. தமிழிலும் வலைப்பதிகளில் எழுத்தாளர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

பா.ராகவன் பேப்பர் எழுதுகிறார். சமீபத்தில் தன் உடல் எடையை குறைத்த விஷயத்தையும், தூர்தர்ஷன் நினைவுகளையும் எளிமையாய் சுவாரசியமாய் சொல்கிறார்.

ஜெயமோகன் படிக்கவே மூச்சு வாங்குகிற விஷயங்களை, கீபோர்டில் கீ போய் வெறும் போர்டு ஆகும் வரை எழுதுகிறார். இரண்டு நாள் படிக்காவிட்டால் ரெண்டு மெகாபைட் அளவுக்கு எழுதித் தள்ளிவிடுகிறார். அவ்வப்போது அங்கத முயற்சிகளில் ஈடுபட்டு நியூஸில் அடிபடுகிறார்.

அட்சரம் வலைப்பதிவு எழுதிக் கொண்டிருந்த எஸ்.ராமகிருஷ்ணன், சன் டிவியில், தினமும் ஒரு மணியாவது தமிழ் வலைப்பதிவுகளை படிப்பதாய் பேட்டியளக்கிறார். செய்தியோடை இல்லாத ஒரு வித வலைப்பதிவு ஆரம்பித்திருக்கிறார்.

இன்னமும் பல தமிழ் எழுத்தாளர்கள் வலைப்பதிவுகள் எழுத வந்தாலும் படிக்கும் வாசகர்கள் இருக்கிறார்கள். எதற்காக இவ்விதமான பதிவுகள் எழுத வேண்டும் என்று கேட்கிற எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். ஜாய்ஸ் கேரோல் ஓட்ஸின் தத்துவம் – The act of writing in a journal is the very antithesis of writing for others. The skeptic might object that the writer of a journal may be deliberately creating a journal-self, like a fictitious character, and while this might be true, for some, for a limited period of time, such a pose can’t be sustained for very long, and certainly not for years. It might be argued that, like our fingerprints and voice “prints,” our journal-selves are distinctly our own; try as we might, we can’t elude them; the person one is, is evident in every line; not a syllable can be falsified.

மூன்று புத்தகங்கள்
ஹாலிவுட்டில் எனக்குப் பிடித்த பல இயக்குனர்களில் குவிண்டிண் டரண்டினோவும் ஒருவர். சிலருக்கு குவிண்டினை ஒரு இயக்குனராக பிடிக்கும். அவர் அதையும் தாண்டி ஒரு சிறந்த எழுத்தாளர்.  சினிமாவின் இலக்கணத்தை கொஞ்சமாய் மாற்றிப் போட்டவர். ரொம்ப பேசுவதைத் தவிர்த்து, ஒரே காட்சியில் எல்லாவற்றையும் காண்பித்து விடும் சினிமா இலக்கணம் பிரபலமாகும் நேரத்தில், சினிமாவை மீண்டும் வளவளவென பேசவைத்து சுவாரசியம் சேர்த்தவர் குவிண்டின்.

குவிண்டனின் ரிசர்வாயர் டாக்ஸ் முதற்கொண்டு பல படங்களில், ரசனையான பேக்ட்ராப்பில், கதையின் திருப்புமுனைக்காக காத்திருக்கும் போது, பேச்சு வெள்ளம் ஆரம்பிக்கும். பேசப்பேச கதையோடு நாம் ஒன்றிப் போவோம். இப்படித் தான் கதை சொல்லியின் பக்கத்திலிருந்து நகர்ந்து கதை மாந்தர்களோடு ஒன்றாவது நடக்கிறது. இந்த டெக்னிக்கின் கில்லாடி குவிண்டின். அதைத் தவிர அவருடைய படங்களின் வரும் ரசிக்கத்தக்க பிண்ணனி இசையும், திரையில் காட்டப்படும் வன்முறையில்லா வன்முறையையும், ஆரம்பம் முடிவு என்பதே அதனதன் இடத்தில் இல்லா சாமர்த்திய திரைக்கதைகளும், அவரை பங்க் சினிமா(punk cinema)வின் தலைவராக்குகின்றன.

Rasied by Wolves : The Turbulent Art and Times of Quentin Tarantino என்னும் இந்த புத்தகத்தில் ஜெரொம் ஷரின்(Jerome Charyn)  குவிண்டன் பிரபலமாவதற்கு அவர் லாஸ் வேகாஸ் நகரத்தின் ஒரு விடியோ கடையில் க்ளர்க்காக் வேலைப் பார்த்த போது அவர் பார்த்துத் தள்ளிய படங்கள் தான் என்ற ஒரு mythஐ இந்தப் புத்தகம் உடைக்கிறது.  அவர் முதலில் நடிகராகவே விரும்பி அதற்கு மேற்கொண்ட பிரயத்தனங்களும், பின்னாளில் அது அவரின் படங்களுக்கு உதவியதை வேகமாக சொல்லப்படுகிறது.

ஆனாலும் குவிண்டன் பற்றிய ஒரு சலசலப்பை ஏற்படுத்த எழுதப்பட்ட புத்தகமாகவே எனக்குத் தெரிகிறது.

The Average American Male என்னும் ச்சாட் க்ளட்ஜனின்(Chad Klutgen) புத்தகம் ஒரு புனைவு. இதன் தலைப்பு எதோ ஆராய்ச்சிக் கட்டுரைப் போல் தோன்றினாலும், க்ளட்ஜனின் முதல் நாவல் இதுவே.

வழக்கமாக எழுத்தாளர்களின் முதல் நாவல்களை படித்து விடுவேன். பலர் முதலில் ஒன்றை எழுதிவிட்டு மீண்டும் மீண்டும் அதையே எழுதிக் கொண்டிருப்பார்கள். இவர்களின் முதல் புத்தகத்தை படித்துவிட்டு, மற்றதை விட்டு விலகலாம்.

லாஸ் ஏஞ்சல்ஸில் தன் இருபதுகளின் இருக்கும் ஒரு பெயரில்லா அமெரிக்க இளைஞன், தன்மை ஒருமையில் எழுதும் அவனுடைய அடல்ஸ் ஒன்லி கதை.

கேஸி(Casey) என்னும் சினிமாக் கனவுகளுடன் இருக்கும் ஒரு அழகான சற்றே பருமனான பெண்ணுடன் வசிக்கிறான். வேலையில்லாத போதும் அவளுடனே சதா சர்வ காலமும் செக்ஸ்ஸை பற்றியே நினைத்துக் கொண்டு வாழ்கிறான். ஜிம்முக்கு போகிறான். விடியோ கேம் விளையாடுகிறான். அழகிய பெண்களை கண்களால் கற்பழிக்கிறான். அவனும் கேஸியும் மூன்று பக்கங்களுக்கு ஒரு முறை கெட்ட காரியம் பண்ணுகிறார்கள்.

தான் கர்ப்பமாக இருப்பதாக பொய் சொல்லி திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கிறாள் கேஸி. அதிலிருந்து தப்பித்து அலினா(Alyna) என்ற ரொம்பவும் அழகான பெண்ணுடன் சுற்ற ஆரம்பிக்கிறான். இந்த மாதிரியும் பெண்களா என்று சற்றே பயமுறுத்தும் அளவுக்கு, அலினாவும் நம் கதாநாயகனும், ரெண்டு பாரவுக்கு ஒரு முறை கெட்ட காரியத்தை கண்டின்யூ செய்கிறார்கள். கடைசியில் தமிழ் சினிமாவின் ஒரு திடீர் திருப்பத்துடன் முடிகிறது.

இதைப் படித்துவிட்டு அமெரிக்க ஆண்கள் எல்லோரும் இப்படித்தான் என்றால் அது தப்பு. இதில் வரும் கதாநாயகனுடன் எல்லா ஆண்களுக்கும் கொஞ்சம் ஒற்றுமை இருந்தாலும், கொஞ்சம் மிகைபடுத்தப்பட்ட காரக்டர் தான் இந்த கதையின் நாயகன்.

ச்சாட் க்ளட்ஜனுக்கு இது முதல் கதை. ரொம்பவும் யோசிக்காமல், தான் பார்த்த பார்க்கும் விஷயத்தை வைத்து கதை நகர்த்துகிறார். கெட்ட வார்த்தை கொட்டிக் கிடக்கிறது. இளைஞர்கள் படித்துவிட்டு ‘கூல்’  என்று சொல்வார்கள். திருமணமான ஆண்கள் லேசாக சிரிப்பை உதிர்ப்பார்கள். பெமினிஸ்டுகள் காறி உமிழ்வார்கள். ச்சாட்டுக்கு இவை எல்லாமே நல்ல விஷயம் தான். கூடிய சீக்கிரத்தில் இந்தக் கதை ஒரு ரொமாண்டிக் ஹாலிவுட் படமானால் ஆச்சரியப்படாதீர்கள்.

அகஸ்டன் பர்ரோஸ்ஸின்(Augusten Burroughs) Running With Scissors ரொம்பவும் பிடித்திருந்ததால்,  Possible Side Effects என்னும் இந்த புத்தகத்தையும் படித்தேன். அகஸ்டன் தன் வாழ்கையில் நடந்த சிறு சம்பவங்களை கொஞ்சம் மிகைப்படுத்தி நகைச்சுவையுடன் எழுதும் நான்காவது புத்தகம். அமெரிக்காவின் நகைச்சுவை எழுத்தாளர்களில் அகஸ்டனும் ஒருவர்.

இந்தப் புத்தகத்தில், ரொம்பவும் பிரபலமான தன்னுடைய ஒரு பாட்டியை பற்றிய எழுதும் முதல் கட்டுரையிலிருந்து Julia’s Child என்று தன் அம்மாவை பற்றி எழுதும் கடைசிக் கட்டுரை வரை எல்லாமே சிரிப்பலை தான். ஆங்காங்கு தன் ஓரின சேர்க்கை விஷயங்களை பற்றி விரிவாக சொல்லும் போது கொஞ்சம் நெளிய வைத்தாலும், பர்ரோஸ்ஸுக்கும் வாய்விட்டு சிரிப்பதற்கும் ஏக பொருத்தம்.

அகஸ்டன் தன்னை சுற்றியுள்ள மனிதர்களையும், தன்னுடைய/அவர்களின் வாழ்க்கையை பற்றிய பார்வையும் அதன் ironyயும் தான் காமெண்டரிகளாக எழுதுகிறார். தன்னுடைய நண்பியுடன் சேர்ந்து John Updikeகை கொல்ல திட்டமிடுகிறார், தன்னுடைய ஆண் நண்பருடன் சேர்ந்து ஒரு உல்லாச பயணம் மேற்கொண்டு சற்றே பயமுறுத்தும் விடுதியில் தங்கி தன் பல்லை இழக்கிறார். லண்டனுக்கு ப்ளைட்டில் போகும் போது, Carrie at the prom (ஸ்டீபன் கிங்கின் Carrie நாவல்) போல மூக்கிலிருந்து ரத்தம் சொட்டுகிறது. அதற்கு பின்னால் நடப்பதெல்லாம் காமெடி தான். அவ்வப்போது அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் ஆறு வித்தியாசம் போடுகிறார். சில முறை சோகமாக தன்னுடைய குடிப்பழக்கம் பற்றி எழுதி சிரிக்க வைக்கிறார்.

இதைப் படித்த பின்னும், சுமாரான படமாகவும் வந்த இவருடைய Running with Scissors தான் சிறந்த புத்தகம் என்பேன். கிடைத்தால் படித்துப் பாருங்கள். ரொம்பவே சிரிப்பீர்கள்.

தண்டர்போல்ட் கிட்
இரண்டாவது உலகப்போருக்குப் பின் வந்த இருபது வருடத்தில், அமெரிக்காவில் பிறந்த குழந்தைகள் மட்டும் கிட்டத்தட 60 மில்லியன். இன்றைய அமெரிக்க ஜனத்தொகையில்(300 மி) கிட்டத்தட்ட நான்கில் ஒரு பாதி பிறந்தது அப்பொழுது தான். 1946 – 1964 வரை அமெரிக்காவில் பிறந்த அந்த தலைமுறையை பேபி பூமர் ஜெனரேஷன்(Baby Boomer generation) என்கிறார்கள். 1960களில் அறிமுகப்படுத்தப்பட்ட Birth Control Pillsகளினால் தான் இந்த பேபி பூமர் ஜெனரேஷன் முடிவுக்கு வந்தது. அமெரிக்க ஜனாதிபதியாய் இருந்த பில் கிளிண்டனும், தற்போதைய ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷும் கூட பேபி பூமர் தலைமுறையில் பிறந்தவர்கள் தான்.

இந்த பேபி பூமர் தலைமுறையில், போன அமெரிக்க நூற்றாண்டின் பாதியில், 1951ல், பிறந்த பில் ப்ரைசன் என்ற எழுத்தாளரின் வாழ்க்கை குறிப்புகள் தான், The Life and Time of a Thunderbolt Kid. அப்படித் தான் ஆரம்பித்தாலும், கிட்டத்தட்ட அமெரிக்கா வல்லரசாக வளர்ந்த அந்த முக்கிய இருபது வருடங்களின் ஒருவித வரலாறாகத்தான் இதைப் படிக்க முடிகிறது.

பில் பிரைசன் ஒரு பயணக் கட்டுரையாளர். A Walk in the Woods என்ற அவரின் அமெரிக்க பயணக் கட்டுரை மிகப் பிரபலம். வெறும் பயணத்தைப் பற்றி மட்டுமல்லாமல், அதன் மூலம் ஓர் இடத்தில் வாழும் மக்களின் கலாசாரம், வாழ்க்கை நிலை என்று பலவற்றையும் கூர்ந்து நோக்கும் திறன் கொண்டவர். இதற்கு மேல் சிறந்த நகைச்சுவையாசிரியர். 2004ன்கில் இவர் எழுதிய A Short History of Nearly Everything , இந்தியாவில் கன்னாபின்னாவென்று விற்றது.

தண்டர்போல்ட் கிட்டில் அயோவா மாகாணத்தின் டி மாய்ன்(Des Moines) நகரத்தில் கழித்த தனது குழந்தைப் பருவத்தைப் பற்றி காமெடியாக விளாவரியாக எழுதுகிறார். எல்லோர் வீட்டிலும் கார்கள் இருந்ததில்லை. 1945 வருடத்திற்கு எழுபதாயிரம் கார்கள் விற்ற அமெரிக்காவில், 1950களின் நடுவே, ஒரு வருடத்திற்கு விற்ற கார்களின் எண்ணிக்கை 4..5 மில்லியன்கள். இப்போதிருக்கும் 64,000 மைல் ஹைவேக்களை, ஹைசன்யோவர் ஜனாதிபதியாய் இருந்த, 50களில் கட்டினார்கள்.

அப்போது தான் ஃபிரிட்ஜ் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒருவர் வீட்டில் ப்ரிட்ஜ் வாங்கினால், ஒரு ஆறு மாதத்திற்கு யாராவது அந்த பிரிட்ஜைப் பார்க்க வந்து கொண்டிருப்பார்கள்.அதைப் பற்றி வீட்டின் தலைவர் ஒரு மணி நேரமாவது பீத்திக் கொள்வார். டிவி ஒளிபரப்புகள் துவங்கின. இன்னமும் கலர் டிவி வந்தபாடில்லை. ஒரே டிவிச் சானலை ஒரு நாடே பார்த்துக் கொண்டிருந்தது. ரொம்பவும் சாய்ஸ்கள் இல்லாமல் மக்கள் சாவகாசமாக, சந்தோஷமாக இருந்தார்கள். பில் பரைசனின் detailingல் கில்லாடி. தண்டர்போல்ட் கிட் என்னும் ஒரு காமிக் ஹிரோவாக தன்னைக் கற்பனைச் செய்து கொண்ட கதை தான் இந்த புத்தகத்தின் ஹைலைட்.

இதை படித்தவுடன், 1950களின் அமெரிக்காவும், 1970களின் இந்தியாவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி என்று தோன்றுகிறது. இதே அனுபவங்கள் நமக்கும் நடந்திருக்கும்.

தான் எழுதும் விஷயத்தில் பெரிதாக ஒன்றும் இல்லாத போது, தனது விவரிப்பு வார்த்தைகளால் விஷயத்தை நகைச்சுவையாக்குகிறார். பஸ்ஸில் படித்துக் கொண்டே வாய்விட்டு சிரித்தேன். பக்கத்தில் இருந்தவர் புத்தகத்தின் அட்டையை மீண்டும் பார்த்துக் கொண்டார்.

அமெரிக்கா எப்படி அமெரிக்காவானது என்று தெரிந்து கொள்ளவேண்டுமானால், சீரியஸ் கட்டுரைப் புத்தகங்களை விடுத்து, இதைப் படித்துப் பார்க்கலாம். கடந்த இரண்டு வருடங்களில் நான் படித்த புத்தகங்களில் சிறந்த புத்தகம் என்று சொல்ல முடியும். யாருக்காவது புத்தகம் பரிசளிப்பதாய் இருந்தால், தற்போது இதைத் தான் வாங்கிக் கொடுப்பதாய் எண்ணம். குழந்தைப் பருவத்தை தாண்டிய யாரும் ரசிப்பார்கள்.

இயந்திரா 3 – ப்ளர்ப்
blurb (blûrb)

n.

A brief publicity notice, as on a book jacket.

blurb whore

n.

A writer who provides flattering comments about a book or movie in exchange for meals, travel, or some other perk.

போன மாதம் நடந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் எத்தனை பேர், “நல்லாருக்கு”, என்று யாரோ சொல்லியோ எங்கோ படித்தோ, புத்தகம் ஒன்றை வாங்கினீர்கள். அப்படியானால், நீங்களும் ஒரு ப்ளர்ப்வாசி தான். காது வழிச் செய்தியும் கிட்டத்தட்ட ப்ளர்ப்(blurb) தான். கிட்டத்தட்ட.

புத்தகங்களின் மேல் பின் அட்டையிலும், முதலிரண்டு பக்கங்களிலும் அடிக்கடி புள்ளிகள் வைத்து எழுதப்படும், அந்த புத்தகத்தை/ஆசிரியரைப் பற்றிய பில்டப் தான் ப்ளர்ப்.

நான் ஒரு ப்ளர்ப் ரசிகன். கையில் கிடைக்கிற எந்த புத்தகங்களானாலும் அதன் ப்ளர்புகளை முதலில் படித்துவிடுவேன். ஆனாலும் ப்ளர்புகளினால் இருக்கும் பயன்களை சந்தேகிக்கிற ஆசாமி. சிலவற்றில் கதையே தெரிந்துவிடும். சிலது எளிதில் பிடிபடாது. பலவற்றில் இது பில்டப் என்று தெரிந்துவிடும். பல ப்ளர்புகளின் உண்மையை அறிய அந்த புத்தகத்தை படிக்க வேண்டி வரும். இப்படி படித்து படித்து தான், யார் உண்மையான விமர்சனவாதி, யார் டகால்டி என்று இப்போது புரிந்து கொள்ள முடிகிறது. முன்பெல்லாம், டூ தம்ஸ் அப் என்று யாராவது சொன்னால் போதும், படத்தைப் பார்த்து விடுவேன். இப்போதெல்லாம், டாப் 10, டாப் 12.26 என்றெல்லாம் போடுகிற கணக்குகளை மதிப்பதில்லை. அப்படி போடுபவர் கபடநாடக வேஷதாரி, நம்பாதீர்கள்.

ப்ளர்ப் என்ற வார்த்தையின் எட்டிமாலஜி ரொம்பவும் சுவாரசியம். ப்ளர்ப் உருவாகி நூறு வருடம்(1907) தான் ஆகிறது. ஷேக்ஸ்பியர் நாடகத்துக்கும் சார்லஸ் டிக்கின்ஸின் புத்தகங்களுக்கும் யாரும் ப்ளர்ப் எழுதிய மாதிரி தெரியவில்லை. கெலெட் பர்ஜிஸ்(Gelett Burgess) என்னும் அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர், Are you a bromide ? என்னும் தன்னுடைய பிரபல புத்தகத்தின், சிறப்பு பதிப்பின் போது,  அதன் அட்டையில்(dust jacket) மிஸ் ப்லிண்டா ப்ளர்ப் என்னும் ஒரு கற்பனைப் பெண்ணின் படத்தை வரைந்து, அந்த புத்தகத்தை ஹைப் செய்து ஓரிரு வாக்கியங்கள் எழுதியிருந்தார்.

பிறகு புத்தகங்களில் இந்த மாதிரி வரும், ஓரிரு வரி விளம்பரங்களுக்கு, அந்த பெண்ணின் பெயரே, நிலைத்து விட்டது.

ஆங்கில மற்றும் உலக மொழிகளில் பிரபலமான அளவு தமிழில் ப்ளர்ப் பிரபலமாகவில்லை தான். அப்படி ஆகுமா என்பதும் மில்லியன் டாலர் கேள்வி. பல தமிழ் எழுத்தாளர்கள் தான் எழுதியதையே மீண்டும் படித்து படித்து மீண்டும் அதையே எழுதிக் கொண்டிருக்கிறார்கள். வேண்டுமானால், அவர்களே அவர்களின் அடுத்த புத்தகத்தின் ப்ளர்ப்பை எழுதிக்கொள்ளலாம்.

இவை தவிர நம்மூர் பத்திரிக்கைகள் அப்படி ஒன்றும் ப்ளர்ப் போடுகிற அளவுக்கு புத்தக விமர்சனம் செய்வதில்லை. புத்தகத்தின் பின் அட்டையை படித்து விட்டு புத்தக விமர்சனம் எழுதுபவர்கள் தான் அதிகம். அப்படி ஒரு இரண்டு வரிகளை எழுதிவிட்டு, புத்தகம் கிடைக்குமிடம், புத்தக பதிப்பாளர், விலை பத்து ரூபாய் என்று எழுதி முடித்து விடுகிறார்கள். இதைப் பற்றி முன்னமே எழுதியிருக்கிறேன். தமிழ் புத்தகங்களில் போடுகிற அளவுக்கு juicyயாக விமர்சனங்களும் வருவதில்லை.

கடைசியாக தமிழில் நான் படித்த ப்ளர்ப், சுப்ரமண்யராஜுவின் கதைகள் என்ற கிழக்குப் பதிப்பக புத்தகத்தில் தான். அது கூட, சுஜாதா வேறோரு தருணத்தில், “சிறந்த பத்து சிறுகதைகளை தேடிக் கொண்டிருக்கின்றேன், அவைகளில் சுப்ரமண்யராஜுவின் கதையும் ஒன்று” என்ற வரி தான். இது தவிர அசோகமித்திரன் ராஜுவின் மரணத்திற்கு பிறகு எழுதிய கட்டுரையில் வந்த வரிகளும் ப்ளர்பாகின.

அமெரிக்க புத்தக பதிப்பக உலகமே இந்த ப்ளர்புகளை நம்பித்தான் இருக்கின்றது. ஒரு புத்தகம் எழுதப்பட்டவுடன், அதன் manuscriptஐ, அந்த புத்தகத்தின் துறையை சேர்ந்த பல பிரபலங்களுக்கும் அனுப்புகிறார்கள். அவர்களில் ஒரு சிலர் படித்துவிட்டு எழுதியனுப்பும் சில பத்திகளிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தகளை புத்திசாலித்தனமாக கோர்த்து, ப்ளர்புகள் உருவாக்கப்படுகின்றன. இதற்காகவே பல ப்ளர்ப் எழுத்தாளர்களை, பதிப்பகங்கள் வைத்திருக்கின்றன.

அப்படி இல்லாமல் போனால், ஒரு அரை டஜன் ப்ளர்ப்புகளை எழுதி அனுப்பி, இவைகளில் ஏதாவதொன்றை செலக்ட் செய்ய சொல்லி மெயிலனுப்புகிறார்கள். ஒரு ப்ளர்ப் எழுதப்பட, அந்த பிரபலங்களுக்கு காபி/டிபன் என்று ஏராளமாய் செலவழிக்கிறார்கள்.

சமீபத்தில் ஒரு பிரபல எகனாமிக்ஸ் புத்தக ஆசிரியருக்கு வந்த ஒரு ப்ளர்ப் வேண்டிக் கடிதம்,

If you find ________ and ________’s ideas as compelling and inspiring as we do, a quote from you that we could print on the jacket would make a world of difference. I would be happy to help craft a quote if you prefer. My contact info is below.

தற்போது படித்துக் கொண்டிருக்கும், Bill Brysonனின் The Life and Times of a Thunderbolt Kidல் எழுதப்பட்டிருக்கும் ப்ளர்பில் ஒன்று,

“The book, which is very funny…is an excercise in hyperbole, the ideal trope for the United States during this time of gragantuan confidence in progress.” – Katherine A. Powers, Boston Globe

இது மாதிரி எழுதப்படும் ப்ளர்ப்புகள் புத்தக அட்டையில், போஸ்டர்களில் பிரிண்ட் செய்யப்பட்டு, கடைகளில் விற்கப்படுகின்றன. ப்ளர்புகளை படித்து விட்டு பிடித்து விட்டால், ஆயிரக்கணக்கில் புத்தக விற்பனை அதிகரிக்கிறது. கிட்டத்தட்ட எல்லா பிரபல ஆங்கில எழுத்தாளர்களின் புத்தக அட்டையிலும் “No. 1 New York Best Selling Author”  என்ற வாசகம் எழுதப்பட்டிருக்கும். இதுவும் ஒரு வகையான ப்ளர்ப் தான்.

அது சரி, தமிழில் ப்ளர்புக்கு சரியான தமிழ் வார்த்தை இதுவரை இல்லை. அல்லது எனக்குத் தெரியவில்லை.  வேண்டுமானால், இலக்கியம் + விளம்பரம் = இலம்பரம் எனலாம். பேஷனாய் இல்லை எனக் குறை கூறுபவர்கள், கெலெட் பர்ஜிஸ்ஸின் கல்லறைக் கதவைத் தட்டி, ப்ளர்ப்பிற்கு தமிழ் வார்த்தைக் கேட்கலாம்.

இயந்திராவிற்கும் புத்தக ப்ளர்ப்பிற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பவர்களுக்கு – இயந்திர-விஞ்ஞான-வியாபார உலகத்தை பற்றி ஓரு தொடர் எழுத ஆரம்பித்த போது, கிடைத்த பெயர் தான் இயந்திரா.

அவ்வப்போது நமிதா பற்றியும் நாசா பற்றியும் கொஞ்சம் சுதந்திரமாக எழுதிப் பார்க்க நினைத்த பத்தி தான் இது.

பாரன்ஹீட் 451
“You don’t have to burn books to destroy a culture. Just get people to stop reading them”, என்று பேச ஆரம்பிக்கும் ரே ப்ராட்பரியின்(Ray Bradbury) ஒரு சயின்ஸ் பிக்-ஷன் க்ளாசிக் தான் Fahrenheit 451.  1953ல் இந்தப் புத்தகம் வந்த போது, சென்ஸார் பிரச்சனையிலிருந்து சின்னப் பையன் எதோ எழுதிட்டான் என்கிற வரையில் இந்த புத்தகம் அலைக்கழிக்கப்பட்டது துரதிஷ்டவசமே. பாரன்ஹீட் 451ஐ விஞ்ஞான கதை என்று அதை ஒரு சிறு பிரிவுக்குள் அடைக்கப்பார்த்தது தான் விமர்சகர்கள் செய்த மிகப் பெரிய தவறு. சில விமர்சகர்கள் இதை ஆர்பரித்தார்கள்.

கை மாண்டாக்(Guy Montag) என்னும் ஒரு தீயிடுவாளன்(தீயணைப்பாளன் அல்ல) பற்றி ஒரு டிஸ்டோப்பிய கதை. டிஸ்டோப்பியா(dystopia) என்பது யுதோப்பியாவின்(Utopia) எதிர்ப்பதம். யுதோப்பியாவில் நாடும் வீடும் மன்னனும் நல்லவனாக இருக்கக்கூடிய ஒரு மாய கனவு உலகம். டிஸ்டோப்பியாவில் எல்லாம் நேரெதிர். சமீபத்தில் வந்த V for Vendetta என்ற ஒரு சூப்பர் ஹீரோ படம், சிறந்த உதாரணம். அரசும் அரசியந்திரமும் மக்களுக்கு எதிரான நிலையில் இயங்கும், தற்காலத்திற்கு கொஞ்சமாய் பொருந்தும் ஒரு மாய உலகம். யுதோப்பிய இலக்கியத்தை விட டிஸ்டோப்பிய இலக்கியங்கள் அதிகமாகி வருவது வியப்பல்ல. ஆர்வெல்லின் 1984ம், வெல்ஸின் War of the Worldsம் கூட டிஸ்டோப்பிய இலக்கியங்கள் தான். மிகச் சிறந்த டிஸ்டோப்பிய படமென்று ஸ்டான்லி ஃகூப்ரிக்கின் A Clockwork Orangeஐ சொல்லலாம்.

ஃபாரன்ஹீட் 451 நடப்பது வருங்காலத்தில். டெக்னாலஜி மிகவும் முன்னேறிய ஒரு அமெரிக்க நகரத்தில். மக்கள் எல்லோரும் பாஸ்ட் புட் சாப்பிட்டு, தங்கள் சுவர் உயர டீவிக்களை சதா சர்வ காலமும் பார்க்கிறார்கள். காட்டுத்தனமான வேகத்தில் வாகனங்கள் ஓட்டுகிறார்கள். ஐபாட் போல சிப்பிகளில் ரேடியோ கேட்கிறார்கள். யாரும் படிப்பதில்லை. சுதந்திரமாக யோசிப்பதில்லை. அரசு மக்களை இவ்வாறு ஒரு மயக்க நிலையில் வைத்து, அவர் சிந்திக்க விடாமல் தடுக்கிறது. நாட்டில் உள்ள எல்லா நல்ல/கெட்ட புத்தகங்களும் கண்டுபிடிக்கப்பட்டு எரிக்கப்படுகின்றன.

கை மாண்டாக் இப்படி பட்ட ஒரு நகரத்தில், புத்தகங்களை கண்டால் எறிக்கும் பல தீ-வீரர்களில் ஒருவன். கதாநாயகன். தனது ஸ்டேஷனில் அலாரம் அடித்தால், யாரோ வீட்டில் புத்தகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று அர்த்தம். கை தனது வாகனத்தில் சென்று அந்த வீட்டில் உள்ள புத்தகங்களை எரித்து விட்டு வரும் தீயிடுவாளன். இதை ஏன் செய்கிறோம் ஏன்று கூட அவன் கேள்வி கேட்பதில்லை. ஒரு நாள், இப்படி அலாரம் அடித்து செல்லும் அந்த வீட்டில் இருக்கும் ஒரு பெண்மணி, தன் புத்தகங்களுடன் தன்னையும் எரித்து போடு என்னும் போது யோசிக்க ஆரம்பிக்கிறான்.

இவ்வாறு தீயிட செல்லும் வீடுகளில் உள்ள சில புத்தகங்களை திருடி படிக்க ஆரம்பிக்கிறான். அவனது மேலகதிகாரி இதை கண்டுபிடித்து, 24 மணி நேர, தேவையான புத்தகங்களை படித்து விட்டு வா என்று அவகாசம் தருகிறாள். இந்நேரத்தில் ஃபாபர்(Faber) என்னும் ஒரு மனிதரை சந்திக்க, அவரின் அறிவரைப்படி செயல்படுகிறான்.

கடைசியில், the book people என்னும் சில அறிவுஜீவிகளை சந்திக்கிறான். அப்பொழுது தான் அது வெளிவருகிறது. நாடெங்கிலும் உள்ள புத்தக பிரியர்கள், பேரிளக்கிய புத்தகங்கள் எரிக்கப்பட்டாலும் அழியாமலிருக்க, அரசுக்கு தெரியாமல், ஆளுக்கு கொஞ்சமாய் மனப்பாடம் செய்து வருவது புரிகிறது. ஆச்சரியமாகிறான். புத்தக பிரியர்களை ஒன்று சேர்த்து புத்தகங்களை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் இறங்குகிறான். மீதியை பழுப்பு நிற பாரன்ஹீட் 451 புத்தகத்தில் படிக்கவும் !!

இங்கு சயின்ஸ் பிக்-ஷனுக்கு உண்டான விஷயம் எங்குள்ளது என்று கேட்டால், புத்தகத்தை படிக்கவும். பாண்டஸிக்கும் சயின்ஸ் பிக்-ஷனுக்கும் நூலிழை தான் இடைவெளி.

ரே ப்ராட்பரி, இதற்கு முன்னும் பின்னும் ஏராளமான நல்ல கதைகள் எழுதியிருந்தாலும், பாரன்ஹீட்451 போல மற்றது புகழடையவில்லை. இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் ஹிட்லர் நாஜிப் படைகளை வைத்து, பெர்லினில் தனக்கு பிடிக்காத புத்தகங்களை எரித்த நிகழ்ச்சி தான் ரேயை இந்த புத்தகம் எழுத தூண்டியது.

ரே சொல்வது போல், உலகத்தில் இப்படி புத்தகங்களை எரிப்பது என்பது ஒரு கலாசாரத்தை அழிக்க உதவும் விஷயம். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னும் அலெக்ஸாண்டிரியாவில் இப்படி புத்தகங்களை எரித்திருக்கிறார்கள். சமீபத்தில், இலங்கையிலும் பழம்பெரும் தமிழ் நூலகம் எரிக்கப்பட்டது. பார்வையற்றோரின் ப்ரைல் புத்தகத்திலிருந்து ஹாரி பாட்டர் வரை சென்ஸாரும் புத்தக எரிப்பும் ஓன்றோடிணைந்த ஒன்று. Books : Burn or Bury என்பது வரலாற்று பாடம்.

இன்றும் பலர் பாரன்ஹீட் 451, வருங்காலத்தில் நடக்கலாம் என்று நம்புகிறார்கள். அதி வேக டிரைவிங்கும், பாஸ்ட் புட்டும், 24 மணி நேர கேபிள் ஆக்கிரமிப்பும் உலகெங்கும் தற்போது நிஜம். அரசாங்கம் தடுப்பதே இல்லை. ஆனாலும் மக்களின் படிப்பு குறைந்து வருகிறது என்று கணிப்புகள் கணிக்கின்றன.

ரேயை சயின்ஸ் பிக்-ஷன் எழுத்தாளர் என்று வகைபடுத்தவும் முடியாது.  கதை எழுதுவார், அவ்வப்போது கவிதை பேசுவார், திடீரென்று நான்கைந்து படங்களுக்கு திரைக்கதை அமைப்பார்.  பின்னொரு நாள் நாடகங்களும், குழந்தைகளுக்கான புத்தகங்களும், நான் பிக்-ஷனும் வரும். ஒரு மாதிரி வகைப்படுத்த முடியாத ஜந்து.

மில்லினியத்தின் தொடக்கத்தில் எண்பது வயது நிரம்பிய போது எடுத்த பேட்டியில் ரே சொன்னது, “The great fun in my life has been getting up every morning and rushing to the typewriter because some new idea has hit me.The feeling I have every day is very much the same as it was when I was twelve.In any event, here I am, eighty years old, feeling no different, full of a great sense of joy, and glad for the long life that has been allowed me.I have good plans for the next ten or twenty years, and I hope you’ll come along.”

எவ்ளோ படிப்பது ?
சமீபத்தில் வெளியான ஒரு அஸோஸியெட்டட் பிரஸ் வாக்கெடுப்பு சொல்வதைப் பார்த்தால், அமெரிக்கர்களில் நான்கில் ஒருவர், போன வருடம் ஒரு புத்தகம் கூட படிக்கவில்லை. நம்மூர் பப்ளிக் எக்ஸாம் ரிசல்ட் போல, அங்கும் அதிகம் படிப்பது பெண்கள் தான். அடுத்ததாக நிறைய புத்தகம் படிப்பவர்கள், முதியவர்கள்.

பைபிள் மற்றும் ஆன்மீக புத்தகங்களை விடுத்துப் பார்த்தால் அதிகம் படிக்கப்படுபவை பாப்புலர் பிக்-ஷன், வரலாறு, பயோகிராபி மற்றும் மர்மக் கதைகள். இவை தவிர மில்ஸ் அன் பூன் போன்ற ரொமாண்டிக் கதைகளும் அதிகம் படிக்கப்பட்டன.

புத்தகம் படிக்கவில்லை என்ற சொன்னவர்களை தவிர்த்துப் பார்த்தால், ஓவ்வொரு அமெரிக்கரும் சராசரியாக படித்திருந்தது தலா ஏழு புத்தகங்கள். இந்த விகிதாசாரம் குறைந்து கொண்டு வருவது தான் கவலையளிக்கிறது என்கிறார்கள்.

மூன்று வருடங்களுக்கு முன் National Endowment for Arts என்னும் கழகம் Reading at Risk என்னும் ஒரு ரிப்போர்ட்டை பதிப்பித்தது. 2002ல் 57% சதவிகிதம் அமெரிக்கர்கள தான் ஏதாவது ஒரு புத்தகமாவது படித்திருந்தார்கள். இது பத்து வருடங்களில் 4% குறைந்திருந்தது. இதற்கு காரணமாக கூறப்பட்டது கேபிள் டீவி மற்றும் இண்டர்நெட்.

அமெரிக்கர்களின் படிக்கும் பழக்கத்தை அதிகரிக்கவே, The Big Read என்னும் புரோக்கிராமை இந்த வருடம் ஆரம்பித்திருக்கிறார்கள். இதில் கண்டிப்பாய் படிக்கப்பட வேண்டிய புத்தகங்களை பட்டியலிட்டு, மாதத்திற்கு ஒரு புத்தகம் என்று ஹைலைட் செய்கிறார்கள். ஒவ்வொரு மாதமும், அந்த மாதத்திற்கான புத்தகத்தை பற்றி ஏராளமான் விவாதங்களும், விமர்சனங்களும் அவரவர் வீட்டருகில் உள்ள அரசு நூலகங்களில் நடைபெறுகின்றன.

கடந்த ஒரு மாதமாக நடைபெறும் இந்த Big Read ஒரு வெற்றி என்றே தோன்றுகிறது. லைப்ரரிகள் களை கட்டுகின்றன. ஒரு நகரத்தில் உள்ள எல்லோரும் ஒரே புத்தகத்தை படிக்கிறார்கள், அதை பற்றி சனிக்கிழமைகளில் நூலகங்த்தில், பர்கர் சாப்பிட்டுக் கொண்டே கதைக்கிறார்கள். இனிமேல் படிப்பாரில்லை என்று பழுப்படைந்து, அடுக்குகளின் ஓரங்களில் இருந்த இந்த லைப்ரரி புத்தகங்களின் எல்லா பக்கங்களும் திருப்பப்படுகின்றன, படிக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட புனர்ஜென்மம் தான்.

இந்த பிக் ரீட் பரிந்துரைக்கும் புத்தகங்களில் எனக்கும் பிடித்தவை ஐந்து. ஏற்கனவே இவைகளை படித்திருந்தாலும் மீண்டும் படிக்கப் போகிறேன். பிடித்த ஆர்டரில், ரே ப்ராட்பரியின் டிஸ்டோபிய கதை, பாரன்ஹீட் 451. பிறகொரு நேரத்தில் ரேயின் இந்த சயின்ஸ் பிக்-ஷனைப் பற்றி எழுத எண்ணம். மற்றவை, ஸ்காட் பிட்ஸ்ஜிரல்டு எழுதிய The Great Gatsby, ஹெமிங்வேயின் Farewell to the Arms, ஹார்பர் லீயின் To Kill a Mockingbird மற்றும் அமெரிக்காவை புரட்டிப் போட்டு புலிட்சர் வாங்கிய ஸ்டெயின்பெக்கின் Grapes of Wrath.

மேலே சொன்ன – அமெரிக்கர்களில் நான்கில் ஒருவர் போன வருடம் ஒரு புத்தகம் கூட படிக்கவில்லை என்ற கணக்கை கொஞ்சம் மாற்றிப் போடலாம். அமெரிக்கர்களில் நான்கில் மூவர் சென்ற வருடம் ஒரு புத்தகமாவது படித்திருந்தார்கள்.

இதை வைத்து நமது தமிழ் கூறும் நல்லுலகத்தின் நிலைமையை கணக்கிடலாம். ஏனென்றால் இதற்கெல்லாம் நம்மூரில் கணக்கெடுப்பதே இல்லை. அப்படியே எடுத்தாலும், “சார் நீங்க கடேசியா இன்னா பொஸ்தகம் படிச்சீங்க ?” என்று சர்ச் பார்க் பஸ் ஸ்டாண்டில் யாரோ ஒரு நிருபர் காமிரா சகிதமாக கேள்வி கேட்க, நம் ஆசாமி வியர்வை வழிய பஸ் வருகிறதா என்று பார்த்துக் கொண்டோ, அல்லது MU@3CB5:30(யோசியுங்கள். விடை கடைசியில்) என்று அப்ரிவேஷனில் SMS அனுப்பிக்கொண்டோ, “அது வந்து சார், I think I read the book last week with Asin hugging teddy bear in the cover” என்று ஏதாவது சொல்லிவிட்டு எஸ்கேப்புவார்.

சீரியஸாக யோசித்தால் உண்மை புரியலாம். அதாவது தமிழ் நாட்டில் பத்திரிக்கைகள் அளவு புத்தகங்கள் விற்பதில்லை. லட்சக்கணக்கில் விற்கும் பத்திரிக்கைகளுக்கு நடுவில் ஆயிரம் காப்பி விற்றாலே, “My writing career has taken off” என்று காலரை தூக்கிவிடும்  எழுத்தாளர்கள் வந்துவிட்டார்கள். அதனால் எழுத்தாளர்களும் AGS ஆபிஸிலோ, அறநிலையத் துறையிலோ மூக்குக் கண்ணாடியை தூக்கி விட்டபடியே கம்யூட்டர் தட்டி கணக்கெழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பக்கம், சரியான புத்தகங்கள் வரவில்லை என்று பப்ளிக்கும்(so called public), மற்றொரு பக்கம், நான் புத்தகம் எழுதினால் வாங்க ஐநூறு பேராவது இருக்கிறார்கள் என்று ஜெயமோகன் போன்ற சீரியஸாக எழுதும் இலக்கியவாதிகளும் இயங்குகிற ஊர் தமிழ்நாடு தான்.

ஆறுகோடி பேர் என்று அடிக்கடி சொல்லிக் கொள்ளும் நம்மூரில், ஐநூறு பேர் தான் முதல் காப்பி வாங்க போகிறார்கள் என்றால், ஒரு எழுத்தாளன் எப்படி எழுதுவான் என்று தெரியவில்லை. அப்படியே எழுதினாலும், எழுத்தினால் கிடைக்கும் சம்பளம் கரண்ட் பில் கட்டகூட சரியாகவில்லை என்றால், working below your labor worth என்று யோசித்து அதிகமாய் பணம் தரும் தனது கம்புயூட்டர் புரோகிராமிங் செய்ய போவது ஒண்ணும் விந்தையல்ல. தமிழ் சினிமா போல கடைசியாய் வேற ஒண்ணும் தெரியாதவர்கள் வந்து சேரக்கூடிய நிலைமையில் உள்ளது தமிழ் புத்தக உலகம். “ஒண்ணு ராவூத்தர் ஹோட்டல்ல ரவுண்டா தோசை ஊத்து இல்லாக்கட்டி ராமர் பாலத்தை பத்தி ஒரு 200 பக்கம் எளுது” என்று அப்பாக்கள் சொல்லும் காலம் கண்ணுக்கு தெரிகிறது.

“இவ்ளோ நேரம் உன்னிய பேச வுட்டோமே, நீ இப்ப என்ன சொல்ல வர” என்று கேட்பவர்களுக்கு, படிக்கலாம். தமிழோ ஆங்கிலமோ, வெண்பாவோ How to win friendsஓ, ரமணி சந்திரனோ எண்டமூரியோ, சுஜாதாவோ சொக்கனோ, புத்தகம் படிக்கலாம்.

ஒரு நாளைக்கு அதிகபட்சம் அரை மணிநேரம், மாகஸின்களை தவிர்த்து புத்தகம் என்று நாவலோ நான்-பி்க்-ஷனோ படியுங்கள். டாக்டருக்காவும் டாட்டருக்காகவும் வெயிட் செய்யும் போது கையில் கொண்டு போன புத்தகத்தை படியுங்கள். எழுதும் நேரத்தை தவிர, பா.ராகவன் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் படிப்பதாய் சொன்னார். அவர் எழுத்தாளர். நம் போன்றவர்களுக்கு அரை மணியோ ஒரு மணியோ போதும்.

ஜோடி நம்பர் 1னை ஒரு முறை பார்த்தால் போதும். ரிபீட் டெலிகாஸ்ட் செய்கிறார்கள் என்று நாளொன்றுக்கு நாலுமுறை பார்த்தால் டி.டியையும் மோனிஷாவையும் பிடித்துப் போகும். அப்புறம் கொஞ்சம் பைத்தியமும் பிடிக்கும். அதை விடுத்து நிலா நிழல் படியுங்கள். சரியான ஆரம்பம். ஏற்கனவே இவையெல்லாம் படித்திருப்பவராயின், ஏசுவின் தோழர்களோ, பதினெட்டாவது அட்சக்கோடோ படிக்கலாம்.

எதைப் படிப்பது, எங்கே வாங்குவது என்று கேட்டால், இருக்கவே இருக்கிறது நமது நியூ புக்லேண்ட்ஸ் அல்லது எனி இந்தியன் அல்லது லாண்ட்மார்க்.

இதற்கெல்லாம் மேலே நீங்கள் போன வருடம் புத்தக சந்தையில் வாங்கிய எத்தனை புத்தகங்களை படிக்க எடுத்தீர்கள் என்று கேள்வி கேட்டுக் கொள்ளலாம். ஆசையாய் வாங்கிப் போட்ட பிரம்மோபதேசமும், விசாரணை கமிஷனும், நிலா பார்த்தலும், அம்மா வந்தாளும் எங்கே என்று அப்பார்ட்மெண்டை தூசு தட்டலாம். ராமர் பாலத்தின் காமெடி செய்திகளை பார்ப்பதை விடுத்து செய்யப்படும் இவை எல்லாமே ஒரு நல்ல த்ரில்லர் புத்தகத்தின் ஆரம்பம் போலத்தான். ஷோ சுவீட் !!

விடை : MU@C3B5:30 – Meet you at Chennai City Center by 5:30.

மற்றவை சில
சியாட்டலில் குளிர் ஆரம்பித்தாகிவிட்டது. பஸ்களில் எந்நேரமும் ஹீட்டர் போடுகிறார்கள். லைட் போடுகிறார்கள். ஆறேகாலுக்கு மேல் பசுமாடு தெரிவதில்லை. வீட்டில் தேங்காய் எண்ணெய் கட்டித்தட்டுகிறது.கார்பெட்டில் கால் பதிக்க முடிவதில்லை. ரோட்டில் எல்லோரும் குளுர் ஜாக்கெட் போட்டிருக்கிறார்கள்.

இதெல்லாம் ஒவ்வொரு வருடமும் அமெரிக்கா குளிர்காலத்திற்கு தயாராக செய்யும் பிரயத்தனங்கள். இன்னமும் கொஞ்ச நாளில் எல்லோரும் கழுத்தில் ஸ்கார்ப் போடுவார்கள். இரண்டடி எடுத்தால், ஐஸ் மூன்றடி வழுக்கும். நாலு மணிகெல்லாம் இருட்டிக் கொள்வதால், வேலை செய்ய போர் அடிக்கும். நம்மூரைப் போல எல்லோரும் எந்நேரமும் டீவி பார்ப்பார்கள். வீட்டிலேயே சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டு, எக் நாக் குடித்துக் கொண்டிருப்பதால் இருப்பதால் சம்மரில் இழந்த தொப்பை மீண்டும் வந்து சேர்ந்து கொள்ளும். சதா சர்வகாலமும் க்ரிஷ் ஸ்ரீகாந்த் போல மூக்கு சிந்த நேரிடும்.

இத்தனை காமெடிகளையும் தாண்டி அமெரிக்க குளிர் பிடித்திருக்க காரணம், சியாட்டல். சியாட்டல் ஒரு ஈர நிலம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை தண்ணீர். இந்த சியாட்டிலையும், அதில் எப்போதும் பெய்யெனப் பெய்யும் மழையும் பற்றி, ஒரு நீண்ட பத்தி, எழுத எண்ணம்.

சென்னையிலிருந்து மற்றுமொரு செட் புத்தகங்கள் வந்து இறங்கி, வீட்டை அடைத்துக்கொண்டன. முக்கியமாய், உடையாரும், படிக்கத் தவறிய சில தி.ஜானகிராமன்,  ருத்ரன், சோ மற்றும் சில டஜன் கிழக்கு பதிப்பக அ-புனைவுகளும்.

புத்தகங்கள் என் அப்பார்ட்மெண்டின் ஆபீஸுக்கு போஸ்டில் வந்து இறங்கின. அதை வாங்க சென்ற என் மனைவி, தூக்க முடியாமல் தூக்கி வந்தாள். “புஸ்தகத்தை பார்த்தா எங்க இருந்து தான் உங்களுக்கு இப்படி ஒரு குறும்பு சிரிப்பு வருதோ ? வேற எப்போதும் இந்த மாதிரி சந்தோஷமாய் ஒரு சிரிப்பைக் காணோம்”, என்றாள் மனைவி.

தற்போது படித்துக் கொண்டிருப்பது, ஜெயமோகனின் எழாம் உலகம். ஒரு வாரத்தில் எழுதிய நாவலென படித்திருக்கிறேன், நம்ப முடியவில்லை.

இந்த கிறுக்கல்.com எழுத ஆரம்பித்து ஆகஸ்டிலேயே ஒரு வருடம் ஆகிவிட்டது. அதுவே இப்பொழுது தான் ஞாபகம் வந்தது. இதுவரை உருப்படியாய் ஒன்றும் எழுதிதாக தெரியவில்லை.

அதற்காக எழுதியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இல்லாததால், இங்கு எழுத பிடித்திருக்கிறது.காமெண்டுகள் இல்லாததும் மற்றுமொரு காரணமாய் இருக்கலாம்.

போன மாதம், ஆரெகன் என்னும் பக்கத்து மாநிலத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு யூஜீன் என்னும் நகரத்தில் தங்கி, ஒரு நாள் முழுவது சுற்றிப் பார்த்த இடம், க்ரேட்டர் லேக்.

ஏழாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன் வெடித்த எரிமலையால் அந்த மலையில் ஒரு பெரும் பள்ளம் எழ, அதில் தோன்றிய ஒரு ஏரி தான் க்ரேட்டர் லேக். இது உலகத்தில் ஒரு யுனீக் இடம் என்றெல்லாம் மார்கெட்டிங் செய்கிறார்கள். உண்மை என்றே தோன்றுகிறது.

உலகத்திலேயே மிக தெளிவான நீர்நிலை இது தான் என்கிறார்கள். ஒரு பெரும் பள்ளத்தில் இருக்கும் நீர், ஆதலால், மற்ற நீர்நிலைகளுடன் கலப்பதில்லை. அதனாலேயே இந்த தெளிவு. Refractionல் அங்கெங்கே மிக அடர்த்தியான நீலத்துடனும், சில இடங்களில் MS பட்டு போன்ற நீலத்திலும், அந்த தண்ணீர் ஒரு தனி அழகு.

போன நூற்றாண்டு வரை, அமெரிக்க பழங்குடி இந்தியர்கள் இதை கடவுளாக வணங்கி வந்தனர். மலை உச்சியிலிருந்து தண்ணீரை பார்ப்பதையே சாமி குத்தமாக் நினைத்திருந்தனர். அங்கிருந்த போர்டுகளில், இதை பற்றியெல்லாம் கதையை படித்த போது, சில நூற்றாண்டுகளுக்கு பின் சென்று அந்த பழங்குடியினத்தவரின் வாழ்கையை நினைத்துப் பார்க்க முடிந்தது.

நயாகராவுக்கு பின் நிறைய NRIs குடும்பத்துடன் வரும் இடம் இதுதான் போலும். கலிபோர்னியாவுக்கு அருகில் என்பதால், எல்லா முக்கிலும், எல்லா வியு பாயிண்ட்களிலும், ஹோண்டா டொயோட்டா கார்களும், லெதர் ஜாக்கெட் – பட்டும் புடவையும், மஃங்கி குல்லாவும், எலுமிச்சை சாதமும் புளியோதரையும் பார்க்க முடிந்தது.

ஸ்பீல்பெர்கின் Artificial Intelligence படத்தில் வரும் அந்த வளைந்து செல்லும், அடர்ந்த உயர்ந்த ஆரெகனின் பச்சை காடுகளினூடே, “யாருக்குள் இங்கு யாரோ ?” கேட்டு/பாடிக் கொண்டே, கார் ஓட்டிய அனுபவம், மறக்க முடியாதது. Classy !!

சிறிசு = பெரிசு
சமிபத்தில் ப்ளைட்டில் ஒரு படமும் பார்க்க பிடிக்காமல் படித்த புத்தகம், சேத் காடின் எழுதிய Small Is The New Big. பார்த்த Namesakeஇன் தொல்லை தாங்கவில்லை.

சேத்தின் வலைப்பதிவை படித்துக் கொண்டு வருபவர்களுக்கு இந்த் புத்தகம் புதிதல்ல. அவரின் வலைப்பதிவில் இருந்தும், அவரின் சில பல பேச்சுக்களிலிருந்தும் எடுத்து தொடுக்கப்பட்ட விஷயங்கள் தான் இந்த புத்தகம். எட்டு வருடங்களாக குருவி சேர்த்த எழுத்துகளாததால், ஹாரி பாட்டர் போல ஒரேடியாக உட்கார்ந்து படித்தால், மவனே சத்தியமாக தலை வலிக்கும் என்று முன்னுரையில் சொன்னாலும், கொரியாவிலிருந்து சீயாட்டல் வருவதற்கு முன்பு படித்துக் கிழித்தாயிற்று. வழக்கம் போல ப்ளைட் சாப்பாடு சாப்பிட பிடிக்காமலும், சேத்தின் எச்சரிக்கையும் சேர்ந்து செம தலைவலி.

சேத் ஒரு மார்க்கெட்டர். அதை தவிர அவருக்கு பல வேலைகள் உண்டு. ஆனால் மார்க்கெட்டிங்கில் புலி. இந்த புத்தகத்தில் மார்க்கெட்டிங் மாயாஜாலம் தவிர பல விடயங்களை பற்றி உரத்த சிந்தனை செய்கிறார். உதாரணத்திற்கு, 94′ல் தான் ஒரு இணையதளத்தை உருவாக்க நினைத்ததை பற்றி சொல்லும் போது, தான் நினைத்ததுடன் நிறுத்திக் கொண்டதாகவும், யாஹூ நிறுவனர்கள் அதை செய்து வெற்றியும் பெற்றார்கள் என்கிறார். இதற்கு அவர் விவரிக்கும் காரணங்கள், யாஹூ நிறுவனர்கள் இளங்கன்றுகள், பயம் அறியாமல் அவர்கள் ஆரம்பித்த இணையதளம் இணைய உலகத்தை மாற்றிற்று. தன் பல வருட அனுபவத்தினால் அந்த செயலில் உள்ள அபயாம் அறிந்து, அந்த எண்ணத்தை விடுத்து, இன்னும் புத்தகம் எழுதி சொல்பமாய் சம்பாதிக்கிறார்.

இணைய உலகத்தை பற்றியும், எப்படி ப்ளாக்குகள் பல கம்பெனிகளை, அதன் வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்கின்றன என்பது பற்றியும் ஏராளமான கட்டுரைகள். இணையத்தில் புதிய சேவையையோ, புதிய மாறுதலையோ கொண்டு வரத் தேவையான அளவுக்கு புதிய ஐடியாக்கள் வேண்டுமாயின் பாத்ரூமில் வைத்து படிக்கலாம். அங்கு தான் பல பெரிய சிந்தனைகள் தோன்றுகின்றன. ஆனால் சேத் சொல்வது போல ஒரே சிட்டிங்கில் முடித்தால், தலை வலிக்கும்.

சேத் காடினின் இந்த வீடீயோவை பார்த்தால், தலை வலித்தாலும் அவரை படிப்பீர்கள் – Sliced bread and other marketing delights. ரிமார்கபிள்.

இப்பொழுதே படி !!
கடைசி புத்தகம் வந்தாகிவிட்டது. இத்துடன் ஹாரி பாட்டர் ரசிகர்கள், என்னைப் போல் ஹாரி பாட்டர் படிக்காதவர்களை muggles, என்றழைக்க முடியாது. நாமும் குரு சிஷ்யன் ரஜினி/ பிரபு போல, “இப்போ என்ன செய்வீங்க” என்று அவர்களை இடுக்கலாம்.

நேற்றிரவு பார்னஸ் அண்டு நோபிளில், ஹாரி பாட்டர் பார்ட்டியை வேடிக்கை பார்க்க போயிருந்தேன்[படங்கள்]. ஜே கே ரவுளிங், தமிழ் நாட்டில் பிறந்திருக்கலாம் என்று எண்ணும்படி, காட்டுக் கூட்டம். யூடியூப்பில் இருக்கிறது, ஜே கேவின் பயோகிராபி. புத்தகம் படிக்காவிட்டாலும், கட்டாயம் பார்க்க வேண்டியவை.

ட்ருமேன் கப்போட்டி
1959ல் கான்ஸாஸ் நகரின் ஒரு ஓதுக்குப்புர வீட்டில், நள்ளிரவில், நான்கு பேர் கொல்லப்படுகிறார்கள். கொன்ற இருவரையும் போலீஸ் பிடித்து ஜெயிலில் அடைக்கிறது. அடுத்த நாள், நியுயார்க் டைம்ஸில் இந்த செய்தியை படித்த ட்ருமேன் கப்போட்டி என்ற பிரபல எழுத்தாளர், இதை பற்றி எழுத கான்ஸாஸ் செல்கிறார். இரண்டு குற்றவாளிகளில் ஒருவனிடம் நட்பாகி, அவன் மனதை புரிந்து கொண்டு எழுத நினைக்கிறார், தன் வாழ்க்கை முற்றிலுமாய் மாறப்போவதை அறியாமல்.

இது கதையல்ல நிஜம். 50களில் வாழ்ந்த, Breakfast at Tiffany’s என்ற பிரபல நாவல் எழுதிய, தான் ஓரினச்சேர்க்கையாளன் என்பதை தன் நாவல் மூலமாக உணர்ந்த ஒரு பிரபல நாவலாசிரியர் ட்ருமேன் கப்போட்டியின் வாழ்வில் நடந்த உண்மைக்கதை இப்படம்.

கப்போட்டி ஒரு விளம்பர பிரியர். பார்ட்டியில் தண்ணி போடும் போது மற்ற எழுத்தாளர்களை கலாய்க்கிறார். தன்னைப் பற்றி தானே உயர்வாக பேசுகிறார், கோர்ட்டு வாசலில் ஆனா நிக்கோல் ஸ்மித் போல சிவப்புக் கம்பள போஸ் கொடுக்கிறார். மொத்தமாக ஐம்பதுகளின் ஒரு ஸ்காட் பிட்ஸ்கிரால்டு பர்சனாலிடி.

அந்த நள்ளிரவு கொலையை பற்றி படித்தவுடன் கான்ஸாஸ் நகரில் இறங்கி, போலீசிலிருந்து கைதி வரை தன்னுடைய பிரபல்யத்தை வைத்தே அரசு இயந்திரத்தை உடைத்து, செய்தி சேர்க்கிறார். அந்த கொலைகாரனை தன் நண்பனாக்கி, அந்த கொலை பற்றிய விஷயமறிகிறார். தன் இளமை பருவத்தை போலவே, அவனுடையதும் பழுதடைந்து  இருப்பதால், ஒரு தருணத்தில் அவனை நேசிக்கவும் ஆரம்பிக்கிறார். இடையில் தன்னுடைய எழுத்தாள காதலனோடு ஸ்பெயின் சென்று கடலை பார்த்துக் கொண்டு குடைக்கு அடியில் பழரசம் குடிக்கிறார்.

ஸ்பெயினிலும் பின் அமெரிக்காவிலும் அடுத்த ஒரு வருடத்தில் அந்த புத்தகத்தை எழுதுகிறார். அப்போது தான் தனக்கு தூக்கு வந்திருப்பதாகவும் அது நிறைவேற்றப்படும் போது கூட இருக்குமாறு அந்த கைதி தபால் அனுப்புகிறான். கான்ஸாஸ் சென்று, ஒரு மாதிரி நெளிந்து கொண்டே தூக்கை சாட்சியாக பார்க்கும் கப்போட்டியை அந்த சம்பவம் உலுக்குகிறது. நம்மையும் தான். ஒருவனை தூக்கிலிடும் அந்த நொடியில் அந்த சமூகமே தூக்கில் தொங்குவதாக சொல்கிறார்கள். அதை உணர முடிகிறது.

அப்புத்தகம் In Cold Blood என்ற பெயரில் தொடராக 1965ல் வெளிவந்து சக்கை போடு போட்டது. ராண்டம் ஹவுஸ் 1966ல் அதை நாவலாக வெளியிட்டது. அ-புனைவு நாவல்(non-fiction novel) என்னும் புத்தக வகையில் வெளிவந்த முதல் புத்தகம் அது. அதற்கு முன் non-fiction novel என்றே ஒன்று கிடையாது. இந்நாவலில் ஒரு தேர்ந்த கதாசிரியரின் நுணுக்கமான விஷயங்களை சொல்லும் பாணியையும்,  புனைவுகளில் கிடைக்கக்கூடிய கதை சொல்லும் உத்தியையும் சேர்ந்து பயன் படுத்தியது தான் கப்போட்டியின் வெற்றியே.

இந்த படத்தில் கப்போட்டியின் நண்பியான ஹார்பர் லீயும் கூடவே வருகிறார். To Kill a Mocking Bird என்னும் ஓரே புத்தகத்தின் மூலமாக உலக புகழடைந்த எழுத்தாளர் அவர். அந்த புத்தகத்தையே கப்போட்டி தான் எழுதினார் என்றும் ரூமருகிறார்கள்.

பிலிப் சீமோர் ஹாப்மேன்(Philip Seymour Hoffman) என்னும் நடிகர் தான் கப்போட்டியாக நடித்தவர். மிஷன் இம்பாஸிபிள் 3யின் வில்லன். கப்போட்டியாக நடித்ததற்காக ஆஸ்கார் விருது பெற்றார். உங்களுக்கு இந்த படம் பிடித்தால் அதற்கு காரணம் பிலிப். தனது மிகவும் subtle ஆக்டிங்கினால் கலங்க அடிக்கிறார். கப்போட்டி போலவே மெல்லிய பெண் குரலில் பேசுகிறார். சமிபத்தில் பார்த்த படங்களில் மிக சிறந்த ஆக்டிங் இவருடையது தான்.

In Cold Blood புத்தகம் கப்போட்டியின் வாழ்கையை மாற்றியது. புகழ் வந்தது. ஆனால் கைதிகளுடன் கழித்த அந்த ஒரு வருடம் அவரை கொஞ்சம் உலுக்கியது. அதற்கு பின் அவர் எந்த நாவலையும் எழுதவேயில்லை. பதினான்கு வருடங்கள் கழித்து, 80களில் Music for Chameleons என்று ஒரு கதை கட்டுரைப் புத்தகம் மட்டும்  வெளிவந்தது.  எழுதுவதில் நாட்டம் குறைந்தது கப்போட்டியின் விதியே. கப்போட்டியை கேட்டுப் பாருங்கள், “All literature is gossip” என்பார்.

முன் கதை சுருக்கம்
“ஏய்…எழுந்திரு” யாரோ நெற்றியயை பின்னுக்குத் தள்ளி எழுப்பினார்கள். ஸ்டேஷனில் இப்போது கும்பல் அதிகமாக இருந்தது.

“இனிமே பீச்சுப்பக்கம் வர மாட்டேன்னு எழுதிக் கொடுத்திட்டுப் போ.”

“யார்ப்பா அது ?”

“என்னமோ தியானம் பண்ண பீச்சுக்கு வந்தானாம். இட்டந்துட்டாங்க. தடி மாடு மாதிரி இருக்கே. என்னத்துக்கு இது உனக்கு… அதெல்லாம் கிழவனுங்க வேலை…ம்… எழுது இதுல.”

“இங்கிலீஷிலயா, தமிழிலியா…” லொட்டென்று தலையில் தட்டினார்கள்.

“பெரிய மயிறு இவரு. தமிழ்ல எழுதுறா” திராவிட முன்னேற்றக் கழகம் நகரசபை பிடித்துக் கொண்ட நேரம் அது. தமிழுக்கு மரியாதை வரத்துவங்கிய காலம்.

1988ல் ஒரு பத்திரிகையில், முன் கதை சுருக்கம் என்ற பெயரில் எழுதிய பாலகுமாரனின் சுயசரிதை தொடர். அவர் எழுத்தாளனாகிய கதை. அல்லது நிஜம். நான்கு வருட இடைவெளியில் இரண்டு முறை படித்ததால் இதை பற்றிய கருத்துக்கள் நிறைய.

மனிதர் கசக்க கசக்க உண்மை பேசுகிறார். இல்லாவிட்டால் வெறும் பரபரப்புக்காக இந்த புத்தகத்தில் உள்ள சில உண்மைகளை சொல்ல வேண்டியதில்லை.  கவிதை எழுதினால் கை தட்டுவார்கள் என்ற நினைப்பில் தான் ஆரம்பித்ததாகவும் அந்த ego சிறிது நாளில் அடங்கி உரைநடை பக்கம் வந்ததை மிக விளக்கமாக மிகைபடுத்தாமல் சொல்வது தான் பிடிக்கிறது.

தெருவில் போகும்போது எல்லோரும் என்னை ‘கவிஞரே’ என்று கூப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். வெறும் எஸ்.எஸ்.எல்.சி டைப்பிஸ்ட் என்பதற்கு மேல் ஒரு அடையாளம். பாலகுமாரன் பி.ஏ இல்லை. எம்.ஏ இல்லை. படிப்பு வரவில்லை. அதனாலென்ன…அவன் கவிஞன். மற்ற ஜனங்களை விட இரண்டங்குலம் உயரமாக நடப்பவன்.

என் ஈகோ என்னை இழுத்துப் போயிற்று. பாராட்டுக்கும் புகழ் போதைக்கும் மனம் தவித்தது.

மதம் தரும் பக்தி இலக்கியமே வாழ்க்கை வளப்படுத்தும் என்று தனக்கு சொல்லப்பட்டது முதலில் தெரியவில்லை என்றும் பின்னர் சென்னை  திமுக நடத்திய இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் தான், மணிப்பிரவாள கதா கலாட்சேபங்கள் தாண்டி  பழந்தமிழ் இலக்கியம் புலப்பட்டது என்கிறார்.

இந்தப் எழுத்தாளனாகிய கதையில் மிக முக்கியமாக எனக்கு பட்டவை இரண்டு. ஓன்று, பாலகுமாரனின் இலக்கிய வட்ட பரிச்சயம். இரண்டு, சுஜாதா-சாவியின் வாசக விழாவில்,  சுப்பிரமணிய ராஜு  என்பவரை பார்த்து பின்பு அவர் உயிர்த் தோழனாக மாறியது.

மிக முக்கியமான தமிழ் இலக்கியவாதிகளுடன் நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்தும், அவர்களிடம் இருந்து பல literary nuancesசை கற்றுக் கொண்டும், தனக்கென ஒரு பாணி அமைத்து, அதிலேயே எழுதுவது, பாலகுமாரனின் பலம். என்ன தான் இலக்கியவாதிகள், எழுத்தை விற்கிறார் என்றெல்லாம் கிண்டலடித்தாலும், பொதுஜன எழுத்து ஒரு போங்கு என்று எழுதினாலும், தனக்கு தெரிந்ததை எழுதுவதாக அவர்களிடமே சொல்லியதும் பலம்.

சுப்பிரமணிய ராஜுவின் நட்பை பற்றி அவர் இறந்த பின் இந்த புத்தகத்தில் எழுதியதால் கொஞ்சம் எதிர்ப்பு வந்ததாக தெரிகிறது. இரண்டு பேரும் சேர்ந்து நீலாயதாட்சி என்னும் பெண்ணுடன் ஊர் சுற்றியதாய் எழுதி இருந்ததால் இருக்கலாம்.

ஆனால் பாலகுமாரனும், ராஜுவும் கதை பற்றி பால பாடம் படித்த கதை தான் மனங் கவர்கிறது. இப்படி போகிறது -

‘வாசகர் வட்டம்’ என்கிற அமைப்பு நல்ல புத்தகங்கள் வெளியிட்டது. அதில் சுஜாதாவின் நெடுங்கதை ஒன்று இருந்தது. படிக்கப் படிக்கப் பிரமிப்பு தட்டியது.

‘யம்மா… எப்படி எழுதறார் இந்த ஆள்… இப்படி எழுத எனக்கு என்று வரும், என்ற ஏக்கம் எனக்கு வந்தது.

சுஜாதாவின் அடுத்த நெடுங்கதை….நான் நூறு முறையாவது அதை படித்திருப்பேன்….. அச்சில் வந்த அந்தக் கதையை நாள் வெள்ளைத்தாள் எடுத்து அப்படியே காப்பி செய்தேன். ‘இது நான் எழுதின கதை’ என்று பக்கத்து போர்ஷன் மாமியிடம் காப்பி செய்த பேப்பரை காட்டினேன். ” ஏ க்ளாஸ் கதைடா, உனக்கு ரொம்ப நன்னா எழுத வர்றது”.

சிறுகதை பிடிபட்டது போலவும், பிடிபடாதது போலவும் இருந்தது.

மறுபடி எழுத்தாளர் சுஜாதா சென்னை வந்திருக்கிறார் என்கிற செய்தி கிடைத்தது.

ஒன்பது மணிக்கு மறுபடி போய் வீட்டுக் கதவை தட்டினோம்.

“வாங்கய்யா” உற்சாகமாய் ரங்கராஜன்(சுஜாதா) வெளியே வந்தார்.

“சாப்பிட்டீங்களா?”

“ஆச்சு சார்” பொய் சொன்னோம். உடனே இலக்கியம் பேசத் துவங்கினோம். பார் பார் பட்டணம் பார் என்று சுஜாதா தூக்கிப் போட, ஒவ்வொரு தகவலும், ஒவ்வொரு  இலக்கிய செய்தியும் வியப்பாக இருந்தது.

நான் கேட்டேன் : ” எத்தனை ட்ரை பண்ணாலும் சிறுகதை எழுத வரலை…சிக்கறது… ஒரு நல்ல சிறுகதை எப்படி எழுதறது?”

எக்மோரில் டாக்டர் நாயர் பாலத்துக்கு அடிவாரம். நான்கு முனை சந்து. அப்போது ஒரு புல்வெளி ரவுண்டானா அங்கே இருந்தது. வாகன ஓட்டம் வெகுவாய் குறைந்திருந்த பத்துமணி இரவு.

ரங்கராஜன் என்கிற சுஜாதா உற்று மெர்க்குரி விளக்கில் என் முகம் பார்த்துவிட்டு தொண்டையை செருமிக் கொண்டார்.

“கதை எழுதறது கஷ்டம் இல்லையா, சுலபம். ஒரு பத்து நிமிஷம் நான் சொல்லித் தரேன். புடிச்சிக்க !”

ஆனால் ரங்கராஜன் பத்தாம் வகுப்பு பையனுக்கு பாடம் நடத்துவது போல் எழுதும் கலை இது என்று எளிமையாக சொல்லித் தந்தார்.

ஒரு விழாவில் ” எனக்கு எழுதச் சொல்லித் தந்த சுஜாதா அவர்களே” என்று நான் குறிப்பிட… சுஜாதா பேசும் போது ” நான் நிறைய பேருக்கு சொல்லிக் கொடுத்தேன். அதுல பாலகுமாரனுக்கு மட்டும் உடனே புரிஞ்சுது. காரணம் ஆர்வம்.”

மணிரத்ன பட க்ளைமாக்ஸ் போல பாலகுமாரனின் இரும்புக் குதிரைகள் நாவலுக்கு ராஜா அண்ணாமலை செட்டியார் விருது கிடப்பதோடு புத்தகம் முடிகிறது. சில வருடங்கள் மற்றோரு முன் கதை சுருக்கம் வரும் என்கிறார். வருகிறது. குமுதம் பக்தியில் காதலாய் கனிந்து என்கிற தொடரில் தன் ஆன்மிக வாசத்தை பற்றியும், தன் உடல்நிலை கவலைக்கிடமான போது நிகழ்ந்தவை பற்றியும் எழுதுகிறார்.

அவரே முயன்றாலும் மீண்டும் ஒரு புத்தகம் இத்தனை மணியாய் எழுத முடியாது. Aspiring Writers கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம். தமிழ் எழுத்தாளர்களின் சுய சரிதைகளிலேயே உ.வே.சா வின் என் சரித்திரம் தான் பெஸ்ட் என்கிறார்கள். அதை படித்ததில்லை. ஆனால் மனம் திறந்து உண்மையாய் எழுதிய சுயசரிதைகளில், பாலகுமாரனுக்கு முக்கிய இடம் கட்டாயம்.