kirukkal .com » பயாஸ்கோப்

உசிர் உதடு மற்றும் சுழி
படம் வெளிவர ஒரிரு மாதங்களுக்கு முன்னர் தொடங்கும் மணி ரத்னத்தின் ஹைப் மெஷின், ஆரம்பித்தாயிற்று. இனிமேல் மனிதர் எல்லா பத்திரிக்கைகளுக்கும் பேட்டி அளிப்பார், படத்தை பற்றிய கிசுகிசு வர ஆரம்பிக்கும், முப்பது நொடி படத்தை காட்டி கவர்ந்திழுப்பார்.

ராவணன் இசை கேட்க சுவாரசியமாயில்லை. ராவணனின் ட்ரைலரை பார்த்தால் காட்டுத் த்ரில்லர் போல இருக்கிறது. அதற்கேற்ற மாதிரி ரஹ்மான் வித்தியாசமாய் இசையமைத்திருக்கிறார். ஆனாலும் வைரமுத்து வரிகளுக்கு கார்த்திக் பாடியிருக்கிற உசுரே போகுதே உசுரே போகுதே  உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே பாடலைத் தவிர மற்றதெல்லாம் சுமார் ரகம். மற்ற சில பாடல்கள் இரைச்சலாய் இருக்கிறது.

இம்மாதிரி சுமார் ட்ரைலர் படமெல்லாம் பிய்த்துக் கொண்டு ஓடியிருக்கிறது. இது எப்படி என்று ஜூன் 18 அன்று தெரிந்து விடும். அதற்கு முன் உதட்டு சுழிக்கெல்லாம் உசிரை விடாமல் பிடித்துக் கொள்வோம்.

போன வார சினிமா
எ வெட்னஸ்டே – புதிய கதைக் களன் என்றெல்லாம் கதை விடாமல் உண்மையை சொல்வதானால், கதாநாயகியின் இன்னபிற சமாசாரங்களை நம்பி எடுக்கப்பட்ட படத்தைப் போல , நடுவில் வரும் அந்த ஒரு திருப்பத்தை நம்பியே எடுக்கப்பட்ட சுமார்ப் படம்.  சிறுகதைகளில் வரும் கடைசி வரி ஓஹென்றி திருப்பங்களை வாசகர் கண்டுபிடித்து விடுவாரேயானால், மற்ற திரில்ல்ர் எல்லாம் வீண். அந்த மாதிரி படம் ஆரம்பித்த ஒரு அரை மணியிலேயே நஸ்ருதீன் ஷாவை பற்றி கண்டுபிடித்து விட்டதனால், இயக்குனரின் வித்தியாச திரைக்கதை மனசில் ஒட்டவில்லை.

மற்றபடி இந்த மாதிரி சினிமா வந்தா தான் இந்திய சினிமாவுக்கு நல்லது என்ற ____வுட் ’டாக்’ எல்லாம் கேட்டு அலுத்து விட்டாயிற்று. இதை பார்த்த பின் கமல் எடுத்த இதன் தமிழ்ப் பதிப்பை பார்க்க ரொம்பவும்  எதிர்பார்ப்பில்லை. தலைவன் இருக்கிறான் என்ற டைட்டிலே கதையை சொல்லாமல் இருக்கிறது. உன்னைப்போல் ஒருவன் என்றெல்லாம் சொல்லியும் தமிழர்களுக்கு ஒரு க்ளூவும் கிடைக்கவில்லை என்றால், அவர்களை ப..பு..தி.

தில்லி 6 – அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்து, மக்களை விரும்பி, பெண்ணை சைட் அடித்து, லோக்கல்வாசிகளிடமிருந்து உதை வாங்கி/கொடுத்து, அமெரிக்கா திரும்பிச் செல்ல மறுக்கும் சுவதேஸ கதை. இதைத் தவிர ஹேராம் பிரச்சனைகள். மனதில் தங்கிப்போனதற்கு காரணம் இரண்டு விஷயங்கள். எதோ காமெடிக் கிளைக் கதையாக ஆரம்பித்த கருப்பு குரங்கு விஷயம் அனுமார் வாலாக நீண்டு திரைக்கதையின் திருப்பத்திற்கு உபயோகப்பட்டிருப்பதும், பிரபல கவிஞரை ஞாபகப்படுத்தும் முகத்துடன் வரும் அந்த மனநிலை சரியில்லாதவரின் உனக்குள் கடவுள் தத்துவமும்.

வழக்கம் போல பின்னியிருக்கும் ரஹ்மானின் பாடல்களை சரியாக உபயோகிக்காததால் தில் கிரா தஃப்பதனை தவிர மற்றதெல்லாம் சுமார். காலா பந்தரில் ராப் ஆட்டம் ஆடும் ஜுனியர் பச்சன் எம் டிவி பார்த்ததில்லை போலும்.

நாடோடிகள் – கலக்கலாயிருக்கிறது என்று சிலர் சொன்னதால் பார்த்தால், செம கடி. உப்புமா கதை/தி.கதை. சுப்பிரமணியபுரம் தந்த தைரியத்தில் எடுத்த படம் போல தெரிகிறது. சசிகுமார் ஒரே மாதிரி தாடி வைத்து, மையமாக சிரித்து, இறுக்கமாகவே இருக்கிறார். யதார்த்த தமிழ் சினிமா போலவே ஆரம்பித்தாலும், க்ளைமாக்ஸ் திருப்பத்தில், நண்பர்கள் மூவரும் ஸ்லோமோஷனில் பழி வாங்க நடக்கும் போது கோலிவுட் தெரிகிறது. படத்தில் ரொம்பவே ஸ்லாப்ஸ்டிக் காமெடி.

இச்சைக்கொண்டு
தலை கலைந்த பொம்மை, தனியே ஆடும் ஊஞ்சல், எட்டிப் பார்க்கும் பாம்பு என்று ஒரு த்ரில்லருக்கு தேவையான அத்தனை டெக்ஸ்ட்புக் சமாசாரங்களும் இருந்தாலும், படம் முழுவதும் வியாபித்திருக்கும் அந்த குடும்பத்தின் தனிமையும், இயற்கையான புற சத்தங்களும், பிண்ணனி இசையில்லாமல் விடப்பட்டிருக்கும் பல காட்சிகளுமே காலர் தூக்க வைக்கும் விஷயங்கள்.

அமெரிக்காவின் வசிக்கும் தமிழ்க் குடும்பம் கடைசியாக கொஞ்சம் உருப்படியாக திரையில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. தினமும் ப்ளாரிடாவில் பாராஸ்கீயிங் செய்து கொண்டு, கண்ணைவிட மிகப்பெரிய சன்க்ளாஸ் அணிந்து, மால்களில் கட்டிப்பிடித்து காதல் செய்து, வேகாஸ் இரவில் ஸ்னூக்கர் தட்டி விட்டு, கோல்டன் கேட்டில் டூயட் பாடுவதெல்லாம் இந்தப் படத்தை தவிர்த்து மற்ற தமிழ்/இந்தி சினிமாவில் மட்டும் தான். இப்படித்தான் நாங்கள் வாழ்கிறோம். கிட்டத்தட்ட.

இந்த இரண்டு நிமிட, எல்லோருக்கும் தெரிந்த முடிவை நோக்கியே செல்லும் கதையை, அறிமுக டைரக்டருக்கும் தயாரிப்பாளருக்கும் தில் இருந்தால் ஒழிய எடுத்திருக்க முடியாது. பயப்பட வைக்கவே இல்லையென்றாலும், யதார்த்த சம்பாஷனைகளால் ரசிக்க முடிகிறது. பொழுதுபோக்கு சினிமாவில் மெசேஜ் என்று கடைசியில் க்ராபிக்ஸில் பூச்சிபூச்சியாய் புள்ளிவிபரம் போடுவதால் பயனில்லை. அல்லது உள்ளது, அவார்டுக்கு.

ப்ரசன்னாவும் ஜான் ஷியாவும் அந்த குட்டிப் பெண்ணும் தன் பங்கை செய்திருந்தாலும் படத்தில் வீக் லிங்க் சுமாராக டைலாக் டெலிவரி செய்யும் சினேகா தான். ரொம்பவே சிரமப்படாமல் ஹாலிவுட்டில் எதாவது பயிற்சி வகுப்பிற்கு போயிருந்தால் சினேகாவிற்கு இந்த மாதிரி ஆட்டு மந்தைதனம் இல்லாத தமிழ் சினிமாக்களில் சான்ஸுண்டு.

இன்ன பிற – 4
போன பத்தியை புனைவு என்று வகைப்படுத்தியிருந்ததை பார்க்காமல்,  நிஜமாவா? என்று புருவம் உயர்த்தியபடியே ஈமெயில் எழுதிய இரண்டு அன்பர்களுக்கும் இல்லை என்று பதில் போட நாளாகிப் போனது. யாரந்த எழுத்தாளர் என்று சிலரும் கேட்டிருந்தனர். நானும் அந்த ஈமெயில்களை இங்கே போட்டு பதில் எழுதினால் வித்தியாசமற்று போய்விடும் என்று…

தமிழில் சிறுகதையும் தொடர்கதையும் நாவலும் கிட்டத்தட்ட இல்லை என்றாகி விட்ட இந்த நாளிலும் இந்த கப்சா வலைப்பதிவுகளை விழுந்தடித்து படிக்கும் தமிழர்களை சொல்ல வேண்டும். அப்படியே மிச்சிகனில் இருந்தும் டல்லாஸில் இருந்தும் பொழுது போகாமல் தமிழ் எழுத்தாளர்களை உசுப்பேத்தும் கம்ப்யூட்டர் ஆசாமிகளை பிடித்து, கடைசியாய் கடைசிப் பக்கம் வரை படித்த நாவல் என்னவோ என்று கேட்டால்,”ம்ம்ம்ம்….அதான் சார் வந்தியத்தேவன்….வந்து…பொன்னியின் செல்வன்” என்று சொல்லி விட்டு, “நீங்கள் குடித்த க்ளாசில் காப்பி குடிக்கிறேன் ஐயா” என்று அடுத்த மெயில் அனுப்ப ஆரம்பித்து விடுவார்கள்.

சிறுகதைகளும் தொடர்களும் இல்லாத வாரந்திரிகளை நினைத்துப் பார்க்க முடியவில்லை. 20 வயது இளைஞ/ஞிகள் படிக்கும் தமிழ்ச் சிறுகதைகள் எங்கே எழுதப்படுகின்றன. தேடிப் பார்த்தாலும் அவர்களின் வாழ்க்கையை அருகில் இருந்த பார்க்கும் நேர்த்தியான சிறுகதைகளை பார்க்க முடியவில்லை. அவர்களை மயக்கி தமிழில் படிக்க வைக்க சுஜாதா மீண்டும் பிறந்து வந்தால் தான் உண்டு. அவர்களை சிறுகதைகளை படிக்க வைக்க நம்மாட்கள் முற்படுவதில்லை. அடுத்த தலைமுறையை நினைத்துப் பார்த்து பயப்பட தேவையில்லை. தற்போதைய இளைஞர்களே படிக்காத பட்சத்தில் அடுத்த தலைமுறை பற்றிய கவலை என்பதெல்லாம் கப்சா.

இவர்களுக்கு எல்லாம் குமுதத்திலோ விகடனிலோ எழுதினால் படிக்க தோன்றுவதில்லை. ஃபேஸ்புக்கில் எழுதப்படும் முதல் தமிழ்ச் சிறுகதை பிரபலமாவது சர்வ நிச்சயம். படிக்கக் கூடிய சைஸில்(அதாவது ஐம்பது வரிகளுக்கு மிகாமல்),  முடிக்கக் கூடிய  வேகத்தில் எழுதினால் கண்டிப்பாய் படிப்பார்கள்.

எழுத்தாளர் பாராவின்  கல்கி தொடர்கதையை முழுவதும் படித்தீர்களா ? நினைத்து கொண்டிருக்கிறீர்கள் அல்லவா. படியுங்கள். இந்த டுவிட்டர்வேக உலகத்தில், தமிழ்த் தொடர்கதைகளை படிக்கும் பொறுமை இருந்தால் நீங்கள கொடுத்து வைத்தவர்கள்.

பசங்க என்ற படத்தை பற்றி கேள்விப்பட்டு பார்த்தால் அதீதமான கற்பனைக் காட்சிகள், அதிகப் பிரசங்கித்தனமான குழந்தைகள், கோடம்பாக்க சிச்சுவேஷங்கள், இடைச்சொருகலாக காதல். தமிழில் சிறுவருக்கான நல்லதொரு படத்துக்காக இன்னமும் காத்திருக்க வேண்டியது தான்.

நலம். நலமறிய ஆவி.
13பியில் யாவரும் நலம் என்கிற யாவரும் நலம் மிகவும் ’வித்தியாசமான’ தமிழ்ப் படம். வித்தியாசமான என்றவுடன் காசியில் எடுத்ததா, ஹீரோவுக்கு பேச முடியாதா, க்ளைமாக்ஸில் பிழிய பிழிய சோகமா என்கிற மாதிரி எல்லாம் வித்தியாசமில்லை. அதற்கெல்லாம் ஒரே படத்தை நான்கைந்து வருடங்கள் எடுக்க வேண்டும். இப்படி எல்லாம் இல்லாமல், சாதா கதையை ஸ்பெஷல் சாதாவாக மாற்றிய கதாசிரியருக்கும்/இயக்குனருக்கும்(விக்ரம் குமார்) ஒரு ஷொட்டு(குமுதம் வாசனை!).

யாவரும் நலம் சரியாக எடுக்கப்பட்ட ‘பேய்ப் படம்’. அதைப் பேய்ப் படமாவே முடித்தது தான் ரொம்பவும் பிடித்திருந்தது. சுவாரசியமாய் இருந்தது. திகில் படங்களை எப்பவும் கொஞ்சம் ரசித்துப் பார்ப்பேன். காரணம் அனாவசியமாக லவ் டூயட் இல்லாமல், ஹீரோயினுக்கு பதில் பேயை வைத்து பயமுறுத்துவார்கள். ஹாலிவுட்டின் ஹாரர் ஜானரில் வந்த அனேக முக்கிய படங்களை பார்த்திருக்கிறேன். திகில் படத்தில் பேய் ஆவி ஆகியன இருப்பது முக்கியமில்லை. ஸ்டான்லி க்யூப்ரிக்கின் The Shining போல, பார்வையாளன் மேல் பச்சாதாபமே இல்லாத ஒரு திகில் படம் வேறில்லை. இதே மாதிரி The blair witch projectஐ சொல்லலாம்.

ஒரு மெகா சிரியலுடன் கதை கலக்கும் இடத்தில் சற்றே காதில் பூவாக தெரிந்தாலும் அதை கடைசிவரையில் நம்பும் படியாக செய்த திரைக்கதையும், திகிலூட்டக்கூடிய பிசி ஸ்ரீராமின் காமிரா கோணங்களும் தான். மாதவன் ரொம்ப நாளைக்கு பிறகு மனிதர் நடித்திருக்கிறார். திகில் படங்களுக்கு முக்கியமானது படத்தில் வரும் கதாபாத்திரங்களை தவிர அதில் வரக்கூடிய செட்டுகள் தான். எக்மோரில் போடப்பட்டதாக சொல்லப்படும் அந்த ப்ளாட் செட்டும் கலக்கல்.

கடைசியில் வரும் சில காட்சிகள், அந்த ப்ளாஷ் பேக் காட்சிகள் ஆகியவைகளில் ஹாலிவுட் வாடை. எழுபதிகளில் நடக்கும் ப்ளாஷ்பேக் காட்சிகளில், அலட்சியம் தெரிகிறது. சட்டென செத்துப் போகும் அந்த அப்பாவி தம்பியைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் தற்போதைய க்ராப் வைத்திருக்கிறார்கள். டிஜிட்டல் டிசைன் சட்டை போட்டிருக்கிறார்கள்.

மற்றபடி படத்தில் ஆவி உட்பட யாவரும் நலம்.

சுஜாதாட்ஸ் – 1
’இரு கோடுகள்’ படத்தை ஜனம் ‘ஓஹோ’ என்கிறதே என்று அதில் போய் உட்கார்ந்தேன். படத்தில் வருகிற ஓவ்வொருவருமா ஸ்லேட்டை வைத்துக் கொண்டு கோடு போட்டுக் காண்பிக்க வேண்டும்? ஒருத்தன் குறுக்கே கோடு போடுகிறான். மற்றொருவன்  X கோடு. அப்புறம் ஏன் இப்படி எல்லோரும் பிழியப் பிழிய அழுகிறார்கள்? டைரக்டர் காட்ட விரும்புவது ரியலிஸமா அல்லது caricatureஆ! ரியலிஸம் என்றால் இந்தக் கதையே அர்த்தமற்றது. இந்த conflict ஒரு ஆபீசில் நிகழவே நிகழாது. முதன்முதல் அந்த கலெக்டருக்கு  ஒரு கெடிகாரத்துக்கு உள்ள மூளை இருந்தால்கூட அவள் கேட்பது transfer ஆக இருக்கும்.

- கணையாழியின் கடைசிப் பக்கம், டிசம்பர் 1969

இன்ன பிற – 2
“திரைப்படம் எடுப்பது எப்படி என்பதைப் பற்றி புத்தகம் எழுதும் அளவு `மீடியா டிரீம்ஸ்’ நிறுவனத்தில் எனக்கு அனுபவம், ஐந்து திரைப்படங்களில் ஏற்பட்டுவிட்டது. எந்த பட்ஜெட்டும் குறிப்பிட்ட தொகையை இரண்டு மடங்கு மீறும். இதற்கு மனசுக்குள் தயாராக இருக்க வேண்டும். அதாவது, அவர்கள் ஒரு கோடிக்குள் படத்தை முடிக்கிறேன் என்று சொன்னால் இரண்டு கோடிக்குத் தயாராக இருக்க வேண்டும். அதேபோல் ஒரு படத்தை மூன்று மாசத்தில் முடிக்கிறேன் என்று ஒருவர் சொன்னால், ஆறு மாசத்துக்குத் தயாராக இருக்கவேண்டும். படத்தை பதினெட்டு நாளில் முடிப்பேன் என்று ஒருவர் சொன்னால் உடனே அவரை வழி அனுப்பவும். சம்மதத்துக்காக பொய் சொல்கிறார். படத்தில் ஏதாவது ஒரு ஸ்டார் இருந்தால் அதற்காக அரை மடங்கு கூடுதல் பணம், நேரம் இரண்டுக்குமே தயாராகவும், ஒரு நாளைக்கு ஷூட்டிங் செலவு முப்பதாயிரம் என்று சொன்னால் புளுகுகிறார் என்று அர்த்தம். தமிழ் சினிமாவின் ரேட் ஒரு நாளைக்கு ஒரு லட்சம். பெரிய டிபன் பாக்ஸில் குறைந்தபட்சம் இருநூறு பேர் தின்னே தீர்ப்பார்கள். இதை யாரும் எதுவும் செய்ய முடியாது. கலாசாரம் இப்படி.

இதையெல்லாம் படித்த பின்னும் உங்களில் சிலர் படம் எடுக்கும் தைரியம் பெற்றால் கடவுள் உங்களைக் காப்பாற்றட்டும்!”

- `படமெடுத்துப் பாழாய்ப் போக’ கட்டுரையில் சுஜாதா, 2003

இருபத்தி நான்கு வாரங்களாக குமுதத்தில் எழுதிக் கொண்டிருந்த சுஜாதாவின் கதைக்கு முற்றும் போட்டு விட்டார் ரஞ்சன். நாற்பது வருடங்களுக்கு மேல் எழுதிக் கொண்டிருந்த ஒரு மிகப் பிரபலமான எழுத்தாளனின் கதையை எழுதுவது சுலப(ம்/மன்று).

சுஜாதா அவருடைய வாழ்க்கையின் சுவாரசிய பக்கங்களை அவரின் பத்தி எழுத்துக்களில் அவ்வப்போது எழுதி வந்திருக்கிறார். அவை எல்லாவற்றையும் திரட்டி, மேலும் சிலரை சந்தித்து ஒரு பயோகிராபி தொடரை எழுதி முடித்திருக்கும் ரஞ்சனுக்கு நன்றிகள் பல.

எனக்குத் தெரியாத பல விஷயங்கள் தொடரின் கடைசி சில வாரங்களில் வந்தது. சுஜாதா சினிமாவில் ஒரு காட்சியில் நடித்தது, சினிமா டைரக்‌ஷன் செய்ய பெல் நிறுவன வேலையை ராஜினாமா பண்ண நினத்தது, தன்னுடைய கையெழுத்தை வைத்து தனக்காக ஒரு கணிப்பொறி ஃபாண்ட் அமைத்துக் கொண்டது, ராஜீவ் மேனனின் நட்பு மற்றும் குமுதத்தில் ஆசிரியர் அனுபவங்கள்.

குமுதம்காரர்கள் இதை வருகிற புத்தக சீசனில் புத்தகமாக கொண்டு வந்தால் சில ஆயிரமாவது போகும். தேசிகனும் சுஜாதா பற்றி பயோகிராபிக்கு சில வருடங்களாக யோசித்து கொண்டிருக்கிறார். சுஜாதாவுடனும் இதை பற்றி பல மணி நேரங்கள் பேசியிருப்பதாய் சொன்னார். செய்வார் என நம்பலாம்.

அமெரிக்க வரைபடத்தின் வட மேற்கு மலைபகுதியை சூம் செய்தால் தெரியும் சியாட்டலில் ஏகப்பட்ட பனியுடன் வொயிட் கிறிஸ்துமஸ் கொண்டாடினோம். அப்படி ஒரு வெள்ளை விரிப்பு. பச்சை மரங்களையும் கார்களையும் சேர்த்து பனி விழுங்கிக் கொண்டு மீண்டும் ஒரு முறை தன் இருப்பை காட்டிக் கொண்டது.

நான்கு நாட்களாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் போல, டிவியில் சொல்வதற்கு நேர்மாறாக, பனி என்றால் மழை. மழை என்றால் கடும் பனி. சாட்டிலைட் புருடாவுக்கெல்லாம் அசைவதாய் இல்லை இயற்கைத் தாய்.

க்ளிஷேவாக சொல்வதானால், மாறணும் ஆயிரம். தமிழ் சினிமாவில் மாறவேண்டியவை என்று லிஸ்ட் போட்டால், கதை, நடிப்பு என்பதற்குப் பின் மேக்கப் கலை. தசாவதாரத்தை விட நன்றாக இருந்தாலும், அறுபது வயது பெரியவருக்கு முப்பது வயது கையிருக்கிறது.

கெளதம் மேனன் தன் அப்பா பற்றி ஒரு மெமாயிர் எடுத்ததெல்லாம் அவருடைய கதாசிரிய உரிமை. அதற்கு சரியாக ஒரு திரைக்கதை அமைக்காததால், தியேட்டரில் எத்தனை விளக்குகள் விசிரிகள் இருக்கிறதென்று எண்ண ஆரம்பித்து விட்டேன்.

ஹாரிஸின் பாடல்களும் படத்தோடு பார்க்கும் போது ஒரிஜினாலிடி இல்லை. சூர்யாவோ அபூர்வ சகோதர்கள் கமல் போல ஒல்லி மீசையில் நடனமாடும் எண்பதுகளின் பாடலில் அனக்ரானிசமாக contemporary சிந்தஸைஸர் ஒலி. சகிக்கவில்லை.

க்ளைமாக்ஸில் சூர்யாவின் துயரத்தில் பங்கெடுக்காமல் அந்த பின்சீட்டுப் பெண் சிரித்ததில், கெளதம் மேனனுக்கு எதோ ஒரு செய்தி இருக்கிறது.

இன்னபிற
சதா எழுதிக்கொண்டிருப்பதே ஒரு நல்ல பழக்கம் தான், எழுத்தாளனுக்கு. ஒரு கணினிப் பொறியாளனுக்கும் அதே போலத் தான், கணினியில் வேலைப் பார்ப்பது. நிற்க. கணினித்  தொழில் செய்து கொண்டே எழுத நினைப்பவர்கள், சற்றே யோசிக்கவும். ஒரு பத்து நாள் எழுதாமல் இருந்து விட்டால், எழுத நினைத்தாலும் முடிவதில்லை. கணினி ப்ரோக்கிராமும் சரி, கன்னித் தமிழும் சரி,  ஒரே மாதிரி தான். பயிற்சி பயிற்சி.

ஒரு மாதமாவது அந்தப் பக்கம் போய் விட்டு வரலாம் என்பதற்குள், இந்தப் பக்கம் காய்ந்து விட்டது. இருக்கியா இல்லயா என்று சில விசாரிப்புகள் வேறு. இந்த மாதிரி இரண்டுப் பக்கமும் மாற்றி மாற்றி எழுதினால், இழந்த சக்தி வைத்தியரிடம் போக வேண்டியது வரலாம். ஆகவே கூடிய சீக்கிரம் எதாவது ஒன்றை(அதாவது அந்தப் பக்கத்தை) மூடி விட்டு, ஆர்குட், பேஸ்புக், டுவிட்டர் தொந்தரவுகளை எல்லாம் சற்று நிறுத்தி, பூதக் கண்ணாடியில் சூரியன் போல, எனர்ஜியை ஒரு முகமாய் குவிக்க எண்ணம்.

கமலின் தசாவதாரத்தை பற்றி எதாவது எழுதியே ஆக வேண்டும். என் பக்கத்து வீட்டு செல்ல நாய், ஸ்பார்கி கூட dogspeak என்னும் வலைப்பதிவில் எழுதிவிட்டதாக குலைத்தது. எல்லாவற்றிலும் தசாவதாரம் தான். வலைப்பதிவுகள், அவ்வப்போது இயங்கும் டுவிட்டர் என்று வலையுலகம் இந்தப் படத்திற்கு பெரிய விழா எடுத்தாகிவிட்டது. வலைத்தளங்களில் மேலும் எழுத பாண்ட்விட்த் இல்லாததால், தமிழர்கள் உள்ளங்கையில் எல்லாம் விமர்சனம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். சக இந்தி இந்தியர்கள், கொஞ்சம் வெளிரிப் போய், தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

கமலஹாசன் என்கிற நடிகரை தமிழ்த் திரையுலகம் எப்போதோ கண்டு கொண்டு விட்டது. கமல் என்கிற எழுத்தாளனை ஏற்றுக் கொள்ள மறுப்பதும் தெரிகிறது. தசாவதாரத்தில் கமல் என்கிற எழுத்தாளனின் குழப்பங்களும், புத்திசாலித்தனமும் வெவ்வேறு கலவைகளில் தெரிந்தன. ஹேராமிலும் அப்படித் தான். இருந்தாலும் தமிழின் மிகச்சிறந்த திரைக்கதை அமைப்பாளர் என்று இப்பொழுது கமலைச் சொல்லலாம். விருமாண்டியிலும் தசாவதாரத்திலும் கமல் காட்டியிருக்கக் கூடிய தேர்ச்சி உலகத் தரத்திற்கு இல்லை என்றாலும், மிகச் சிறந்த வளர்ச்சி தான். அதெப்படி என்று சண்டைக்கு வர நினைப்பவர்கள், Babelலின் டீவிடியை பார்க்கவும். மேலும் இந்த மாதிரி அரை டஜன்  சினிமாக்களை எடுத்துக் காட்ட நான் ரெடி.

“கமல் என்கிற கலைஞன் ஒரு கதாபாத்திரத்திலிருந்து மற்றொன்றுக்கு மாறும் கடின உழைப்பை பார்க்கிறேன்” என்று தசாவதாரம் பற்றியும் கேயாஸ் தியரி பற்றியும் நிறைய எழுதிய சுஜாதா, கடைசியாக படத்தை பார்க்காமல் போய் விட்டதை பற்றி கமல் கண்டிப்பாய் வருத்தப்பட்டிருப்பார். நாமும் தான்.

கமல் வைத்த 2006 புத்தாண்டுப் பார்ட்டிக்கு பிறகு, கற்றதும் பெற்றதும் பகுதியில் சுஜாதா எழுதிய வரிகள் இவை.

புத்தாண்டை வரவேற்க கமல்ஹாசனின் பார்ட்டிக்கு டைரக்டர் ஷங்கருடனும், என் மகனுடனும் போயிருந்தேன். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பெரிசாகக் கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவின் ‘ஹு இஸ் ஹூ?’ போல இருந்த பார்ட்டிக்கு, வந்தவர்களைவிட வராதவர்களைச் சுலபமாக எண்ண முடிந்தது. ஸ்ருதி கமல்ஹாசன்… அமெரிக்கா எல்.ஏ-&யில் படித்துக்கொண்டு இருப்பவர், லீவுக்கு வந்திருந்தார். இளமையும் அழகும் இனிமையும் கலந்து வரவேற்க, ‘வேட்டையாடு விளையாடு’, ‘புதுப்பேட்டை’ படப் பாடல்களுடன் டி.ஜே. உபயத்தில் திடும்திடும் ஓசையும் உச்ச டெசிபல்களில் ஒலிக்க, கமல் க்ளோஸ் கோட்டில் ஸ்மார்ட்டாக இருந் தார். சந்தடியில் கிடைத்த சந்தில், ‘ப்ருஸ் அரசுவோட நாயைக் கொன்னுடறான் சார்’ என்று ‘தசாவதாரம்’ லைனை விட்ட இடத்தில் தொடர்ந்தார்.

தசாவதாரம் படத்தை பார்த்த பொழுது ப்ருஸ் என்கிற கதாபாத்திரத்தையும் அரசுவின் நாயையும் காணோம். கதை மாறியதா ? காரெக்டர்கள் மாறியதா ?

எனக்கு தசாவதாரம் பிடித்திருந்தது. படத்தில் கேயாஸ் தியரி பற்றி கமல் க்ளாஸ் எடுக்கும் போது, தெரியும் அ-சுவாரசிய செயற்கைத்தனமும், அதை ஸ்க்ரிப்டில் கொண்டுவரும் போது தெரியும் புத்திசாலித்தனமும் இரண்டற கலந்துள்ள படம். மூன்று மணி நேரத்தில், பாக்கெட்டிலிருந்து பாப்ஃகார்ன் எடுத்து சாப்பிடக் கூட முடியாதபடி கண்களை கட்டிப் போடும் tour-de-force திரைக்கதை. பத்து கதாபாத்திரங்களில் கமல். ஒரு சிலவற்றில் ப்ளாஸ்டிக் தெரிகிறது. மற்றதில் கமல் தெரியவில்லை. சபாஷ் !!

இந்தப் படத்தின் உண்மையான கதைக் கரு, கமல் சொல்ல வந்த கேயாஸ் தியரி, கடவுள் உண்டா இல்லயா, விஷ்ணுவின் தசாவதாரத்துக்கும் இதற்கும் உள்ள ஒற்றுமை என்றெல்லாம் கணினி இன்ஜினியர்கள் போரடிக்கும் ஆபிஸ் நேரத்தில், பக்கம் பக்கமாக ஈமெயில் எழுதிக் இணையத்தில் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். கமல் சிரித்துக் கொண்டிருக்கிறார்.

போன வாரம் பார்த்த கற்றது தமிழ்[தமிழ் எம்.ஏ] என்கிற படம் பிடித்திருந்தது. தெளிவாக ஆரம்பித்து கடைசியில் சற்றே குழம்பிப் போய் முடித்திருந்தாலும், ராம் என்கிற அந்த புதிய இயக்குனர் கண்டு கொள்ளப் படவேண்டியவர். படத்தின் நடுவே, நானே சிவம் என்று யோகிகளுடன் பாங்க் சாப்பிட்டு விட்டு ஜீவா ஆடும் ஆட்டம் தமிழ் சினிமாவிற்கு புதியது. துல்லியமான ஒளிப்பதிவு, கச்சிதமான எடிட்டிங்[ஸ்ரீகர் பிரசாத்], ஆரவாரமான நடிப்பு[ஜீவா, அஞ்சலி] என்று அசத்தியிருக்கிறார்கள்.

கணினி தொழிலால் நலிவடைந்த பிற தொழிலாளர்களின் நிலையை கொஞ்சமாய் எடுத்துச் சொல்லும் விதம் அசட்டுத்தனமாக இருந்தாலும், உண்மை உரைக்கிறது. தாடி வைத்து முகமே மாறிப் போனாலும், கண்களில் மின்னும் நடிப்பால், ஜீவா has arrived. அடுத்த தலைமுறை அசட்டு ஹீரோத்தனங்கள் இல்லாத இயல்பான நடிகன்.

சமீபத்தில் நல்ல புத்தகம் எதும் படிக்கவில்லை. புத்தகமே படிக்கவில்லை என்று சொல்ல முடியாவிட்டாலும், புத்தகம் படிப்பது குறைந்திருக்கிறது. அதே மாதிரி சினிமா பார்ப்பதிலும், இண்டர்நெட்டை பராக்கு பார்ப்பதிலும் கொஞ்சம் சலிப்பு வந்திருக்கிறது.

சியாட்டலில் ஒரு வழியாக வெயில் வந்துவிட்டது. போன வாரம் முதல் அஃபீஷியல் சம்மர். இன்று மழை. இதான் சியாட்டல்.

அரை(குறை)வரி விமர்சனங்கள்
சாவுக்கு ‘கிராக்கி’ – இறந்த தகப்பனின் உடலை வீட்டின் நடுவே கிடத்தி விட்டு, மகன்கள் போடும் ரொம்பவே காமெடியான கலாட்டா. கொஞ்சம் ப்ளாக் காமெடி வகையாய் இருந்தாலும், கிரேஸி மோகன், மாதவன், சூர்யா, பிரகாஷ்ராஜ், அசின், குள்ளமணி என கலந்தடித்தால் கண்டிப்பாய் வெள்ளி விழா. அந்த நிர்வாண மாப்பிள்ளையாக, நட்புக்காக கமல்.

பிடிச்சிருக்கு – யாரோ டைரக்டர், நடிகர், நடிகை, இசையமைப்பாளர். சாதாரணமான க்ளாசிக் லவ் ஸ்டோரி. ஆனாலும் ரொம்பவும் எதிர்ப்பார்ப்பில்லாமல் பார்த்ததால் பிடித்திருந்தது. பாடல்களின் படப்பதிவில் பின்னி எடுக்கிறார் டைரக்டர் கனகு. சபாஷ்.

நிஜவாழ்க்கையில் டான் – ஸ்டீவ் கேரால் நடித்திருப்பதால் நன்றாக இருக்கும் என்று நினைத்து ஏமாற்றிய சராசரி ஹாலிவுட் படம்.

கண்முடித்தனமான காதல் – எதோ இந்திய நடிகை இருந்ததாலும், ட்ரைலர் சுவாரசியமாய் இருந்ததாலும், படம் பார்த்து ஒன்றரை மணி நேரம் வீண். ஹாலிவுட் படத்திலும் மகள்கள் காதலித்தால், இந்தியத் தகப்பன்கள் பல்லைக் கடிக்கிறார்கள்.

இவைத் தவிர இன்னும் இரண்டு மூன்று படங்கள் பார்த்து மறந்து போய் விட்டது. கொஞ்சம் நாட்களுக்கு சினிமா பார்க்கப் போவதில்லை. இனிமேல் தசாவதாரத்திற்கும், இண்டியானா ஜோன்ஸிற்கும் தான் கைக்காசை செலவழிக்கப் போவதாய் முடிவு.

நோ கன்ட்ரி பார் ஓல்ட் மென்
இந்த வருட ஆஸ்கர்களை கவர்ந்து சென்ற கோயன் சகோதரர்களின், மனிதனின் ஆதார குணங்களை பற்றிய அட்டகாசமான படம். ஆர்ட்-ஹவுஸ் படம் போல இருந்தாலும் கண்ணில் ஒற்றிக் கொள்ளக்கூடிய திரைக்கதை, இசையில்லாமல் இழுத்துச் செல்லப்படும் காட்சியமைப்பு, சொல்லாமல் சொல்லப்படும் சின்னச் சின்ன விஷயங்கள் என்று பின்னிப் பெடலெடுத்திருக்கும் படம்.

கண்ணில் எதிர்ப்படும் வயதானவர்களை கேள்வி கேட்டுக் கொண்டே வித்தியாசமாக சுட்டுச் சாகடிக்கும் சைக்கோவான ஒரு வில்லன். குற்றம் செய்த இடத்துக்கே மீண்டும் செல்ல எத்தனிக்கும் மற்றோரு பாத்திரம். போலிஸ் வேலையை விட்டுவிட்டு மனைவிக்கு துணி துவைத்துப் போட எத்தனிக்கும் ஒரு நேர்மையான் போலிஸ் என பலவகைப்பட்ட மனிதர்கள்.

சைக்கோ வில்லன்களில் ஹாவியே பார்டெம்முக்கு முதலிடம். பார்டெம் குடித்துவிட்டுப் போன பால் பாட்டிலை டாமி லி ஜோன்ஸ் எடுத்து பார்க்கும் காட்சியும், அவர்கள் இருவரும் ஒரே இருட்டு அறையில் இருக்கும் காட்சியும் கச்சித ஹைக்கூ. படம் முழுவதும் புரிய சப்-டைட்டில் அவசியமோ அவசியம்.

படம் பிடித்திருந்தால், கோயன் சகோதரர்களின் ரொம்பவும் அறியப்படாத பழைய படமான Blood Simpleலை பார்க்கலாம்.

3 X 9 = டிஸ்லெக்ஸியா
அமீர்கானின் டிஸ்லெக்ஸியா பற்றி பாடமெடுக்கும் தாரே சமீன் பர் கொஞ்சம் பிடித்திருந்தது. முதல் பாதி.

புத்தகத்தில் எழுத்துக்கள் நடனமாட, எண்கள் புரியாத கோலங்களாய் தெரிய, அவ்வப்போது பந்துகள் பறந்து வர நடமாடும் அந்த டிஸ்லெக்ஸியா சிறுவன் மனதை பறித்துக் கொண்டு போகிறான். இந்த வருடத்தின் சிறந்த டாலண்ட் ஷோ.

இடைவேளையில் கோமாளி வேடத்துடன் வரும் அமீர்கான், வழக்கம் போல் இந்திய மசாலாவாக இல்லாமல் ஹாலிவுட் படம் போல் நகரும் படத்தில் நிஜ கோமாளியாய் புகுந்து குழப்பியடிக்கிறார். சிறந்த நடிப்பிக் அவர் மிளிர்ந்தார் என்று விமர்சகர்கள் சொல்வதெல்லாம் சுத்த புருடா. ஏதோ சாதாரணமான படத்தை காப்பாற்ற வந்த பரமாத்மா போல தன்னை நினைத்துக் கொண்டு, இரண்டாம் பாதியில் எல்லா சீன்களிலும் இழுத்துப் போட்டுக் கொண்டு மூஞ்சியை காட்டுகிறார்.

தனது இயக்கதில் வரும் படம், தோற்று விடாமல் இருக்க, தன் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை அதிகரிக்கப் போய், மெல்லிய சிம்பொனி போல இருந்த படம், சிவாஜியின் திரிசூலம் போல அக்மார்க் மசாலாவாகிறது. அந்த ஆர்ட் டீச்சரின் பாத்திரத்தை அடக்கி வாசிக்கும் நடிகர்களை வைத்து செய்திருந்தால், படம் சிம்பொனியாகவே முடிந்திருக்கலாம்.

இரண்டாம் பாதி சுவாரசியமில்லை. தமிழ் சினிமாவில் கிளைமாக்ஸ் கல்யாணத்திற்கு பிறகு பூவடைத்த அறையில், ஹீரோ ஹீரோயினை கட்டிப்பிடித்தவுடன் வரும் சுபம் போல ஒரு ரொம்பவும் எதிர்ப்பார்த்த உப்புமா முடிவு. என்ன தான் டாகுமெண்டிரி படமாயிருந்தாலும் ரொம்பவும் பாடமெடுக்காமல் இருப்பது அவசியம்.

முதல் பாதியில் பல அமைதியான துல்லியமான காட்சிகளுக்காகவும், அந்த சிறுவன் 3 X 9 கணக்கு போடும் கனவுக் காட்சியில் வழிந்தோடும் கிரியேடிவிட்டிக்காகவும் அமீரை மன்னிக்கலாம்.

ஸ்லோமோஷனில் பில்லா
என் நடிப்புத் தொழிலின் மிகப்பெரிய முக்கிய படம் என்கிறார் அஜித்குமார். பத்து வருடங்களுக்கு பிறகு, எல்லா மீடியா ஸ்டூடியோவுக்கும் பேட்டி அளிக்கிறார் என்று ரசிகர்கள் பூரிப்படைகிறார்கள். சிவாஜியை விட அதிகமாக பிரிண்ட் போடப்பட்ட படம் என்று கோடம்பாக்கம் குதூகளிக்கிறது. படத்தில் ஒன்றையும் காணோம். கதையும் திரைக்கதையும் பிரிக்கப்பட்ட அனாதைக் குழந்தைப் போல் அழுகிறது படம். பில்லா 2007.

ஒரு சன் க்ளாஸ் விளம்பரம் போல படத்தில் எல்லாரும் எல்லா காட்சிகளிலும் கண்ணாடியில் காட்சி அளிக்கிறார்கள். கலர் க்ரேடிங்கில் ப்ளூ கலரை படமெங்கும் தெளித்திருக்கிறார்கள். அஜித்திற்கு இன்னமும் டையலாக் டெலிவரி வந்தபாடில்லை. பிரபுவையும் அந்த ஆந்திரா ஹிரோ மீசையுடன் வரும் ஆதித்யாவையும் தவிர வேற யாரும் நடிப்பதைப் பற்றி கவலைப்பட்டதாக இல்லை.

படம் எடுக்கப்பட்டது மலேசியா தான். மக்கள் ஒத்துக்கொள்வார்கள். அதற்காக எல்லா காட்சிகளிலும் பேக்ட்ராப்பாக பெட்ரோனாஸ் டுவின் டவரை காட்டியிருக்க வேண்டாம். ஹீரோவும், செகண்ட் ஹீரோவும், போலீஸும், எல்லாரும் டுவின் டவரின் பக்கத்திலேயே இருக்கிறார்கள்.

ஸ்லோமோஷனை over-cranking என்று டெக்னிக்கலாக குறிக்கிறார்கள். படத்தை ஷூட் செய்யும் போது, செகண்டுக்கு 24 பிரேம்களை விட வேகமாக பதிவு செய்து கொண்டு, படத்தை திரையிடும் போது 24 பிரேம்களாக மாற்றினால ஸ்லோமோஷன் எஃபக்ட் கிடைக்கிறது. பில்லாவில் வழக்கத்திற்கு அதிகமான ஸ்லோமோஷன் காட்சிகள். ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா ஓவர்ரேட்டட். நயன்தாராவும் தான்.

“வெத்தலைய போட்டேண்டி” பாட்டில் தான் படத்தின் இருக்கம் குறைகிறது. விஷ்ணுவர்த்தனிடம் பட்டியலில் இருந்த முதிர்ச்சி தெரியவில்லை. திரைக்கதை என்பதே non-existentஆக இருப்பது வருத்தம் தான்.

(ஸ்லோ)மோஷன் ஸிக்னஸ்.

ஜலதோஷம், தமிழ் மென்பொருள் மற்றும் பழனி
இந்த வாரம் ரொம்பவும் பேசப்பட்ட க்ளிஷே, “If america sneezes, asia catches cold”. இதையே பலரும் பேசிப்பேசி,  ”அமெரிக்காவுக்கு தும்பல் வந்தா , எங்க வீட்டு பசு மாட்டுக்கு ஜலதோஷம் பிடிச்சுகிறது” என்று எருமபுடிச்சான் பட்டி வரை எதிரொளித்தது. விஞ்ஞான முறைப்படி, தும்பலினால் ஜலதோஷம் பரவுவது மூன்று நான்கடி வர தான். இந்த coldக்கு காரணம் ஆயிரமாயிரமாய் ஆளாளுக்கு பங்கு மார்க்கெட்டில் கொட்டிய துட்டு.

அமெரிக்காவின் சகாப்பதம் இந்த ரிசஷனோடு முடிந்தது என்றெல்லாம் எழுதுகிறவர்கள் டீ குடிக்க போய்விட்டார்கள். இந்த ரிசஷன் பயத்தினால் வீழ்ந்த உலக ஸ்டாக் மார்கெட்டுகள், அமெரிக்காவின் பிஸினஸ் உலக தாக்கத்தை மீண்டும் உணர்த்தியது. ஒரு பத்து வருடத்திற்கு முன்பு, தனித்திருந்த இந்தியாவின் பங்கு மார்க்கெட்டும், உலகளவில் உயர்ந்து, தற்போது தான் அமெரிக்காவின் பங்கு மார்கெட்டின் மேல் சாய்ந்து இன்னும் அதிகமாக அதைச் சார்ந்து இருக்கிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் அமெரிக்காவில், கிட்டத்தட்ட பத்து வருடத்திற்கு இரண்டு என்று இது வரை எட்டு ரிசஷன்கள் வந்திருக்கின்றன. எல்லா ரிசஷனும் ஆரம்பிக்கும் போது, “This is the worst recession ever”, என்று ரிப்போர்ட் செய்திருக்கிறார்கள். இது ஒரு வழக்கமான பிஸினஸ் சைக்கிள் தான். நியுட்டனின் முன்றாம் விதிக்கு, பங்கு மார்க்கெட் ஒன்றும் விதிவிலக்கல்ல என்று மறுபடி மறுபடி நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரிசஷன் என்பது நீண்டு கொண்டே இருப்பதல்ல. ஒரு வருடத்திற்கு மேல் நீண்ட ரிசஷன்கள் வெகுச்சில.

ஆனால் இந்த முறை தான் இந்தியாவைப் பற்றி அமெரிக்காவில் அதிகம் பேசுகிறார்கள். நேற்று நடந்த ரிபப்ளிகன் ஜனாதிபதி விவாதத்தில் கூட, சைனா இந்தியா என்று சேர்த்துச் சேர்த்து பேசினார்கள். ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு இது சாத்தியமில்லை. இது ஒரு பெருமையாய் இருக்கும் பட்சத்தில், இதற்கு கொடுக்கும் விலை, நமது பங்கு மார்க்கெட் அமெரிக்க மார்க்கெட்டின் மேல் சார்ந்திருக்கும் நிலைமை.

இந்த முறை வந்திருக்கும் அல்லது (சிலரைப் பொருத்தவரை) வந்து கொண்டிருக்கக்ககூடியது ரிசஷன் தான். இதற்கு முந்தைய அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமேன் சொன்ன விதிமுறை, “It’s a recession when your neighbor loses his job. It’s a depression when you lose your own”.

சமீபத்தில் தான், புதிதாய் வாங்கிய மாக்கிண்டாஷில், dual bootஆக மாற்றி, விண்டோஸை நிறுவினேன்.மாக்கிண்டாஷில் அதன் ஆப்பரேடிங் ஸிஸ்டத்தின் கூடவே வருகிறது தமிழ் எழுத்துரு – தமிழில் எழுத உதவும் சாஃப்ட்வேர்.

விண்டோஸில் வழக்கமாக ஈ-கலப்பை வைத்து தமிழில் எழுதி வந்திருந்தேன். நியு ஹொரைசன் மிடியாவில், NHM Writer  என்கிற தமிழில் எழுத உதவும் மென்பொருளை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.

அதை பயன்படுத்தி பார்த்த போது, அது தமிழில் எழுத உதவுவதோடு மட்டும் இல்லாமல், விண்டோஸ் கணினியின் மூலம் இணையத்தில் தமிழை சரியாக படிக்கும் படி அதை configureம்  செய்கிறது.

இதுவரை தங்கள் கணினியில் தமிழ் படித்து/உள்ளிட முடியாதவர்கள் பயன்படுத்தலாம்.

கமர்ஷியல் பஞ்சாமிர்தம் என்று உப தலைப்புடன், பழனி என்கிற படம் வந்திருக்கிறது. ‘அதிரடி கமர்ஷியல்’ (என்றால் என்ன?) இயக்குனர் பேரரசின் படம்.

இதைப்போல முடிவெடுத்து மசாலா படமெடுக்கும் தயாரிப்பாளர்கள், கவலைப்படாமல், ஸ்ரீகாந்த் தேவாவை பயன்படுத்தலாம். கொடுத்த பைசாவுக்கு கன்னாபின்னாவென்று மசாலா மெட்டிசைக்கிறார். டிவி பேட்டியில் கள்ளமில்லாமல் பேசுகிறார், சிரிக்கிறார். பழனியின் பாடல்கள், சிவகாசி படத்தின் பாடல்களைப் போல பிடித்து விட்டது.

கல்லூரி
பாலாஜி சக்திவேலின் கல்லூரி பிடித்திருந்தது. அதன் நடிக்காத நடிக கண்மணிகளும், தெளிவான திரைக்கதையும், ஜோஷ்வா ஸ்ரீதரின் உருத்தாத பிண்ணனி இசையும், செழியனின் காமிராவும் தான் பலம்.

கடந்த பத்து வருடங்களில் கல்லூரியில் படித்திருக்கும் யாரும் தன்னையும் தன் நண்பர்களையும் மீண்டும் நினைவு கொள்ளலாம். உண்மைக்கு வெகு அருகில் படம் எடுப்பது தான் தன்னுடைய ஸ்டைல் என்று மீண்டும் நினைவுபடுத்துகிறார் பாலாஜி. போன படமான காதலைப் போலவே க்ளைமாக்ஸ் மனதில் நிற்கவில்லை என்றாலும், படத்தை முடிக்க எடுக்கப்பட்ட டிராமாடிக் நீட் முடிவு தான் என்றாலும், போய்ச் சேரும் இடத்தை விட அந்த பயணம் தான் முக்கியமாதலால், யாவும் நலம்.

சொசைட்டிக்கு பயந்து நடக்கும் அந்த கயல்விழியும், மைனர் செயினோடு காலேஜுக்கு வந்து, தாத்தாவின் ‘மேலுக்கு முடியாததால்’ பாதி வழியில் திருமணம் செய்து கொள்ளும் காமாட்சி பையனும், தமன்னாவும், அத்லெட்டிக்காக வரும், தமிழ் சினிமாவின் ஹீரோ தோற்றம் கொஞ்சமும் ஒத்து வராத அந்த ஹிரோவும் கொஞ்ச நாளைக்கு மனதில் நிற்பார்கள்.

தமிழ் சினிமாவில் வரும் யாருக்கும் படத்தில் பார்ட் இல்லாததால் கோடம்பாக்க யூனியன்கள் பாலாஜியின் மேல் கோவவித்துக் கொண்டிருக்கலாம். ஷங்கர் தயாரித்த படம் என்றார்கள். ஏவிஎம்மையும் சிவாஜியையும் நினத்து சிரிப்பு வந்தது. சரியா இது தவறா என்ற பாட்டில் மழையில் நம்மை நனைத்ததற்காக ஜோஷ்வா, செழியன், பாலாஜிக்கு யதார்த்த நன்றிகள்.

ஹாலிவுட் நகரங்கள்
நியூயார்க் ஒரு self-indulgent நகரம். சென்டர் ஆப் தி யூனிவர்ஸ். நம்மூர் பம்பாயைப் போல. அதாவது, பம்பாயே ஒரு உலகம் போல, அதனைப் பற்றி பேசுவதற்காகவே ஆழேழு சானல்கள், அரை டஜன் செய்திப்பத்திரிக்கைகள், தினமும் பலப்பல குற்றங்கள், குவியும் மக்கள் கூட்டம் என்று தன்னைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும் நகராதி நகரம். தப்பல்ல. இந்த நகரங்களுக்குள் அடங்கி இருக்கும் self-sustaining ecological system  போன்றோரு அமைப்புத் தான் இந்த ‘தன்னைச் சுற்றித் தான் உலகம்’ என்ற மாயைக்கு காரணம்.

நியூயார்க்கில் எல்லாம் கிடைக்கும். அதாவது எல்லாம் எல்லாம். என்ன எல்லாமே அங்கே கொஞ்சம் அவசரம். வேலையிலிருந்து சாப்பாடு, தூக்கம், வாழ்க்கை என்று எல்லாவற்றிலுமே அவசரம்.  நியூயார்க் பல மில்லியன் வாழ்கைகளை உண்டாக்கியிருக்கிறது. வந்தவர்களுக்கெல்லாம் வாழ உதவியிருக்கிறது. காட்ஃபாதர் இரண்டில் வந்திரங்கும் அந்த சிறுவனை காட்ஃபாதர் ஆக்குவதிலிருந்து, வால் ஸ்ட்ரீட் analystsவரை எல்லோரும் வந்து சேரும் இடம். இதன் அத்தனை குணங்களும் பம்பாய்க்கும், டோக்கியோவுக்கும், பாரிஸுக்கும், லண்டனுக்கும் ஏன் லாஸ் ஏஞ்சல்ஸுக்கும் உண்டு.

ஆனால் நியூயார்க் மக்களை விட நியூயார்க்கை ரொம்ப பிடித்திருப்பது ஹாலிவுட்காரர்களுக்குத் தான். இதற்கு காரணங்கள் பல. முழுமையான காரணம், நியூயார்க்கும் அதன் சுதந்திர தேவியின் சிலையும் தான்,  அமெரிக்காவின் முதல் அடையாளம். அதன் முகம். எல்லா மொழிப் படங்களிலும் அமெரிக்காவை காட்டும் போது முதலில் இறங்கும் ப்ளேனையும், சுதந்திரதேவி சிலையின் ஹெலிகாப்டர் க்ளோஸப்பும் பின்பு, எஸ்கலேட்டரில் ஹீரோ சன்க்ளாஸுடன் இறங்கும் காட்சியும் நிச்சயம்.

இன்னும் ஒரு மாதத்தில் ரிலிஸாகவிருக்கும் இரண்டு ஹாலிவுட் படங்களில் நியூயார்க்கில் சண்டை நடக்கிறது. ஒன்றில் ப்ரூக்ளின் ப்ரிட்ஜ் உடைகிறது. மற்றொன்றில் சுதந்திர தேவியின் தலை உருளுகிறது. எவ்வளவு முறை இதைப் போல டிஸ்ஸாஸ்டர் படம் வந்தாலும், மீண்டும் அதையே செய்கிறார்கள். தாலி சென்டிமெண்ட் போல, நியூயார்க் சென்டிமெண்ட்.

I am Legend என்னும் வில் ஸ்மித்தின்[Will Smith] சயின்ஸ் பிக்-ஷன் படத்தில், நியூயார்க்கில் ஒருவரும் இல்லை, வில் ஸ்மிதையும் அவருடைய நாயையும் தவிர. முதலில் புத்தகமாக வந்த இந்தக் கதை இது வரை நான்கு முறை திரைப்படமாக்கப்பட்டுள்ளது. வில் ஸ்மித்தை Global Movie Machine  என்கிறார்கள். உங்கள் ஊருக்கு படம் வந்தால், யாரும் சொல்லாமலேயே கண்டிப்பாய் பார்ப்பீர்கள்.

Cloverfield என்னும் படத்தில் ஐந்து நியூயார்க் இளைஞ/இளைஞிகள் தங்கள் நண்பர்களுக்கு அளிக்கும் பேர்வெல் பார்ட்டியின் நடுவில் ஒரு பல மாடிக் கட்டிடம் உடைந்து விழுகிறது. பிறகு சில கிராதகர்கள் வருகிறார்கள். இந்த படத்தின் தயாரிப்பாளர், Lost என்னும் பரபரப்பு சீரியலின் எழுத்தாளர் ஜெ.ஜெ. அப்ராம்ஸ். கதையை மூச்சு விடாமல் இருக்கிறார். பார்க்கலாம்.

லாஸ் ஏஞ்சல்ஸும் எக்கச்சக்க ஹாலிவிட் படங்களில் வந்து விட்டது. எல்.ஏ(LA)வில் தான் ஹாலிவுட் இருக்கிறது. அதைத் தவிர அங்கு இருக்கும் எல்லா ஊர் மக்களும், பல நாட்டவர் வந்து போகும் இடமாதலாலும் நீங்கள் எந்த மொழிப் படத்தை வேண்டுமானாலும் இங்கு எடுக்கலாம்.

சியாட்டல் ரொம்ப சாதுவான நகரம். அதிகமான படங்களில் இடம் பிடிப்பதில்லை. மழையில் எடுக்கப்படும் திகில் படமாக(Ring) இருந்தால், அல்லது ஏதாவது ரொமாண்டிக் படமாக(Sleepless in Seattle) இருந்தால் மட்டுமே சியாட்டலுக்கு வருகிறார்கள். கடைசியாக இங்கு எடுத்த படம் ஒரு சரியான மொக்கைப் படம்.